Home » Articles » மனிதனும் மனோதத்துவமும்

 
மனிதனும் மனோதத்துவமும்


யோகதா ப
Author:

எந்த ஒரு மனிதரும் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருப்பார். அந்த ஆர்வத்தினால் தன்னைப் பற்றிய பிறருடைய கருத்துக்களைக் கேட்டு மகிழ்வர். தன்னைத்தானே அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். “இந்த நபரைப் புரிந்து கொள்ளவே முடியலே” என்று.

எளிது, எளிது மானிடராய் பிறத்தல் எளிது. அரிது, அரிது! மானிடராய் வாழ்தல் அரிது.

என்று சொல்வது காலத்துக்கேற்றதென்றே ஏற்றுக்கொள்வோம்.

மனமே வாழ்வின் விளைநிலம்

மனிதனின் மகத்தான சக்தி மனம், நாம் உலகில் வாழ உடலும், அதை இயக்க உயிரும் தேவை. உயிரே மனமாக மலர்ந்து நம்மை வழி நடத்துகிறது. பிரச்சனைகள் என்பது இன்று எல்லோருக்குமே இருக்கிறது. இது எப்படி உருவாகிறது? யாரிடம் உருவாகிறது? இது தன்னைப் பற்றிய அறிவு இல்லைமையால் தன்னிடமே உருவாகிறது. அதற்கு வேறு யாரும் காரணமல்ல. அந்தப் பிரச்னைகளை தன்னம்பிக்கையோடு, எதிர் கொள்ளத் தெரியாத நிலையில் பெரும்பாலோனோர் உள்ளனர்.

“மனதை அடக்க நினைத்தால் அலையும்.
மனதை அறிய நினைத்தால் அடங்கும்

இது அருட்தந்தை வேதாத்திரி மகிரிஷியின் மணிமொழி.

மனதை மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.

மேல் மனம் அல்லது புறமனதை கவனமாக வைத்திருக்க வேண்டும். இது முடிவே இல்லாமல் வேலை செய்கிறது. நடுமனம் சாந்நிலையில் இருக்கும். மேல் மற்றும் ஆழ் மனதிற்கு உறுதுணையாக பணிகளைச் செய்யும். ஆழ்மனம் நாம் பிறந்ததில் இருந்து நடந்து வரும் எல்லாவற்றையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைப் பதிவாக்கி வைத்திருக்கிறது. காலப்போக்கில் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி, விளைவுகளைத் தருகிறது.

மனதை வழி நடத்துதல்:

இப்போது மனதைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். சரிதானே! அடுத்து மனதை எப்படிச் செவ்வனே வழி நடத்துவது எனப் பார்ப்போம். மனம் ஒரு குரங்கு. இது குரங்கு போல் தாவிக் கொண்டே இருக்கும். எனவே தவறுகள் வரும். மனதை திடமாகவும், நம் கட்டுப்பாட்டிலும் தன்னம்பிக்கையுடனும் வைத்துக் கொள்வது நம் எண்ணங்களே.

ஒரு நாளைக்குப் பல முறை நம் மனதில் எண்ணங்கள் எழுகின்றன. நல்லதாகவும் இருக்கும். கெட்டதாகவும் இருக்கும். நல்ல எண்ணங்கள் நமக்கு பாதிப்பற்ற நிலையையும் கெட்ட எண்ணங்கள் பாதிப்பையும் கொடுக்கின்றன. நமக்கு என்ன தேவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நல்லதையே விரும்புவர்கட்கு சில ஆலோசனைகள்.

பயிற்சி:

நமக்கு வரும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யப் பலர் முயல்வதில்லை. விரும்புவதில்லை. காரணம் – பயம். இவை நமது ஐந்து புலன்களான மெய், வாய், கண்,மூக்கு, காது, மூலம் உண்டாகின்றன. இந்தப் புலன்களை நல்லவற்றுக்கே பயன்படுத்த வேண்டும்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்”

இது மகரிஷியின் மறுக்க முடியாத மந்திரம்.

நம்மிடம் தோன்றிய எண்ணங்களில் தேவையற்ற எண்ணங்களைப் பட்டியலிடுங்கள். அவற்றை மனதிலிருந்து வெளியேற்றிவிடுங்கள். எப்படி என்றால் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, தேவையற்ற எண்ணத்தைக் கொண்டு வந்து வேகமாக STOP எனச் சொல்லி மூச்சை வெளியே விடுங்கள். இப்படிச் செய்யும்போது தேவையற்ற எண்ணங்கள் உடலிலிருந்து வெளியேறிவிட்டதென எண்ணுங்கள். இந்தப் பயிற்சியை செயல்படுத்தி மகிழுங்கள்.

மனோதத்துவம்:

இது மனதுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. உதாரணமாக Conversion Disorder என்ற Mental Disorder என்பது முதலில் Hysteria (ஹிஸ்டீரியா) என்றழைக்கப்பட்டது. உடல் உபாதைகள் தான் மன நோயாக மாறுகிறது. என ஆராய்ந்து தெரிவித்துள்ளனர். Body Symptoms are Coverted into Mental Illness or Complaints உடல் நலமாக இல்லையென்றால் மனம் நலமாக இருக்காது. மனம் கவலைப்பட்டாலும், உடல்நலம் குன்றிவிடும். எனவே, தினமும் உடற்பயிற்சி, சத்தான உணவு உடலுக்கு மிக அவசியமாகிறது. தியானம், புன்னகை முகம் மனதுக்கு அவசியமாகிறது.

உடல்+மனம்=மனிதன்

பிரச்சனைகளை ஓட்டுவோம்

பிரச்னைகளை இன்முகத்தோடு வரவேற்று தைரியமாய் சமாளிக்கப் பழக வேண்டும்: அதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளைப் பிரச்சனைகள் என எண்ணுவதால்தான் அவை பிரச்சனையாக அமைகிறது. பிரச்சனைகளைத் துரத்தியடிப்போம்.

தன்னம்பிக்கை வாசகர்களே! நீங்கள் உங்கள் மனதில் பின்வரும் எண்ணங்களை ஆழமாகப் போட்டுக் கொள்ளவும்.

  • நான் தளர்வாக (Relax)இருக்கிறேன்
  • எனது முகம் புன்னகை (Smile) யாக இருக்கிறது.
  • எதிர்பார்ப்பு, ஏமாற்றம் தரும் என்பதால் நான் எதிர்ப்பார்ப்பதில்லை.
  • மற்றவர்களை நம்மால் மாற்றமுடியாது என்பதால் நான் மாறி விடுவேன்
  • அனைவரிடமும் அன்பும் கருணையும் காட்டுவேன்.
  • பிறர் நிலையில் என்னை வைத்து (Empathy) அவரது பிரச்சனைகளைப் புரிந்து கொள்வேன்.
  • நேரான நியாயமான எண்ணங்களை வளர்த்துக் கொள்வேன்
  • பிறர் குறைகளை தவறுகளை மன்னிப்பேன் மறப்பேன். (Forgive, Forget)

“புன்னகைத்துப் பழகினால்
பிரச்சனைகள் ஓடிவிடும்


Share
 

6 Comments

  1. senthil says:

    good
    vazha valmudan

  2. M. J. SYED ABDULRAHMAN says:

    ம் என் மணதில் ஆழமாகப் போடுக்றன் ஆழமாகப்
    நன்றி
    நல்ல இருக்கு மனம் ஏன்னா ஒரு சக்தி
    நன்றி சிறப்பு மனோசக்தி

  3. Ramesh Babu says:

    தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி

  4. R.C. ELAVARASI says:

    வாழ்க வளமுடன் . சக்திவாயிந்த கருத்துக்கள் .மனதை வலுப்படுத்தியது. மிக்க நன்றி

  5. R.C. ELAVARASI .ERODE says:

    வாழ்க வளமுடன். மனதை வலுப்படுத்தும் ஆழமான கருத்துக்கள்
    மிக்க நன்றி.

  6. வசந்தவாசல் அ.சலீம்பாஷா says:

    நன்றி!

Post a Comment


 

 


August 2007

நிறுவனர் நினைவுகள்
திறந்த உள்ளம்
தளர்வறியா மனம் தா
மனிதனும் மனோதத்துவமும்
சமுதாயமும் இளைஞர்களும்
தெய்வம் நீ என்று உணர்
முன்னேற்றத்தின் மூலதனங்கள்
வெற்றிக்கு வழி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி