Home » Articles » மனம் மருந்து மனிதநேயம்

 
மனம் மருந்து மனிதநேயம்


தாமரைச்செல்வன் ஆ
Author:

சென்ற இதழ் தொடர்ச்சி…

மனித நேயமிக்க மருத்துவம் தேவைப்படுகிறது. மனிதன் கவலை, பயம், பதட்டம், நோய், வலி, தோல்வி, துக்கம், பிரிவு, விரக்தி, இதனுடன் மகிழ்ச்சி இவைகளுக்காக உணர்வுகளை மறக்கடிக்க குடிக்கிறான். தினமும் குடிக்கிறான். தன்னையும் அழித்து, குடும்பத்தையும் வறுமைக்கு அழைத்து, சமூகத்தையும் சீரழித்து, கடைசியில் நாட்டை குட்டிச் சுவராக்கி மடிகிறான்.

யாருக்கு என்ன பயன்?
உயிருக்கு என்ன மரியாதை?
உயிரின் விலைதான் என்ன?

தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன சொல்கிறார்.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” – குறள்

ஒரு மனிதன் வாழும்போது தன்னுடைய உயிருக்கு மரியாதை தர வேண்டுமானால் அவன் செல்வந்தனாய் இருந்தால் பொதுமக்களுக்கு பொருளை கொடுக்கலாம்.

அறிவாளியாக இருந்தால் அறிவை கொடுக்கலாம். அதுதான் உயிருக்கு நாம் தரும் மரியாதை ஆகும்.

வாதத்திற்கு மருந்துண்டு
பிடிவாதத்திற்கு மருந்துண்டா?

உண்டு என்கிறது ஹோமியோபதி மருத்துவம்.

கோபத்தை குறைக்க, பயத்தை போக்க, படபடப்பை நீக்க, பிரிவால் ஏற்படும் வாட்டத்தை போக்க, தற்கொலை எண்ணத்தை தவிர்க்க, தாழ்வு மனப்பான்மையை முறியடிக்க, தலைக்கனத்தை குறைக்க, சந்தேகத்தை விரட்ட, பொறாமையை பொசுக்க, போர்குணத்தை மாற்றிட, குடிப்பழகத்தை குழிதோண்டி புதைத்திட, காமவெறியை கட்டுப்படுத்த

அனைத்திற்கும் அற்புதமான மருந்து ஹோமியோபதி மருத்துவத்தில் உண்டு என்று ஆணித்தரமாக கூறலாம்.

கண்பார்வை குறைந்தால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். பற்கள் விழுந்தால் பல்செட்டு வைத்துக் கொள்கிறோம். முடி நரைத்தால் சாயம்பூசிக் கொள்கிறோம். நடக்க முடியவில்லை என்றால் ஒரு கைத்தடி வைத்துக்கொள்கிறோம். இவைகளுக்காக நாம் கூச்சப்படுவதில்லை. சிகிச்சை பெறச் செல்வதுமில்லை. தப்பு செய்ய தைரியமுள்ள நமக்கு நாம்தான் அந்த தப்பை செய்தோம் என்று சொல்ல தைரியம் வருவதில்லை. மறைக்கப் பார்க்கிறோம். மனம் கெட்டால் உடல் கெடும் என்று தெரிவதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இதற்கு வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார்.

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்” – குறள்

தற்கால கணினி யுகத்தில் அனைத்தும் அவசரம். சாப்பிட நேரமில்லை. குளிக்க நேரமில்லை. குழந்தையை கொஞ்ச நேரமில்லை. தாய் – தந்தையை பார்க்க நேரமில்லை. தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க நேரமில்லை. கணவன் – மனைவி, மகன்- மகள் ஒரே வீட்டில் இருந்தும் பேச நேரமில்லை. ஆனால் செல்போனில் மட்டுமே பேச நேரம் இருக்கிறது. சாப்பிடும்போது, சாலையில் நடக்கும் போது, வாகனத்தில் பயணிக்கும்போது பேசிக்கொள்கிறோம். ஒவ்வொரு சாலையிலும் போக்குவரத்து துறையினர்.

“Don’t mix drinking while driving
Don’t your cellphone while driving”.

வாகனம் ஓட்டும்போது செல்போன்
அழைத்தால் எடுக்காதீர்கள் அழைப்பது
எமனாகவும் இருக்கலாம்’

என்று அறிவிப்புப் பலகை கண்படும் இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாம் குருடர்களாகவும், செவிடர்களாகவும் இருக்கிறோம்.

‘அவரசரக்கோலம் அள்ளித்தெளி’
‘ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு’

என்ற பழமொழிகளை கேட்டும், படித்தும் இருக்கிறோம். ஆனால் அதற்கு அர்த்தம் புரியாமல் சென்று கொண்டிருக்கிறோம். அந்த பழமொழிகளை புரிந்தாக வேண்டும். முன்னோர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். “மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்” என்ற கருத்தை உணர வேண்டும்.

மருத்துவமனைகளெல்லாம் மனிதநேய மையங்களாக மாற்றப்பட வேண்டும். மருந்துக்கு முன்னால் மனிதநேயம் உணரப்பட வேண்டும். உடல்நோய் சரியான பின் கடன்நோய் தொல்லையால் சீரழியும் நிலை மாற்றப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தும் அளவிற்கு அரசாங்கமும், குறிப்பாக மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த வல்லுனர்களும் மனித நேயத்தோடு மக்களுக்கு உதவிட முன்வர வேண்டும்.

”ஏழையின் சிரிப்பில் இறைவனை காண” அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா வல்லரசு நாடாக மாறும்.


Share
 

1 Comment

  1. md ali says:

    Nice web site to see; but i know that

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு