Home » Articles » இதுதான் வாழ்க்கை

 
இதுதான் வாழ்க்கை


admin
Author:

ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.

ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.

அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான்.

ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…? என்று கேட்டார்.

தவ முனிவரே! என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினான்.

அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!
தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…

பள்ளியில் – இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப் படித்தார் எடிசன்.

அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா வாயுக்கள் வெளிப்படும் என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள் அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் என்ற தகவலையும் படித்தார்.

உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில் ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும், அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அதுபோலவே செய்தான்.

சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்? என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார் எடிசன்.

அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன் வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய் இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான வாயு உருவாகும். அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார். ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும் வாங்கினார், எடிசன். இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை