Home » Articles » திறந்த உள்ளம்

 
திறந்த உள்ளம்


admin
Author:

ஜூன் மாதத்தில் வெளியான “வேரில் பழுத்த பலா” கட்டுரை படித்தேன். “செல்வம் போன்ற மனம் தன்னிடம் இருக்கும்போது அதனுடைய ஆற்றலை பயன்படுத்த முன்னேறாமல், யார் யாரிடமோ உயர்வதற்கான வழி கேட்டு, பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்கின்ற வரிகள், என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

செல்வக் குடும்பத்தில் பிறந்தால் மட்டுமே முன்னேறமுடியும் என்கின்ற என் எண்ணத்தை யோசிக்க வைத்தது. திரு. கமலநாதன் அவர்களின் கட்டுரையை அடுத்த இதழிலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
-கணேசன் S.N. பாளையம் கோவை – 7

“மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. ஆனால், மனிதர்களின் தொகைக்குறைந்தே கொண்டே போகிறது” – யாரோ. மாதாமாதம் புத்தம்புது சுவையுடன் செய்திகளை அள்ளித்தரும் ஒரே மாத இதழ் ஒவ்வொரு கட்டுரைகளும் மக்களை மனிதர்களாகவும், மனிதர்களை மகான்களாகவும் மாற்றுகிறது. உடலில் உயிருள்ள ஒவ்வொரு மனிதரும் தவறாமல் படிக்க வேண்டிய ஒரே இதழ் “தன்னம்பிக்கையே” என்று சொன்னால் அது மிகையாகாது. கோடை வெயிலின் தாகத்திற்கு, தவறாமல் “தளராத தன்னம்பிக்கையை தாராளமாக அள்ளித்தரும் “தன்னம்பிக்கையை” எங்கள் ஊர் நூலகத்தின் சார்பாக நன்றியை சமர்ப்பிக்கிறோம். வாழ்க வளமுடன்.
-தொடர் வாசகன் N. மணிகண்டன், திருச்சி.l

தன்னம்பிக்கை ஜூன் மாத இதழில் அமரர் டாக்டர் இல.செ. கந்தசாமி ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறுபகுதி என்பது, ஆழ்மனதில் பதிந்துவிட்டது. அமரர் இல.செ.க. அவர்களின் சிந்தனை அனைத்து வயதினருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. “எண்ணம்போல் வாழ்வு” திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் திரு. சக்திவேல் போன்ற பெருமகனாரை எப்படி பாராட்டுவது என்பது தெரியவில்லை. வெளிநாடு, அரசு வேலை, இதுதான் வாழ்க்கை ஒளி வீசுமென்று இன்றைய இளைஞர்களின் மாயத்தோற்றத்தை வெளிச்சமிட்டார். தயவு செய்து குறிப்பிடாதீர்கள். திருப்பூரை போலத்தான் ஜப்பான் என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள். திருப்பூரை முதன்மை நகரமாக மாற்றிய திரு. சக்திவேல் அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி.

“ஆத்திரம் வேண்டாமே” திரு. தங்கவேலு மாரிமுத்து அவர்களின் கட்டுரை ஆத்திரக்காரர்களுக்கு அறிவுரை. ஆத்திரம் எதிர்மறை போக்கு என்பதை உணர்த்தியது. சி.ஆர். செலின், திரு. சூரியன் கட்டுரை மிக அருமை. ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க தூண்டுகிறது. தன்னம்பிக்கை இதழ். தன்னம்பிக்கை மாத இதழ். ஒவ்வொரு மாதமும் வாங்குவது முதலீடாக எனக்கு தோன்றவில்லை. இது வருங்கால வைப்புநிதி சேமிப்பே.
-கே. கணேசன், இரத்தினபுரி, கோவை.

‘தங்கவேலு மாரிமுத்துவின் “ஆத்திரம் வேண்டாமே” வாசித்தேன். விஷயங்களை அடுக்கி வாசிக்க சுவையாக ‘காப்சியூல்’ சைஸில் கொடுத்திருக்கிறார். யாதார்த்த வாழ்க்கையில் மனிதன் ஆத்திரத்தின் வசப்படாமல் இருப்பது சாத்தியமிலை. ஆனால், ஆத்திரத்தைக் கையாளும் திறன் படைத்தவனாக இருக்க வேண்டும். மகாகவி பாரதி கூட “ரௌத்திரம் பழகு” என்றுதான் சொல்லியிருக்கிறார். தீக்குச்சியை உதாரணத்துக்கு அழைத்து கட்டுரையை முடித்திருக்கிறார். மனிதர்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்தான்.
-இரா. இராஜேந்திரன், மயிலாடுதுறை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2007

ஹா(ய்)ஸ்டல்
சக்ஸஸ் உங்கள் சாய்ஸ்
தலைமைக்குத்தேவை ஆறு முகங்கள்
திறமைதான் நமது செல்வம்
நிறுவனப் பயிற்சிகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும்
திறந்த உள்ளம்
வாத விவாதங்கள் தவிர்ப்போம்! தன்னம்பிக்கையை அதிகரிப்போம்!
வேரில் பழுத்த பலா
மனோசக்தியின் மறுவடிவமே பிரார்த்தனை
குழந்தைத் தொழிலாளர்கள்
நல்லவை மலர்க!..
சிந்தனைத்துளி
ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை
இதுதான் வாழ்க்கை
Miss பண்ணலாமா?
நம்பிக்கை
ஒளிரும் சாதனை
மனப்பூர்வமான முயற்சி! மகத்தான வெற்றி!!
வளமான பாரதம் நனவாகிட உழைப்பைப் பெறுவீர்
நிறுவனர் பக்கம்
நோய்க்கு அல்ல மருந்து, நோயாளிக்கு
உள்ளத்தோடு உள்ளம்
கற்றல் படிப்பு
மோனலித் வாழ்க்கை
தொடர் இயக்கமே வெற்றியின் அடிப்படை