Home » Articles » விடியல்

 
விடியல்


சுரேஸ் இளையராஜா
Author:

கரைதொடும்
அலைகளின் தொடரியக்க
பதிவுகளாய்-
மீள உயிர் பெறும்

கிளைகளின் துளிர்களாய்,
முயல்வதொவ்வொன்றும்
உயர்வதுண்டு உயரத்தில்,
ஏறிவிட
ஏணிகள் இல்லை
சுலபத்தில் அடைவது
இலக்குகள் இல்லை.
வாழ்வதன்
பாகத்தில்
ரணங்களே
இன்ப ரீங்காரம்
சுமைகளே
சுகங்களாய் உருமாற்றம்
ஆகிவிடும்
தருணங்கள் ஆவதில்லை
தருணங்களை
நீ ஆக்கு.
உன்
திசை சிறை
உடைத்து
வானம் நெய்து
மேகம் தீட்டு.
தவறுகளின்
கணக்குகள் பரப்பி
நிறைகளை நிரப்பு.
சுயத்தின்
வெற்றிடங்களோடு
முற்று புள்ளிகள்
உடை,
சருகிலிருந்து நெருப்பாய்
பரிமணித்துப் போ!
பிறகு
உன் பயணத்தின் விருப்ப திசைகளில்
விரும்பி உதிக்கும்
கிழக்கு!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்