Home » Articles » பயிலரங்கச் செய்தி

 
பயிலரங்கச் செய்தி


admin
Author:

உன் விரல் நுனியில் வெற்றி

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் வைதேகி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் நரசிபுரம் அருகில் அமைந்துள்ள 26 ஏக்கர் கல்லூரி வளாகம், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி கணிணித்துரை சார்பில் 18.08.2007 சனி பகல் 1 மணி முதல் 3 மணி வரை “வெற்றி உன் விரல் நுணியில் என்ற தலைபில் தன்னம்பிக்கை எழுத்தாளர் பயிற்சியாளர் அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம் அவர்களின் பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு. பேரா. ந. ரங்கசாமி அவர்கள் தலைமை தாங்கிட மாணவி செல்வி, M. செல்வநாயகி வரவேற்க, மாணவர் திரு. இ. ஈஸ்வரகுமார் பயிற்சியாளரை அறிமுகப்படுத்த, சுமார் 1/2 மணி நேரம் பயிற்சியாளர் திரு. பன்னீர் செல்வம் தொய்வின்றி பயிற்சிகள் வழங்கினார்.

வாழ்க்கை என்பது அவரவர் முடிவுகளே என்றும், எல்லோருமே வெற்றி பெற விரும்புவதால் வெற்றியின் 3-ம் வகையான WIN-WIN FORMULA குறித்து விளக்கினார்.

வெற்றியாளர்கள் செயல்களை வித்தியாசமாய் செய்வதாலேயே வெற்றி பெறுகிறார்கள் என்பதால், எல்லோரும் வெற்றி பெறும் மந்திரச் சொல்லான “CREATIVITYk படைப்பாற்றல் உள்ளதை அறிந்து கொள்ள பயிற்சி கொடுத்தார்.

மூளையின் இடதுபக்க இயக்கம் கணக்கிட்டு, எதிர்பார்ப்பை உண்டாக்கும்; வலது பக்க இயக்கம கற்பனைத் திறனுடன் வெற்றிக்கான வழிகளைத் தெரிவிக்கும் என்று கூறி கலந்து கொண்ட 350 மாணவ மாணவியருள் யாருக்கு எந்தப் பக்க மூளை செயல்படுகிறது எனக் கண்டுபிடித்துக் கூறினார்.

அதன் அடிப்படையில் வலதுபக்க மூளையை இயக்க வழிகள் தெரிவித்தார். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தல், புதுமையாகச் செயல்படுதல் போன்றவையுடன் முடியும் என நினைத்தால் அதற்கான வழிகள் தென்படும் என்றார்.

எல்லோருக்குமே வெற்றி பெறும் திறமை இருந்தாலும், பாதிக்கு மேற்பட்டோர் தங்கள் திறமை மீது நம்பிக்கையின்றி தயக்கத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். நம்முடன் பழகுபவர்களை காரியவாதிகள், எதார்த்தமானவர், பொறாமைப்படுபவர் நம்பிக்கையுள்ளவர் என இனம் கண்டு நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கூடுதல் நேரம் செலவிட திட்டமிடுமாறு கூறினார்.

நான் இப்படித்தான் என்ற வட்டத்தை உடைத்துக் கொண்டு வெளியே வர, சிந்திப்பதற்கெனத் தனியே தினமும் நேரம் ஒதுக்குமாறும், பிறர் ஆலோசனை பெற தயங்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.

எப்படி வட்டத்துக்கு ஒரு மையப் புள்ளி உள்ளதோ, ஒரு பூட்டு இருந்தால் அதற்கான சாவி உள்ளதோ அதுபோல் எல்லாப் பிரச்சனைகளுக்கும் பல தீர்வுகள் உள்ளன. சரியானதைக் கண்டுபிடிக்கும் வழிகளாக மூன்று பயிற்சிகள் கொடுத்தார்.

அதிகாலை விளக்குப் பயிற்சி செய்வதால் முகவசியம் உண்டாகும்; ஒரு வகையான மூச்சுப்பயிற்சி மூலம் தீய சக்திகள் உடலுக்குள் மனத்துக்குள் செல்லாமல் கவசமாய் தடுப்பதைப் பயிற்றுவித்தார். பிரச்னைகளுக்கு சரியான தீர்வு காண 12 வரை எண்ணி, 7 முறை மூச்சு இழுத்துவிட்டு, ஒரு பொருளை உற்றுப்பார்த்தால் மனம் குவியும்; பின் தீர்வு கிடைக்கும் என்றார்.

ஆறறிவுள்ள நாம் நம் மனநிலையில் கொண்டு வரும் சிறிய மாற்றமே நம் வெற்றிகளுக்கு அடிப்படையாகும். இலட்சியத்தை அடைய வெறியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே என முத்தாய்ப்பாக் கூறினார். மாணவர் திரு. ஸ்ரீகாந்த நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

வாழ்க வளமுடன்!
-முத்துலட்சுமி பன்னீர்செல்வம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2007

பென்சன்
அதிகரிப்போம் தன்னம்பிக்கையை நகைச்சுவையால்
வாசிப்பே மனிதனின் சுவாசிப்பு
சேவைச் செய்தி
மக்களின் நலனே பதவியின் பலன்
இதுதான் வாழ்க்கை
சிந்தனைத்துளி
பயிலரங்கச் செய்தி
குறிக்கோள்களை எளிதில் அடைய உதவும் அற்புத வழிமுறைகள்
கோழியும் குஞ்சும்
ருசியா? பசியா?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உள்ளத்தோடு உள்ளம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்ட ஆண்டு விழா
மனதின் மொழி
வேரில் பழுத்த பலா
தடைகளைத் தாண்டுங்கள்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
புதிய பார்வை, புதிய வார்த்தை, புதிய வாழ்க்கை ஒரு புத்துலக கோட்பாடு
திறந்த உள்ளம்