Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


பாலசுப்ரமணியம்
Author:

சுபத்திரா, அன்னூர்

பொருளாதார வளர்ச்சிக்காக தனது இன்பங்களை தியாகம் செய்து வளர்ந்த ஒருவர் முதலாளி ஆனதும தொழிலாளிகளை வளர விடாமல தடுக்க நினைப்பது ஏன்?

தொழிலாளியாக இருந்து முதலாளியாக ஆவதற்கு அவர்பட்ட துன்பங்களும் – துயரங்களும் அவருக்கு மட்டுமே தெரியும்.

அத்தகைய நிலையை மீண்டும் சந்திக்கக் கூடாது என்கிற அச்சமும், எச்சரிக்கை உணர்வும் பல முதலாளிகளை பதற்றத்துகுள்ளாக்கி விடுகிறது.

தன்னுடைய உயர்வுக்கு முதலாளி வழிவிட வேண்டும், துணையாக இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்புத்தான் இங்கே கோளாராக இருக்கின்றது.

தன்னுடைய உயர்வுக்கு மற்றவர்களின் முகம் பார்த்து ஏங்கி நிற்கிற அவலத்தைத்தான் இந்தக் கேள்வி புலப்படுத்துகிறது. இது இயலாமையை, திறமையின்மையை, தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது.

மற்றவர்கள் கைகொடுக்க வேண்டும், தூக்கிவிட வேண்டும், வழிவிட வேண்டும் என்கிற பிச்சைக்காரப் புத்தியை குப்பையில் போடுங்கள்.

சரியான திட்டம், அயராத உழைப்பு, சளைக்காத மனம், எதுவரினும் அடைந்தே தீருவேன் என்கிற பிரயத்தனம் உள்ள மனிதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

அசோக்குமார், கோவை

சமீப காலமாக பெருகிவரும் ‘MLM தொழில்’ பற்றி உங்களுடைய கருத்து என்ன?

கடந்த 10,000 ஆண்டுகளில் மூன்று பெரிய புரட்சிகள் மனித சமுதாய மேம்பாட்டுக்கு வித்திட்டுள்ளன.

1. விவசாயப்புரட்சி – Agrcultural Revolution
2. தொழில்புரட்சி – Industrial Revolution – 19ம் நூற்றாண்டு
3. தகவல்புரட்சி – Industrial Revolution – 20ம் நூற்றாண்டு

21ம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள புரட்சிதா ‘தனிமனிதப்பொருளாதாரப் புரட்சி’. இந்தப் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. நேரடி விற்பனைத்துறை (MLM) போன்ற தொழில்கள் ஆகும்.

விவசாயப்புரட்சி, தொழில்புரட்சி, தகவல் புரட்சி இவற்றில் பெரும் பணக்காரர்களானவர்கள் யார்? நில உடமை, முதலீடு, உயர்கல்வி கொண்டோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று முயற்சி மேற்கொண்ட மனதிடம் கொண்டவர்கள் மட்டுமே. மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி வாழ்வதற்கு வகை செய்த்தும் இந்த மூன்று புரட்சிகள் தான். ஆனால் பணக்காரராகும் வாய்ப்பு கிடைப்பதற்கரிய ஒன்றாக அமைந்திருந்தது. தகுதி உள்ளவர்கள் மட்டுமே மேன்மையடைய முடிந்தது.

ஆனால் நேரடி விற்பனைத் தொழில் (MLM) துறையில் பெரிய முதலீடுகள் எதுவும் தேவையில்லை. உயர்கல்வித்தகுதியும் அவசியமில்லை. தோற்றும் போய்விட்டால் என்ன செய்வது என்கிற அச்சமும் இல்லை.

சாலையில் நடந்து செல்கிற சாமானியன் கோடீஸ்வரனாகலாம் என்று வீடு தேடி வந்து கதவைத் தட்டி வாய்ப்பை வழங்கும் இந்தப் புரட்சிதான் இந்த 21ம் நூற்றாண்டில் சாமானியனுக்கும், நடத்தர வர்க்கத்துக்கும் கிடைத்துள்ள மாபெரும் வாய்ப்பாகும்.

MLM தொழிலுக்கும், மற்ற தொழில்களுக்கும் மிகப்பெரிய தத்துவ வேறுபாடு உள்ளது. மற்ற பாரம்பரிய தொழில்களில், முதலாளியின் வெற்றிக்கு பலர் ஊழியராக உழைத்துக்கொண்டிருப்பர். உழைப்புக்கேற்ற ஊதியம்/ பணத்துக்கேற்ற பொருள்/ சேவை என்ற நியாயமான பரிவர்த்தனையில் இத்தொழில்கள் நடைபெறும். உலக மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும் இந்தப் பரிவர்த்தனை தொடரும்.

பெரும் பணக்கார்ராக வேண்டுமெனில், பிறருடை பணம் (Other People Money – OPM), பிறருடைய நேரம் (Other People Time-OPT) இவற்றை விலை கொடுத்து வாங்குவதற்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். தொழிலதிபர்கள் வங்கியில் கடன்பெற்றுதான்(OPM) தமது தொழில்களை மேம்படுத்தி உள்ளனர். இவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு பயன்பட்டது மற்றவர்களின் உழைப்பும், நேரமும் தான் (OPT) இவ்விரண்டையும் விலைகொடுத்து வாங்கும் தகுதி மட்டுமே வணிகர்களையும், தொழிலதிபர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

MLM நேரடி விற்பனைத்துறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்கள். பெரிய முதலீடு எதையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், இவர்களின் குழுவின் மொத்த விற்பனை பல கோடிகளைத் தாண்டியிருக்கும். இவர்களின் குழுவின் ஆயிரக்கணக்கானவர்கள் தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் குழுத்தலைவர் எந்த ஊதியத்தையும் குழுவினருக்கு கொடுப்பதில்லை. நிறுவனம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. குழுத்தலைவரின் வெற்றிக்கு உதவியது OPM & OPT தான். இவையிரண்டும் இவருக்கு இலவசமாக MLM தொழிலில் வழங்கப்படுகிறது.

மற்ற தொழில்களில் முதலாளியாக இருப்பவருக்கு தன் ஊழியருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு மட்டுமே உள்ளது. தன்னுடைய ஊழியர் பணக்காரர் ஆக வேண்டும் என்கிற பொறுப்பு அவருக்கு கிடையாது. ஆனால் MLM தொழிலில் இதற்கு நேர்மாறானது. தனக்கு கீழே உள்ளவர்களை பணக்காரர் ஆக்கினால் தான் இவர் பணக்காரர் ஆக முடியும் என்கிற நியதி உள்ளது. தான் வெற்றி பெற வேண்டுமானால் மற்றவர்கள் வெற்றிபெற உறுதுணையாக இருக்க வேண்டிய பொறுப்புமிக்க தொழில் MLM ஆகும்.

ஒருவரை உயர்த்தி தானும் உயர்வடையும் தொழில் ஏற்புடையதுதானே. இதுதானே மனித நேயம். எல்லாத் தொழில்கள் போலவே இதிலேயும் சுயநலமிகள் இருக்கிறார்கள். சரியான நிறுவனத்தையும், குழுத்தலைவரையும் தேர்வு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

பிரகாஷ், தாளவாடி

நம்பிக்கை துரோகிகளை என்ன செய்யலாம்?

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றிய விழிப்புணர்வும், வைக்க வேண்டியவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் தலைமைத் திறனும் இல்லாதவர்கள் இத்தகைய நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்துதான் ஆகவேண்டும்.

நம்பிக்கைத் துரோகிகள் மனமுதிர்ச்சசியற்றவர்கள், தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்கள் ஆவார்கள். அதனால்தான் குறுக்கு வழியைப் பின்பற்றுகிறார்கள்.

இரண்டு வகை நம்பிக்கைத் துரோகங்கள் இருக்கின்றன. கயமைத்தனமாக தெரிந்து செய்வது. விளைவுகளை பற்றி தெரியாமல் செய்வது. தெரிந்து செய்பவர்கள் தங்களின் செயல்பாட்டை திறமையாக கருதுவார்ள். தெரியாமல் செய்பவர்கள் அனுபவமும் முதிர்ச்சியும் அற்றவர்கள். தங்களின் சிறுபிள்ளைத்தனமான செயலை எண்ணி வருந்துவார்கள். இத்தகையோரை என்ன செய்வதென்பது நோயின் தாக்கத்தையொட்டி உறுப்பை வெட்டி எறிவதா அல்லது மருந்திட்டு காப்பாற்றுவதா என்று எடுக்கப்படும் முடிவுகள் போன்று செயல் அமைய வேண்டும்.

கயமைத்தனம் நிறைந்த நம்பிக்கைத் துரோகிகளிடம் மல்லுக்கு நிற்பதோ, நியாயம் கேட்பதோ வீண் வேலையாகும். உங்கள் மனதை மேலும் காயப்படுத்தும். உங்கள் சக்திதான் விரையமாகும். தெரியாமல் மலத்தை மிதித்துவிட்டால் என்ன செய்வீர்கள் அதனோடு குடும்பமா நடத்துவீர்கள், காலைக் கழுவி விட்டு வேறு வேலையைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை வட்டத்துக்குள்ளே இவர்களை அனுமதிக்காதீர்கள்.

சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டவர்களை மன்னித்துவிடுங்கள். அவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நல்லவர்களாக இருந்தால் திருந்தி விடுவார்கள். மீண்டும் இத்தகைய துரோகங்கள் தொடர்ந்தால் சிறுபிள்ளைத்தனமல்ல, கயமைத்தனம் என்பதைப் புரிந்து கொடு ‘மலத்தைக்’ கழுவி விடுங்கள்.

துரைசாமி, பெங்களூர்

சுனாமி, பூகம்பம், போர் போன் தருணங்களில் ஒற்றுமை, அன்பு, சகோதரத்துவம் பார்க்கும் மக்கள் மற்றகாலங்களில் பசி என்ற கேட்பவனை விரட்டியடிப்பது ஏன்?

