Home » Articles » டிக்..திக்..டிக்..திக்…..

 
டிக்..திக்..டிக்..திக்…..


மணவழகன் ஜே
Author:

நீங்கள் தனியாக இருக்கிறீர்கள், தண்ணீர் குழாயில் இருந்து குடத்தில் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், குடம் நிரம்புவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போல இருக்கிறதே. நீங்கள் ஆயுள் காப்பீடு கட்டணம் செலுத்த ஒரு நீண்ண்ட வரிசையில் நிற்கிறீர்கள் கவுன்ட்டரில் இருப்பவர் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் கழிப்பதாக தோன்றுகிறதா? ஆனால் நீங்கள் நான்கு பாலிசி கட்டணங்கள் கட்டும்போது, அதற்கான மொத்த தொகையைக் கணக்கு போட்டு, ரசீது, அடித்து, மீதி சில்லறையை உங்களுக்கு கொடுத்து, அனைத்தையும் சரி பார்த்து நீங்கள் கவுன்ட்டரை விட்டு நகர்ந்தபோது, சும்மா அரை நிமிடத்தில் இவ்வளவு வேலைகளும் முடிந்துவிட்டதாகத் தோன்றுகிறதே?

ஆம். நண்பர்களே நமக்கு பிடிக்காத செயல்கள், போர் அடிக்கும் விசயங்கள் விரும்பாத பேச்சுக்கள் நடைபெறும் போது அய்யோ டைம் போக மாட்டேன்குதே என்று தோன்றுவதாகவும், மிகவும் ஆர்வமுள்ள செயல்கள், பிடித்த விஷயங்களை செய்யும் நேரம் விரைவில் சென்று விடுவதாகவும் தோன்றுகிறது.

இதைப் போன்றே ஒவ்வொரு நிகழ்வும் முதல்பாதி மெதுவாக நகர்வது போலவும், பின் பாதி விரைவில் சென்றுவிடுவதைப் போலவும் நமக்குத் தோன்றுகிறது.

ஆனால் இரண்டு செயல்கள் நடைபெறும் நேரம் அதற்குரியன மட்டுமே அதாவது அறுபது செகண்ட் ஒரு நிமிடமும் அறுபது நிமிடம் ஒருமணி நேரத்துக்கு ஆறு நாட்கள் விடுமுறை எனில் முதல்மூன்று நாட்கள் மெதுவாக செல்வது போலத் தோன்றினாலும், இரண்டாவது மூன்று நாட்கள் விரைவில் சென்று விடுவதாகத் தோன்றுகிறதே!

நமது வாழ்க்கையும் இப்படித்தான் முதல்பாதி ரொம்ப ஸ்லோவாக நகர்வதுப் போலதோன்றி, பின்பாதி மிக விரைவில் சென்று விடுகிறதாகத் தோன்றுகிறது.

இது எங்களுக்கு தெரிந்த விசயம்தானே என்கிறீர்களா? சரி, ஸ்லோவாக போகின்ற நேரத்திலும், வேகமாகச் செல்லும் நேரத்திலும், உங்கள் பணி செயல்பாடுகள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததுபோல் இருக்கிறதே? சிந்திப்போம்.

சரியான நேர நிர்வாகம் இருந்தால் அதை (Total Quality Management) முழுமையான சிறந்த நிர்வாகம் என்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். அப்போதுதான் வாழ்க்கையின் குறிக்கோளை இலட்சியத்தை அடைய முடியும்.

தெளிவான இலக்கு இருக்கு இடத்தில் செயல்பாடுகள், சரியாக இருக்கும். இலக்குகளை அடைய சரியான வழிமுறைகள் (திட்டங்கள்) இருக்கும். திட்டங்கள் கையில் இருக்கிறது. இலக்குகளை நோக்கி நகரும்போது, நாம் வாழ்க்கையை கண்காணித்துக் கொண்டு வந்தால் போதும். இலக்கினை உரிய நேரத்தில் சென்றடைது உறுதி.

இலக்கும் அதை அடையும் வழிமுறையும் வைத்திருக்கும் நீங்கள் சரியான நேர நிர்வாகியாகிருப்பீர்கள்!

தெளிவான இலக்கு, சரியான செயல் திட்டம் , முன்னுரிமைப் பட்டியல் ( priorities) (முன்னுரிமைப் பட்டியல் எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற திட்டம் கொண்டது)

இவைதான், உங்கள்
டிக்..டிக்.. நேரத்தினை திக்.. திக்…

என டென்ஷனாக்காமல் ரிலாக்ஸாக சாதிக்க உதவும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2007

திட்டமிட்ட செயல்பாடே வெற்றிக்குரிய வழிபாடு!
இதுதான் வாழ்க்கை
ஆபத்தான நோய்களின் அறிகுறிகள்!
சொந்தமாகட்டும்….
தெரியுமா உங்களுக்கு….
நம்பிக்கையே நல்வாழ்வின் அச்சாரம்
சிந்தனைத்துளி
மின்சாரம் தாக்கியவரை கையாளுவது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்
மூக்கில் ரத்தம்
டிக்..திக்..டிக்..திக்…..
திறந்த உள்ளம்
மறதி ஏன்?
வேரில் பழுத்த பலா
மனதின் மொழி
பாராட்டு விழா
கற்றல் கருவிகள்
தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்!!
உழைப்பே உயர்வு
சிந்தனை செய் மனமே
மெய்வருத்தக் கூலி தரும்
கடமைகளை மறக்கலாமா?
பாராட்டும் தன்னம்பிக்கையும்
கேள்வி பதில்
தனித்தன்மையை இழந்துவிடக்கூடாது
நாளொன்றுக்கு 48 மணி நேரம்