Home » Articles » இதயம் சொல்லும் நன்றி!

 
இதயம் சொல்லும் நன்றி!


செயந்தி இரா
Author:

நன்றி மறப்பது நன்றன்று என்பது உலகப் பொதுமறை. குறிப்பாக சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள் தம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவிப்பது அவர்களுக்கு மேலும் சிறப்பூட்டும். ஒருவர் செய்த உதவியைப் பின்னர் அறிந்து காலங்கடந்து நன்றி சொல்வதும் அவரது பெருமைக்கு ஏற்றம் அளிக்கும். இப்படியான காலங்கடந்து சொல்லப்பட்ட நன்றியைப் பற்றிய சம்பவம் ஒன்றை அண்மையில் படிக்க நேர்ந்தது.

அவர் பெயர் சார்லஸ் ப்ளம்ப் (Charles Plump) அமெரிக்க ராணுவத்தில் போர் விமானியாக இருந்தார். உலகத்தையே உலுக்கிய வியட்நாம் போரில் பல சாகசங்கள் நிகழ்த்தி எதிரி முகாம்களைப் பலமுறை வெற்றிகரமாக முறியடித்தவர். கடைசியில் அவரது போர்விமானம் சுட்டு வீழ்த்தப்படவே பாரசூட் மூலம் உயிர் தப்பி தரையிறங்கினார். ஆனால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளானார் போர் முடிந்து விடுதலை செய்யப்பட்ட சார்லஸ் தாயகம் திரும்பினார். அவரது சேவையைப் பாராட்டி அரசாங்கம் பல விருதுகளை அளித்துப் பெருமைப்படுத்தியது.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தமது போர் அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டு மனவலுவூட்டும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஒருநாள் சிற்றுண்டி விடுதயில் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அது சமயம் பக்கத்து இருக்கையில் இருந்த ஒருவர் அவரை நெருங்கி நீங்கள் தானே கேப்டன் சார்லஸ். வியட்நாம் போரில் விந்தைகள் புரிந்த வித்தகர். உங்கள் வமானம் கூட சுடப்பட்டது. நீங்கள் பாராசூட் மூலம் உயிர் தப்பி பிழைத்தீர்கள். நான் சொன்னவை சரிதானே?” என்று இடைவெளியின்றி பேசி முடித்தார்.

தன்னைப்பற்றிய இத்தனை தெளிவான விவரங்களைக் கூறிய அவரை ஆச்சரியத்துடன் நோக்கினார், ப்ளம்ப்!

“நானேதான் அவர். ஆனால் நீங்கள் யார் என்று தெரியவில்லையே” என்றார் சார்லஸ். அந்த மனிதரோ, வெற்றியின் சின்னமாகத் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி “எனது ஊகம் சரியானதே! அன்றைய தினம் நீங்கள் விமானத்தில் பறப்பதற்கு முன் உங்கள் பாராசூட்டை சிக்கின்றி சுற்றித் தயார் நிலையில் வைத்தவன் நான்தான்” என்று பெருமைபடச் சொன்னார். சார்லஸோ ஆச்சரியத்தில் உறைந்து போனார். போர் விமானிகளுக்கு ஆபத்துக்காலத்தில் உதவும் பாராசூட் சிக்கலின்றி இருந்தால்தான் சரியாகத் தரை இறங்க முடியும். அப்படியொரு சிறந்த பணியைச் செய்த அந்த மனிதரை சார்லஸ் தனது பணிக்காலத்தில் பார்க்க சந்தர்ப்பம் இல்லை. அவர் எங்காவது கப்பலின் அடித்தளத்தில் தனது பணியில் ஈடுபட்டிருப்பார். தப்பித்தவறி அவரைப் பார்க்க நேர்ந்தபோது கூட சார்லஸ் அவருக்கு முகமன் கூறியது இல்லை. பத்திரமாகத் தரையிறங்க பாராசூட் தயார் செய்த மனிதனே தன் எதிரில் நிற்கும்போது சார்லஸின் உடலில் புல்லரித்தது. விரைந்து எழுந்து அவருடன் கைகுலுக்கினார்.

“ஐயா! உங்களால் தான் நானே இன்று இங்கே இருக்கிறேன்” என்று நா தழுதழுக்கச் சொன்னார். ஆண்டுகள் பல கடந்தும் தனக்கு உதவிய நண்பருக்கு அதுவும் ஒரு சாதாரணக் கப்பல் தொழிலாளியாக இருந்தவருக்கு நன்றி தெரிவித்த போது சார்லஸின் மனநிலை மிகவும் உயர்ந்துவிட்டது.

வாழ்வியல் பற்றி பயிற்சி அளிக்கும் ஒரு மகான் கூறுகிறார், “இயந்திரத்தனமாக நாக்கிலிருந்து உச்சரிக்கப்படுவது அல்ல நன்றி. அது இதயத்திலிருந்து உச்சரிக்கப்படுவதாகும். அவ்விதம் செய்யும்போது கைகள் தாமாகவே குவிந்து வணங்கும்; கண்கள் பனித்திடும்”

எப்படிப்பட்ட உண்மை இது!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2008

மேலே மேலே…..
வேண்டும் வேண்டும் அறிவியல் மனப்பான்மை அவசியம் வேண்டும்!
வேரில் பழுத்த பலா
திறந்த உள்ளம்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
சுதந்திர சிந்தனை
2008ல்….
மகிழ்ந்து குலாவிய மாமனிதர்
தேர்வு அரங்கில் நீங்கள்
ஊனமுற்றோர் வாழ்வின் முன்னேற்றப்பாதையில்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் தத்துவம்
உள்ளத்தோடு உள்ளம்
இது வேண்டாம் இது வேண்டும்
வணக்கம்… புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….!
கேள்வி – பதில்
எல்லாமுமே முடியும்
உடல் நலம் பேணுவோம்
மனித தோற்றத்தை விளக்கும்
விவேகானந்தர் சிந்தனை
சிந்தனைத்துளி
திருப்பம் வெற்றியின் விருப்பம்
புற்று நோயைக் குணப்படுத்த வல்ல
இதயம் சொல்லும் நன்றி!
தேசிய இளைஞர் தின சிந்தனைகள்
தன்னார்வத் தொண்டாற்ற தமிழர் திருநாளில் சூளுரைப்போம்!
தியானிப்போம்! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
சாதிப்புகளே சந்திப்புகளாகட்டும்