இயற்கை பேரிடர் அல்லது போர் இவற்றினால் ஏற்படும் இன்னல்களுக்கும், சோம்பேறிகள் படும் இன்னல்களுக்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளன.

முதலில் உள்ளது தாங்களாக தேடிக் கொண்டதல்ல. அவர்களின் அனுமதியின்றி ஏற்பட்ட துன்பமாகும், துயரமாகும். இனைத் தடுத்து நிறுத்த முடியாமல் நிராதரவான நிலையில் உள்ளவர்களுக்கு உதவுவது – மனிதாபிமானம். மனித நேயம் – மனிதம் ஆகும்.

ஓரறிவு தாவரங்கள் முதல் ஐந்தறிவு மிருகங்கள் வரை தானே உணவைத் தேடிக் கொள்கின்றன. எல்லாப் பறவைகளுக்கும் தீனி வெளியில் இருக்கிறது. கூட்டில் வைக்கப்படவில்லை. தானே பறந்து சென்றுதேடிக் கொள்கின்றன. தெரு நாய்கூட குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைக்காக போராடுகின்றது.

ஆற்றிவு மனிதன், வாழ்வதற்கு வழிகள் பல இருந்தும், தன் முயற்சியின்மையை சோம்பேறித் தனத்தை பரிதாபத்துக்குள்ளாக்கி பிச்சை கேட்பது அசிங்கம்.

அசிங்கத்துக்கு துணை போவது அறிவுடமையல்ல, விரட்டியடிப்பதுதான் சரி.

பாலு, ஊட்டி

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு 75 சதவீத துறைகளை தனியார் மயமாக்கிவிடலாமா?

வளர்ச்சியடைந்துள்ள பல நாடுகளில் முன்னேற்றத்துக்கு, தனியார் மயமே துணையாக இருந்துள்ளது.

கம்யூனிசம், மாக்சிசம் போன்றவை அன்றைய சூழலுக்கு தேவையாக இருந்து. ஆனால் காலப்போக்கில் இவை கிடப்பில் போட்பட்டு வருகின்றது என்பதை சீனா – ரஷ்யா போன்ற வல்லரசுகளின் வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன.

தனியார் மயமாக்கப்படும்போது, தொடக்க காலத்தில் ஏற்படும் சில அசௌகரியங்கள் தவிர்க்க இயலாததாகும்.

குறிப்பாக விலைவாசி ஏற்றங்கள் சாமானிய மக்களை துன்பத்துக்குள்ளாக்கிவிடும். ஆனால் நீண்ட காலப் பயன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் மேம்பாட்டைக் கொண்டு வரும்.

தனியார் மயம் தொழில் போட்டியை உருவாக்கும். வேலை வாய்ப்பை உருவாக்கும். உற்பத்தியைப் பெருக்கும். அதிக உற்பத்தி விலைவாசியைக் குறைக்கும். சாமானியர்களுக்கு இன்று கிடைப்பதற்கு அரிதாக இருக்கின்றவை நாளை வீட்டு வாசலில் காத்துநிற்கும்.

கைத்தொலைபேசி, விமானப் பயணங்கள் சாமானியருக்கு சாதரணமாகிவிட்டது – தனியார் மயத்தால்தான்.

அத்தியாவசியத் தேவைகள் தனியார் மயமாக்கப்படும்போது தொடக்க காலத்தில் ஏற்படும் விவைவாசி ஏற்றத்தை பகிர்ந்து கொள்ளும் (subsldy) முறையில் அரசாங்கம் முன்வர வேண்டும்.

தனியார் மயத்தில் அரசாங்கத்தின் குறைந்த அளவிலான தலையீடும், மக்கள் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் கண்காணிப்பும் மட்டுமே நாட்டையும், மக்களையும் மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2007

30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு
அதிக மரணத்தை உண்டாக்குவது எது? அதிர்ச்சி! உண்மை!!
தேர்வுக்கு தாயாரதல் II
மரங்கள் நடுவோம்! அது நம் சமுதாயக் கடமை!!
ஈடுபாடு
சிந்தனைத் துளி
விழுவது எழுவதற்கே!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
நாம் மனிதர்களாக வாழ்வோம்
உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology)
பிடல் காஸ்ட்ரோ
மதிக்கும் நேசம்
அகற்றுவோம் அடிமைத்தனத்தை! அதிகரிப்போம் தன்னம்பிக்கையை!
உண்மையை அறிய உதவும் ‘தகவல் உரிமைச் சட்டம்’
உண்மையை அறிய உதவும் 'தகவல் உரிமைச் சட்டம்'
கேள்வி பதில்
அரிய செயல்
மனிதன் எவ்வாறு தோன்றினான்? – டார்வின் பார்வையில் ஆதாரங்கள்
எங்கே நிம்மதி
இதுதான் வாழ்க்கை
உள்ளத்தோடு உள்ளம்
உயர்வுக்கு அடித்தளம் உழைப்பு
மனம் மருந்து மனிதநேயம்
குளிர்காலத்தில் தோல் பாதிப்பு
வேரில் பழுத்த பலா
முதல் சந்திப்பு