Home » Articles » விடைத்தாள்கள் மதிப்பீடு

 
விடைத்தாள்கள் மதிப்பீடு


இரத்தினசாமி ஆ
Author:

அனைத்து தேர்வுகளையும் சிறப்பாக எழுதிய மனோ நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். எத்தனை மதிப்பெண்கள் ஒவ்வொரு தாளுக்கும் சுமாராக கிடைக்கும் என்பதை, கேள்விதாள்களை வைத்துக் கொண்டு இப்போது மதிப்பீடு செய்யுங்கள். அடேடே. இந்தக் கேள்விக்கான விடையை மாற்றி எழுதிவிட்டேனே.

நன்கு தெரிந்த சரியான விடைக்கு பதிலாக வேறு விடையை எழுதிவிட்டேனே’ என்று பலம்பும் வகையில் நீங்கள் செய்த ஓரிரு தவறுகள் வெளிச்சத்திற்கு வரும். சரியாக கேள்வியை புரிந்து கொள்ளாத பதற்றப்படுகின்ற, அவசரப்படுகின்றவர்களுக்குதான் இத்தவறுகள் நடக்கும். தேர்வு எழுதிய அன்றே நீங்கள் விடையை சரிபார்த்து, இத்தவறுகள் தெரிந்திருந்தால், அதுவும் விரிவான விடையில் அது நடந்திருந்தால்…. ‘அய்யோ போச்சே பத்துமார்க்கு. நல்லா தெரிஞ்சிருந்தும் தவறாக எழுதிவிட்டோமே’ என்ற புலம்பலால், மனவேதனையால் அடுத்த தேர்வுகளுக்காகன சிறப்பான தயாரிப்புகள் இதனால் பாதிபடையும்.

மதிப்பீட்டு மையங்களில் உங்களின் விடைத்தாள்கள்

நீங்கள் எழுதிய விடைத்தாள்கள் மாற்று பதிவு எண் (Dummy Number) தரப்பட்டு ஆசிரியர்களால் மதிப்பீடு செய்ய மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உங்களுக்கு அளிக்கப்பட்ட பதிவு எண்ணுக்கு நிகரான மாற்றுப்பதிவு எண் மிக, மிக இரகசியமாக வைக்கப்படும். மதிப்பீட்டாளருக்கு அவை தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு தாளுக்கும் ஒவ்வொரு மாற்று பதிவு எண் தரப்படும். ஒரு ஊரில் எழுதப்பட்ட விடைத்தாள்கள் வேறு ஊரில் திருத்தப்படும்.

மதிப்பீடு செய்யும் ஆசிரியர் மனோநிலை

‘என்ன இன்னுமா Tiffin ரெடியாகலே. எனக்கு நேரமாச்சு’, ‘ஆச்சுங்க. இன்னும் ஐந்தே நிமிசம்தான்’. ஐந்து நிமிடம் பத்தாக, பத்து பதினைந்தாக…. ‘எனக்கு டிப்பனும் வேண்டா ஒரு மண்ணும் வேண்டா’ என்று மனைவிமேல் தன் கோபக்கணைகளைச் செலுத்திவிட்டு பேருந்தைப் பிடிக்க பறக்கிறார் உங்கள் மதிப்பீட்டாளர்.

வழக்கமாக பேருந்தை தவறவிடுகிறார்.

அரைமணி நேரம் தாமதமாக திருத்துமிடம் வருகிறார். அதனால் முகாம் அதிகாரியிடமிருந்து திட்டுக்களைப் பெற்று மன அழுத்தத்துடன், கோபத்துடன் தனது திருத்துமிடம் வந்து அமர்கிறார். மேஜை மீது அவர் திருத்த வேண்டிய வினாத்தாள் கட்டு. ஒவ்வொரு மாணவரும் 30 அல்லது 35 பக்கங்கள் எழுதியுள்ள பெரிய கட்டு. இதோ அதில்தான் உங்களின் ஒரு விடைத்தாள் உள்ளது. வீட்டில் மனைவியுடன் கோபப்பட்டு Tiffinஐ miss பண்ணி, வழக்கமாக செல்லும் Bus ஐ miss பண்ணி, முகாம் அதிகாரியிடம் குட்டுப்பட்டு, கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்.

மோசமான கையெழுத்து, தெளிவற்ற விடைகள், அடித்தல் திருத்தல்கள்

முதலில் திருத்த வேண்டிய விடைத்தாளை எடுக்கிறார் மதிப்பீட்டாளர். முதல் பக்கத்தை புரட்டுகிறார்.

கம்பளிப்பூச்சி போல் கையெழுத்து அடித்தல், திருத்தல்கள்… ஒருமுறைக்கு இருமுறை, பல முறை படித்துப்பார்க்கிறார். புரியாத கையெழுத்து, தெளிவில்லாத விடைகள் லென்ஸ் வைத்துப் பார்த்தால்தான் தெரியுமளவுக்கு சிறிய படங்கள். வண்ண அடிக்கோடுகள் சிறிதும் இல்லை. கேள்வி எண்களும் சரியாயில்லை.

எப்படி இருக்கும் அவருக்கு? அவருடைய கோபமும், மன அழுத்தமும் அதிகமாகிறது.

‘என்னதா எழுதியிருக்கானே புரியலையே. இதுலே அடித்தல், திருத்தல் வேற… minimum mark தான் போடணும்’ என்று முடிவுக்கு வருகிறார். Just Pass Mark பெறுகிறது. அவ்விடைத்தாள். அம்மாணவன் எதிர்பார்த்ததற்கு குறைவாகவே மதிப்பெண் பெறுகிறது அவ்விடைத்தாள்.

அழகான கையெழுத்து, தெளிவான, சுருக்கமான விடைகள்

முதலில் திருத்த வேண்டிய விடைத்தாள் அழகான கையெழுத்துடன், தெளிவான சுருக்கமான விடைகளைக் கொண்டுள்ளது. படங்கள் நன்கு பெரிதாக வரையப்பட்டு பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. முக்கியமான வரிகள் வண்ணமையினால் அடிக்கோடுகள் இடப்பட்டுள்ளன.

மதிப்பீட்டாளரின் மனவருத்தமெல்லாம் மறைந்து போகிறது. ‘மிகச்சிறப்பாக விடையளிக்கப்பட்டது’ என முதல் கேள்விக்கே முழு மதிப்பெண்கள் அளிக்கப்ப்டுகிறது.

பகுதி ‘அ’க்கான சரியான விடையை தேர்ந்தெடுத்தலில் கேள்வி எண், அதற்கான விடைக்கான a, b, c, dல் ஒரு எழுத்து, சரியான விடை.

மதிப்பீட்டாளர் தேடும் முக்கியமான points வண்ணக்கோடுகளால் அடிக்கோடுகள் இடப்பட்டுள்ளன.

‘மிக சரி, மிக சரி..’ என்ற அகமகிழ்ந்து முழுமதிப்பெண்கள் போடுகிறார்.

“First impression is the best impression”. நன்கு விடை தெரிந்த, நன்கு முன்னரே பள்ளித் தேர்வுகளில் எழுதிப்பார்த்த விடையைத்தானே விரிவான விடையில் முதலில் எழுதினீர்கள்.

‘நீங்கள் எப்படிப்பட்டவர்’ என்பதை அம் முதல் விடை மூலம் அடையாளம் காட்டினீர்கள். மதிப்பீட்டாளரும் அவ்விடைத்தாள் எப்படியிருக்கும் என்பதை அகமதிப்பீடு செய்துவிட்டார்.

அடுத்த விரிவான பதிலிலும் அசத்திவிட்டீர்கள். மதிப்பெண்களை அள்ளிப் போடுகிறார்.

சற்றே குழப்பமான விடையில் சிறுதவறுகள் செய்கிறீர்கள். இருந்தாலும் முன் விடைகளில் நீங்கள் பெற்ற உயர் மதிப்பெண்கள் ‘சிறிய தவறுதான். அவசரத்தில் விட்டுவிட்டான்’ என்று அதற்கும் நல்ல மதிப்பெண்கள் போடுகிறார் மதிப்பீட்டாளர்.

நீங்கள் எதிர்பார்த்ததற்கு சற்று அதிகமாகவே உங்களுடைய மதிப்பெண்கள்.

ஒன்றை மற்றும் நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

எந்த மதிப்பீட்டாளரும் வேண்டுமென்றே மதிப்பெண்களை குறைத்துப் போடமாட்டார். மதிப்பீட்டாளரை ஏமாற்றவேண்டும்’ என்ற எண்ணத்தில் குழம்புகின்ற மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெறுவர்.

அத்தனை விடைகளையும் வரிவரியாக படித்துத்தான் திருத்துவார்கள். (மொழிப் பாடங்கள் தவிர) என்று எண்ணாதீர்கள். அது முடியாத ஒன்று. ஆனால் அனுபவத்தால் மதிப்பீட்டாளர்களுக்கு பக்கத்திற்கு சில வரிகளை படித்தாலே சரியான விடையா என்று தெரிந்து விடும். அத்தகைய முக்கிய வரிகளைத்தான் வண்ண மையால் அடிக்கோடுகள் இட வேண்டும். அவை கண்களுக்கு குளுமை தரும். அதை செய்யும்போது அவரது வேலை எளிதாகிறது. உங்கள் மதிப்பெண்கள் கூடுகின்றன.

தேர்வுகள் இனி தேர்ச்சிகளே

எனது இளம் நண்பர்களே! 14 தொடர்களில் நீங்கள் படித்ததை பயிற்சியாக்குங்கள். பயிற்சியை வழக்கமாக்குங்கள். தேர்வுகளை இனிமையான அனுபவமாக்குங்கள். ஆவலோடு எதிர்கொள்ளுங்கள். ஆசிரியர்கள் மேல் அன்பு வையுங்கள். அதனால் அவரது பாட வகுப்புகள் பாடங்கள் எளிதாகும். தேர்வுகள் அனைத்தும் தேர்ச்சிகளாகும் என்பதில் ஐயமில்லையே.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2008

வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!
விடைத்தாள்கள் மதிப்பீடு
மனிதா, மனிதா!
வாராய், நீ வாராய்!
துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!
சீனியர் சிட்டிசன்
நாவடக்கம் ஒரு நாகரிகம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
உள்ளத்தோடு உள்ளம்
விடியல்
சிந்தனைத் துளி
பயிலரங்கச் செய்தி
முயன்றால் முடியும்!
நல்ல தூக்கம் வேண்டுமா?
ஆமையும், முயலும்
மனதின்மொழி
உங்கள் கவனத்திற்கு…
ஜீன் தெரப்பி மூலம் காது கேட்கும் தன்மையை மீண்டும் கொண்டு வரமுடியும்
நிறுவனர் நினைவுகள்
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
கேள்வி-பதில்