Home » Articles » 30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு

 
30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு


நம்பிராஜன் M
Author:

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா கேட்டு கொண்டதிற்கிணங்க, தமிழக அரசு நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்டு கார்ப்பரேஷனை நோடல் காரியாலயமாகவும், நே.ஆ. பூங்காவை அந்த திட்டத்தை செயல்படுத்தும் காரியாலயமாகும் நிறுவியது. நிர்வாக இயக்குநர் நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் மற்றும் இணை காரியதரிசி (ஏற்றுமதி) ஜவுளித்துறை அமைச்சகம் மத்திய அரசு ஆகிய இருவரையும் அந்தந்த அரசுகளின் ஒப்புதலுடன் நே.ஆ. பூங்காவின் இயக்குநர்களாக நியமித்தது.


4.7.2003 அன்று பலரும் பங்கேற்க அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு புதிய திருப்பூர் என பெயரிடப்பட்டது.

அடிப்படை வசதிகளுக்கு நிதி

அடிப்படை வசதிகளுக்கான மொத்த செலவு, தலைமை மின்சார மையம் மற்றும் மின்சாரத்தை சமச்சீராக பிரித்து வழங்கும் திட்டத்தையும் சேர்த்து ரூ. 17.62 கோடி செலவாகும் என மதிப்பிட்டு அதில் 75% தொகையை மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் மானியமாகவும், நே.ஆ. பூங்காவின் உறுப்பினர்கள் 25% தொகையையும் ஏற்றுக்கொண்டனர்.

உற்பத்தி செய்யும் தொழிற்சாலைளுக்கு நிதி உதவி

170 ஏக்கரில் அமைந்துள்ள நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தொழிற்சாலை அமைப்பிற்காக நீண்ட கால கடன் மற்றும் மூலதன வசதிக்காகவும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி கடன் பெற்றது. நாட்டின் முதலாவதாக கட்டப்பட்ட ஒரே ஆயத்த ஆடை பூங்கா என்ற சிறப்பு நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்காவுக்கு உண்டு. திருப்பூரின் Show case ஆக திகழும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா போர்க்கால அடிப்படையில் திரு. A. சக்திவேல் அவர்களின் தலைமையில் செயல்பட்டு பதினெட்டே மாதங்களில் ஜனவரி 2005ல் கட்டி முடிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தியது.

உலகத்தரம் வாய்ந்த நாட்டின் முதல் ஆயத்த ஆடை பூங்கா என்கிற கனவு நனவானது. 10.1.2005ல் இப்பூங்காவை அமைக்கும் முன் ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் உள்ள உற்பத்தி வசதிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

தற்போது தினமும் ஜவுளித்துறை நிறுவனங்களும், ஜவுளித்துறை சங்கங்களின் பிரதிநிதிகளும், ஜவுளித்துறை படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்களும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து இங்கு வந்து இப் பூங்கா நிர்வாகிகளுடன் பூங்காவை ஏற்படுத்தியது முதல் எப்படி வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தி செல்கின்றார்கள்.

தொழிற்சாலைக் கட்டிடங்கள்

தனி மனை 1.80 ஏக்கர் அளவில் 46 யூனிட்டுகளும், இரட்டை மனை 3.60 ஏக்கர் அளவில் 8 யூனிட்டுகளுமாக, மொத்தம் 54 தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1.08 ஏக்கரில் இயங்கும் ஒரு தனி மனை தொழிற்சாலையில் உள்ள வசதிகள்

1. உற்பத்திக்கூடம்
2.தொழிலாளர்களின் சாப்பாட்டுக் கூடம்
3. கழிவறை
4. முன் வாயில்
5. இரு சக்கர வானக நிறுத்துமிடம்
6. காவல் துறை
7. மேற்கட்டு
8. சரக்கு நிரப்புக் கூடம்
9. உள் சாலை
10, மனை புகு பரப்பு
11. சுற்றுச் சுவர்
12. சமச்சீர் முன்புற வளைவு
13. இயற்கை காட்சி

அடிப்படை மற்றும் பொதுவான விதிகள்

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா அடிப்படை மற்றும் பொதுவான வசதிகளை சர்வதேச தரத்திற்கு இணையாக ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வர்த்தர்கள் வருடம் முழுவதும் அதிக அளவில் இங்கு வருகை தருவார்கள் என்பதை மனதில் எண்ணியே அத்தகைய வசதிகளை செயதுள்ளது. பூங்காவின் உள்ளே நுழையும் போதே இது சர்வதேச தரத்தில் அமைந்துள்ளது என்கின்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்துவதற்காக நன்கு கவரக்கூடிய நுழைவாயிலை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் ஊற்று, பசுமை பகுதி, சுத்தமான இடம், அழகிய சூழல், மழை நீர் சேகரிப்புத் திட்டம், பாதைகள் நன்கு அகலாமாக அமைத்தல், பாதைகளின் இருபுறமும் பாதசாரிகளின் நடக்கும் பகுதி என இங்கு வேலை செய்யும் 30,000 தொழிலாளர்கள் எவ்வித சிரமுமின்றி வேலை செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை, உயர்தர அடிப்படை வசதியாக்க பூமிக்கடியில் கம்பியையும், விலையுயர்ந்த டிரான்ஸ்பார்மர்களையம் அமைத்து செய்யப்பட்டுள்ளது.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா என்னும் இந்த பிரம்மாண்டமான திட்டத்தை முன்னின்று உருவாக்கிய சிற்பியாக திரு A. சக்திவேல் அவர்கள் திகழ்கிறார்.

பொது வசதிகளாக வங்கி, உணவகம், கொரியர், முதல் உதவி அறை, மெசினரி மற்றும் உதிரி பாகங்கள் , சர்வீஸ் சென்டர், தபால் அலுவலகம், பெண்களுக்கு தங்கும் விடுதி என நிறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பூங்காவினுள் சாயம் போடுதல், ஆடையின் மீது அச்சுப் பதித்தல் போன்ற வேலைகள் நடைபெறுவதில்லை. எனவே நச்சு திரவத்தை வெளியேற்றும் இயந்திரம் தேவைப்படவில்லை.

திருப்பூர் சர்வதேச ஜவுளித்துறை ஏற்றுமதி வரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்துள்ளது. 1985ல் ஜவுளி ஏற்றுமதி ரூ. 18.70 கோடியாக இருந்து. 2006-07ல் இரு ரூ. 11,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் நே. ஆ. பூங்காவின் பங்கு ரூ 1,500 கோடி என்பது பாராட்டுக்குரியது.

இவ்வளவு சிறப்பம்சங்களையும் கொண்ட நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா வருடம் முழுவதும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகிறது.

மொத்தமாக 30,000 (ஆண்பெண்) தொழிலாளர்கள் தேவைப்படும் இப்பூங்காவில் தற்சமயம் 15,000 (ஆண்/பெண்) தொழிலாளர்களை வரவேற்கிறது ‘நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா’.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு