Home » Articles » பிடல் காஸ்ட்ரோ

 
பிடல் காஸ்ட்ரோ


பாலா கோவை
Author:

இவர் வீரத்திருமகன்!
‘இதுவே இறுதி!’ என்ற
இறுதியுரை இயறமறுப்பவர்!
இகழ்ச்சியிலும் மகிழ்ச்சி கொள்பவர்!

சிம்ம சொப்பனமென இவர்
சிதறியடித்தார் தன் எதிரிகளை…
சிதறியடித்தவரை சிறைப்பிடித்தார்.
சிறைப்பிடித்தோரை சிந்திக்க வைத்தார்!

எல்லையில்லா வசதிகளோடு
இல்லையென்ற சொல்லேயில்லாமல்
‘என் குடும்பம்! என் வாழ்க்கை!’ என்று
இன்னல்களில் வீழாமலே வாழ்ந்திருக்கலாம்!

வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர்
நல்லவைக்கும் அல்லவைகளுக்கும்
வாதிட்டு பணம் பல சேர்த்து
நாட்டின் செல்வ சீமான்கள் வரிசையில்
இடம்பெற்றிருக்கலாம்!

ஆனால்..
இவர் நடந்த வழி
பலர் யோசித்த வழி
இடர்பாடுகளில் சிக்கியோரை
பாதையிட்டு,.. நல்வழி பாதையிட்டு
காப்பாற்றி உன்னத வழி!

உடலுறுதி குன்றிய பின்னும்
உடனிருக்கும் நம்பிக்கை இழக்காமல்
இன்றளவும் மன உறுதி குன்றாமல்
இமயமென பெருத்து நிற்கும் தன்
எதிரிகளை எதிர்த்தே நிற்கிறார்
எதற்கும் பின்வாங்காமல்!

இவர் வழி பற்றிய இளைய சமுதாயம்
இன்னும் இன்னும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது
அம்மாமனிதர் / பிடல் காஸ்ட்ரோ!

– பாலா, பொன்னையராஜபுரம், கோவை-1


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு