Home » Articles » மனதின்மொழி

 
மனதின்மொழி


யோகதா ப
Author:

எண்ணம்

‘எண்ணம் இல்லையேல் மனித குலமே இல்லை’.

‘நம் வாழ்வை வழி நடத்தும் ஆசான் நம் எண்ணங்களே’.

‘உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்’.

-மகரிஷி

எண்ணங்கள் பற்றி ஆராய்ந்தால் மிகவும் ஆர்வமாக இருக்கும். எண்ணங்கள் என்பது நம் வினைப் பதிவுகளின் தொகுப்பு எனலாம். மேலும் விநாடிக்கு விநாடி எண்ணங்கள் மாறுதல் பெறும். எண்ணங்களுக்கு எண்ணிக்கை இல்லை, எண்ணங்களைப் பற்றிய தெளிவை முன்பே பெற்றிருப்பீர்கள். எனவே எண்ணங்களை நல்லதாக, நேர்மறையாக தனக்கும் பிறர்க்கும் கெடுதல் இல்லாத வகையில் அமைவதாக இருக்க வேண்டும். மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது எண்ணங்கள் எந்த அளவு உறுதியாக இருக்கிறதோ அதே அளவு அந்த எண்ணமானது வடிவம் பெறும். இதைத்தான் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்” என்று.

சரி. எந்த ஒரு செயலுமே எண்ணத்தின் அடிப்படையில் தான் தோன்றுகிறது என்பதை அறிவோம். இருப்பினும் நாம் எண்ணங்களை தவறான முறையில், பயிற்சி இல்லாமல் வரைமுறையற்ற தேவையற்று எண்ணுகிறோம். பொதுவாக நம் அனைவருக்குமே தோன்றும் எண்ணமானது முன்னேற்றத்தை நோக்கி இல்லாது மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களையே அசை போடுகின்றது.

பழக்கம் – எண்ணம். பழக்கத்தின் அடிப்படையில் வாழப் பழகி விட்ட மனிதர்களுக்கு எண்ணத்தின் அடிப்படையில் வாழும் மனிதர்களை பிடிக்காது. பல சமயங்களில் எது புதிதாகவும் வித்தியாசமாகவும் நமக்கு தோன்றுகிறதோ அது பெரும்பாலும் ஆபத்தையே விளைவிக்கும். எனவே யார் ஒருவர் தன் மனநிலையை இப்படித்தான் வாழ்வேன் எனவும், சுய சிந்தனையின் வழியே செயல்படுவேன் எனவும் முடிவு செய்துவிட்டால், எந்த ஒரு கஷ்டமோ, துன்பமோ நேர்ந்தாலும் அதை தகர்த்து எரியும் எண்ணம் எழும் (நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் கஷ்டம், பிறர் நமக்கு ஏற்படுத்தும் கஷ்டம்) ஆகிய இரண்டையும் சமாளிக்கும் அளவு மனம் பக்குவம் பெற்று விடும். யாரையும் யாராலும் மாற்ற இயலாது. மாற்றம் தேவையெனில் தானாகவே எழுவது தான் சாத்தியம். ஏனெனில் நம் மனமானது எப்பொழுதுமே நாம் செய்வதை சரி எனவே கூறும். அது தவறாகினும் மற்றவர்கள் அவர்களின் எண்ணங்களை திணிக்க முற்படும்போது தான் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. பொதுவாக நம்மில் பலருக்கு மற்றவர்கள் நமக்கு அறிவுரை கூறுவது பிடிப்பதில்லை. இதற்கு காரணம் நம் பெற்றோர்கள். நாம் வளர்த்து விட்டாலும் கூட அவர்களுக்கு நம் மீது உள்ள பாசம், அக்கறை ஆகியவற்றாலும் அவர்கள் கூறுவது நம் நல்லதுக்கு என்பதாலும் நம்மை அவர்கள் சொல்லின் கட்டுப்பாட்டில் வைக்க ஆசைப்படுகின்றனர். அடுத்த நண்பர்கள் நம் நலம் விரும்பும் சிலர் பல சமயங்களில் நமக்கு எதிராகவே செயல்படுவர், இங்கு தான் முதல் கட்ட அனுசரிப்பது ஆரம்பம் ஆகிறது. இருப்பின் ஒரு பத்து பேர் கூடிய குழுவில் எப்பொழுதுமே ஒரு தலைவர் பொறுப்பு ஒருவருக்கு கட்டாயம் இருக்கும். சிறந்த தலைமைப் பண்பு (leadership) உள்ளவர்களே மற்றவர்களைச் சரியான முறையில் வழி நடத்த முடியும். தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள விரும்பினால் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

 • எப்பொழுதுமே சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
 • கற்றது பத்தாது மேலும் புதிது புதிதாக கற்க முயற்சிக்க வேண்டும்.
 • காலம் தவறாமல் நடத்தல் வேண்டும்.
 • நல்ல பழக்கங்கள், நல்ல எண்ணங்கள், நல்ல பேச்சுக்கள் நிறைந்திருக்க வேண்டும்.
 • நேரத்தை உபயோகமான முறையில் பயன்படுத்தும் கலையை அறிந்திருக்க வேண்டும்.
 • பெரியவர்களை மதித்தல், அவர் சொல்லை மீறாது செயல்படுத்த வேண்டும்.
 • இன்முகமும் இன்சொல்லும் அழகு சேர்க்கும் விதமாக நடத்தல் வேண்டும்.
 • மற்றவர்கள் நம்மிடம் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கும் விதமாக வாழ்க்கையை வாழ வேண்டும்

தலைமைப் பண்பைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் இப்பொழுது கட்டுரையின் தலைப்பை தொடர்ந்து பார்க்காம். எதிர்ப்புகள் பற்றி ஆராய்வோம். (opposition):

இரண்டு வகை

அக எதிர்ப்பு (inside opposition)

புற எதிர்ப்பு( outside opposition)

புற எதிர்ப்பைக் கூட சமாளித்துவிடலாம். அக எதிர்ப்பை சமாளிப்பது மிகவும் கடினம்.

அகத்தை அடக்க வேண்டாமே, அறிந்து கொள்ளலாமே. அகம் என்பது கடிவாளம் பூட்டிய குதிரையைப் போன்றது. அகத்தை நம் வசம் செய்வது அவரவர் திறைமைப் பொறுத்ததே. அகத்தை நாம் எப்படி நடத்துகிறோமோ அதேபோல் அகமானது நம்மை நடத்தும். அன்புக் கட்டளைகளை அகம் ஏற்கும். அகத்திற்கு இது நல்லது இது கெட்டது என்பதுப அறியாது. எதைச் சொன்னாலும் கேட்கும் தன்மை உடையது. அடிக்கடி கூறப்படும் செய்திகளை உடனே செயல்படுத்தும தன்மை வாய்ந்தது. அகத்தை உணர்ச்சிகளால் வென்று விடலாம். எனவே உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகி கொள்வது நல்லது. நம்மை நாம் சில பயிற்சிகளை செய்து மென்மேலும் சீர்படுத்திக் கொள்வது அவசியமாகிறது.

 • நம்மை நாமே நேசித்தல்
 • நம்மை நாமே அறிதல்
 • நம்மை நாமே வழிநடத்துதல்.

எப்பொழுது நம்மை நாம் நேசிக்க ஆரம்பிக்கிறோமோ அப்பொழுது நம்மை பிறர் நேசிக்க ஆரம்பித்துவிடுவர். சுய மரியாதை ஒருவருக்கு மிகவும் அவசியம். நம்மை நாமே தாழ்வாக எண்ணினால் பிறர் நம்மை மிகவும் தாழ்வாக எண்ணுவர்.


Share
 

1 Comment

 1. cg.balaji says:

  good. i like this .

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்