Home » Articles » உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)

 
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)


கலைச்செல்வி க
Author:

ஸ்டெம் செல் (Stem cell)

உடலில் ஒரு தனி செல், தனித்துவம் வாய்ந்த செல் இதுதான். அனைத்து வகையான விந்தைகளையும் செய்துகொண்டு இருக்கிறது.

புதிய மனித உறுப்புகளை உருவாக்கும் திறமை படைத்த ஸ்டெம் செல் (Stem cell)இது மனிதனில் செய்கின்ற செய்யப் போகின்ற விந்தைகள் தான் என்ன?

பழுதடைந்த செல்களை சரிசெய்ய முடியும்

நமது உடலில் உள்ள சிறு உடல் உறுப்புகள் பழுதடைந்து விட்டால் அவற்றை சரிசெய்ய முடியாது. அதை அறுவை சிகிச்சை செய்து, நல்ல உறுப்புகளை மற்றவர்களிடம் இருந்து பெற்று சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளை உறுப்பு மாற்றம் அறுவை சிகிச்சை செய்ய இயலாது.

அவற்றில் ஒன்று கல்லீரில். இது பழுதடைந்துவிட்டால் வேறு வழி இல்லை மனிதனின் குறைந்த காலத்தில் உடல் நலம் கெட்டு இறக்க இறக்கவேண்டியதுதான். பெரும் பாலும் அதிக சாராயம் குடிப்பவர்களுக்கு பொதுவாக நடக்கக்கூடிய ஒன்று.

இதற்கு விடைதரும் செல ஸ்டெம் சல் (Stem cell).

பழுதடைந்த கல்லீரலில், இந்த வகையான செல்களை உட்புகுத்தி பழுதடைந்த கல்லீரல் செல்களை வளர வைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுடியும்.

இந்த வகையான செல்களை எப்படி வளர்ப்பது. இந்த செல்கள் நமது உடலில் எங்கு இருக்கிறது.

இருக்கும் இடம்

1) சினைமுட்டைகளில் உள்ள எம்பிரியானிக் ஸ்டெம் செல் (Embyonic Stem cell).

2) எலும்பு மஜ்ஜைகளில் உள்ள கருமுட்டை ஸ்டெம் செல் (Bom manure Stem cell).

இந்த வகையான ஸ்டெம் செல்களில் எந்த வகையாகவும் பிரித்தரியும் குணம் கொண்ட செல்கள் இல்லை. இவைகளை, பிரித்து எடுத்து செயற்கை ஊடகத்தில் 1 வருடம் வரை வைத்திருக்க முடியும். இந்த செல்களை எந்த உடல் உறுப்பில் பொருத்தினாலும் அது வளரும் போது அந்த உறுப்பு போன்ற செயல்களை கொண்டு செல்களாக வளர்வதனால், பழுதடைந்த உடல் உறுப்புகளை எளிதாக பழுது பார்க்க முடிகிறது.

இவ்வாறு முக்கியமான செல்களில் ஆராய்ச்சி செய்யலாமா? வேண்டாமா? பலவகை கருத்துகள், பல்வகையான நன்மைகள் கிடைக்கும். இதையே தவறாக பயன்படத்தினால்,பல கொடூர விளைவுகளை மனித சமுதாயம் எதிர்நோக்கும் என்பதில் ஐயம் இல்லை.

(Photot Stem cell )

குணப்படுத்த முடியாத நோய்களை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.

பார்கின்சன் நோய் (Parkinson disease)
அல்ஜீமர்ஸ் நோய் (Alzheimer’s disease)
தண்டுவடத்தில் ஏற்படும் காயங்கள் (Spinal card injury)

தீக்காயங்களால் ஏற்பட்ட சேதமடைந்த பகுதிகளை பழுதுபார்த்தல் (Bum injury)

நீரிழிவு நோய் (Diapeties)

ஆர்த்ரெரிடில் (எலும்பு நோய்கள்) வலுவிழந்த எலும்புகள்

தற்போது ஸ்டெம் செல் எதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.

1) பல மருந்துகள் வெளிவருவதற்கு முன்பு, மனிதன் உடலில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை ஸ்டெம் செல்லில் பரிசோதனை செய்து பார்ப்பது மிகவும் சரியான விடைகளை தருகிறது.

2) உடலில் சேதமடைந்த செல்களை பழுது பார்க்க பெரிதும் உதவுகிறது.

– தொடரும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு