Home » Articles » நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு

 
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு


தாமரைச்சந்திரன் ஆ
Author:

ஆ. தாமரைச் சந்திரன்
இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவ குடும்பத்தை சார்ந்தவர். ஹோமியோபதி மருத்துவ துறையில் 25 வருட காலமாக கோவையில் ஹோமியோபதி மருத்துவம் செய்து வருகிறார்.

கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய அரசின் தென்னக ரயில்வேயில் ஹோமியோபதி மருத்துவ அதிகாரியாக 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் ஹோமியோபதி மருத்துவ குழு உறுப்பினராக 5 ஆண்டு காலம் பணியாற்றியுளார்.

தற்போது தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவராகவும், RVS ஹோமியோபதி ஆலோசகராகவும் இருக்கிறார்.

கோவையில் இயங்கி வரும் 2 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் ஆரம்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இவரது பங்களிப்பு முக்கியமானது.

கோவை வானொலியிலும், தூர்தர்சன் தொலைக்காட்சியிலும், ஹோமியோபதி மருத்துவம் பற்றி இவரது பேட்டிகள் பலமுறை ஒளிபரப்பாகியுள்ளது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் Health is Wealth

இது சாதாரண பழமொழி அல்ல. உயிரின் ஆணி வேரைப் பற்றி உண்மை இரகசியம். உலகில் பல்வேறு மருத்துவ மனைகள் இருந்தாலும் ஹோமியோபதி மருத்துவம் தோன்றி 200 ஆண்டுகளுக்கு மேல் இருந்த போதிலும் தற்போது தான் அதன் மகத்துவமும், சிறப்பும் உலக மக்களால் போற்றப்படுகிறது. இது சித்தா ஆயுர்வேதம் போன்ற மருத்துவம் அல்ல இதன் பிறப்பும் ஆரம்பமும் ஜெர்மன் நாட்டுக்குச் சொந்தமானது. இதனை கண்டுபிடித்ததும் ஹோமியோபதியின் தந்தையுமான டாக்டர். சாமுவேல் ஹானிமென் M.D. ஒரு ஆங்கில மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. ஆங்கில மருத்துவத்தில் ஏற்பட்ட ஒவ்வாமை, பின் விளைவுகள், பூரண குணமின்னை, மற்றும் அறுவை சிகிச்சையை தவிர்க்கும் பொருட்டு இது கண்டுபிடிக்கப் பட்டது என்பது உலகறிந்த வரலாறு.

உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், உலகம் முழுவதும் ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்த மாற்று மருத்துவமாக (Alternative stystem) கருதப்படுவது ஹோமியோபதி மருத்துவமே. அதிலும் குறிப்பாக இந்தியாவில்தான் ஹோமியோபதி மருத்துவம் சிறந்து விளங்குகிறது. பரவலாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கே வங்காளத்திலும், இங்கே கேரளத்திலும் அதன் மகத்துவமும் சிறப்பும் அறிந்து பாராட்டப்படுகிறது. அரசாங்கம் அதனை ஊக்கப்படுத்துகிறது. எப்போதெல்லாம் கொடிய நோய்கள் தாக்குகிறதோ அப்போதெல்லாம மக்களும் அரசாங்கமும் முன் வந்து “ஹோமியோபதி மருத்துவத்தை” பயன்படுத்தி மக்களை காக்க செய்வதோடு உலக மக்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை உயர்த்திக் காட்டி இருக்கிறது.

உதாரணமாக: சமீபத்தில் மக்களை கொடூரமாக தாக்கிய சிக்கன் குன்யா என்ற வரைஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மெட்ராஸ் ஐ எனும் கண்நோய் இந்நோய்களை குணப்படுத்தியதில் ஹோமியோபதி மருத்துவத்தின் பயன் அளப்பற்கரியது.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்ப்பது, கிழிந்த தசைகளை தைய்ப்பது, தவிரக்க முடியாத அறுசுவை சிகிச்சை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை உண்டு. உடம்பில் உயிர் இருந்து எலும்பும் தசையும் இருந்து நோயாளி எந்த நோயால் பாதிக்கப்பட்டாலும் ஹோமியோபதி மருத்துவத்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். என்பதை 72 வருட அனுபவம் கொண்ட பிரபல சென்னை மருத்துவர் Dr. S.P. கோபிக்கா கூறியிருக்கிறார்.

ஹோமியோபதி நோய்க்கு சிகிச்சை அளிப்பதில்லை. மாற்றாக நோயாளிக்குத் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். மனம் பாதிக்கப்பட்டால் உடல் பாதிக்கப்படும். உடல் பாதிக்கப்பட்டால் மனம் பாதிக்கப்படும். இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. உடல் வேறு மனம் வேறு அல்ல. இன்றைய உலகில் மன அடிப்படையிலான நோய்கள் தான் அதிகம் காணப்படுகிறது.

உதாரணமாக: சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய், சோரியாஸிஸ், குடல் அல்சர், தைராய்டு கோளாறுகள் மற்றும அலர்ஜி சம்பந்தப்பட்ட தோல் நோய்கள் எல்லாம் மன அழுத்தம் காரணமாகவே பெரும்பாலும் வருகிறது. மற்ற காரணங்கள் இருந்த போதிலும் 75% மனம் தான் காரணமாகிறது என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொலைக்காட்சிப் பெட்டியோ, (Television), கணினியோ (Computer) அலைபேசியோ (Cell Phone) , வாங்கினால் அதற்கு ஒரு Manual Instruction தருவார்கள். அதனை இப்படி பயன்படுத்துங்கள், இப்படி பயன்படுத்தினால் மட்டுமே நீண்ட காலம் பயன்படுத்தலாம். பழுது வர வாய்ப்பில்லை. என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மனித குலத்துக்கு Manual Instruction இல்லை. இப்படித்தான் வாழ வேண்டும், இப்படித் தான் உணவு அருந்த வேண்டும், இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற விதி முறைகளும் இல்லை. இதற்கு தான் நம் முன்னோர்கள், தமிழ் மூதறிஞர்கள் சான்றோர்கள் அரிய பல கருத்தை கூறியுள்ளார்கள்..

கனியன் பூங்குன்றனார் கூறுகிறார்

தீதும் நன்றும் பிறர் தர வாரா”
அய்யன் திருவள்ளுவர் கூறுகிறார்.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

அவர் ஒரு மருத்துவப் பட்டதாரி அல்ல. ஒரு மாபெரும் தீர்க்கதரிசி.

கோபம் ஒரு எமனாக, ஒரு நாயாக, சித்தரிக்கிறார். கோபம் ஒரு நோய்க்கிருமி அல்ல. காமம் ஒரு நோய்க்கிருமி அல்ல. குரோதம் ஒரு கிருமி அல்ல. பொறாமை ஆணவம், செருக்கு மற்றும் பெருத்த சந்தேகம் இவையெல்லாம் மனதை பெருமளவு பாதித்து பின் உடலை கடுமையாக பாதிக்கிறது. நோயை உண்டாக்குகிறது.

வள்ளுவர் மேலும் கூறுகிறார்

மிகினும் குறையினும் நோய்செய்யும் தூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

சத்து குறைவான உணவு – இரத்தசோகை, பலகீனம்
உப்பு அதிகமானால் – குடல் புண்

கொழுப்பு பொருட்கள் அதிகமானால் –
இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்.

உடல் என்பது உணவில் உருவாக்கப்பட்டது.

உண்ணும் உணவுதான் உடலாகிறது.

நல்ல உணவு – நல்ல உடல், தீய உணவு –
தீய உடல் (நோய் உடல்)

உணவே மருந்து! மருந்தே உணவு!!

ஹோமியோபதியால் உடல் நோய்களுக்கு மனத்தின் தன்மையை கொண்டும் நோயாளியின் குணாதிசயங்களை கொண்டும் அவர் எப்படிப்பட்டவர் சாதுவானவரா, கோபக்காரரா, பயந்தவரா, பதட்டம் நிறைந்தவரா, அல்லது சிறந்த அறிவாளியாக என்பதெல்லாம் சிகிச்சைக்கு முக்கியமானதாக கருத்தில் கொள்ளப்படுகிறது.

பொதுவாக ஆன்மீகவாதிகள் அறிவாற்றல் மிக்க ஞானிகள் எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் பயன் அறிந்து இருப்பதால் அதனை விரும்புகிறார்கள். ஆதரவு தருகிறார்கள். ஏனெனில் நோயாளியின் உடலை குணப்படுத்துவதுடன் மனதையும் சரிப்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தார்கள்.

மேலும் ஹோமியோபதி மருத்துவம் மற்ற மருத்துவத்தைப் போல் மருந்துகளை விலங்குகளுக்கு அளிக்கப்பட்டு அதனால் ஏற்படும் மருத்துவ குணங்களும் அறிகுறிகளும் பதிவு செய்யப்படுவதில்லை. ஆரோக்கியான மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மனநிலை, குணங்கள், அறிகுறிகள் தெளிவாக பதிவு செய்யப்படுகிறது. ஆகவே மனநிலை என்பது (Mental Symptom) ஹோமியோபதி மருத்துவத்திற்கு மிக மிக தேவையான ஒன்றாக சிகிச்சையின் போது கருதப்படுகிறது.

ஹோமிபதி மருத்துவத்திற்கு வரும் நோயாளியிடம் மருத்துவர் தெரிந்து கொள்ளும் குறிப்புகள் –
-அடுத்த இதழில்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment