Home » Cover Story » பேட்டி

 
பேட்டி


லேனா தமிழ்வாணன்
Author:

கல்கண்டு லேனா தமிழ்வாணன்

பேட்டி கவிஞர் லெணா

57  நூல்களின் ஆசிரியர்.

2400 நூல்களின் பதிப்பாசிரியர்.

1954 – இல் பிறந்தவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பரிசினையும், பாரத ஸ்டேட் வங்கியின் பரிசினையும், மூவேந்தர் இலக்கியப் பரிசினையும், பதினேழு கல்வி மற்றும் பொதுநல அமைப்புகளின் விருதுகளையும் வென்றவர்.

மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர்.

70- க்கு மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொண்ட குழு இது.

கல்கண்டு, குமுதம் இதழ்களின் துணை ஆசிரியர்.

அண்டார்டிகா கண்டத்தை மட்டும் பயணம் மேற்கொள்ளாமல் விட்டு வைத்திருப்பவர்.

இவரது படைப்புகளை ஆராய்ந்து மூன்று மாணவர்கள் எம்.பில். பட்டங்களையும், இரு பேராசிரியர்கள் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியச் சிந்தாமணி என்ற பட்டம் பெற்றவர். நேர நிர்வாகத் துறையில் பதின்மூன்று ஆண்டுகாலமாக உழைத்து வருபவர்.

உங்களுடைய பிறப்பும் வளர்ப்பும் பற்றிச் சொல்லுங்களேன்?

அன்றைய ஒன்றுபட்ட இராமநாதபுர மாவட்டம் இன்றைய சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 5 -ஆம் வகுப்பு வரை படித்தேன்.  என் பெரிய தாயாரால் கண்டிப்புடன் படித்தேன். என்  பெரிய தாயாரால் கண்டிப்புடன், என் வாழ்க்கைக்கு மிகவும் பயன்பட்டது.  4 – ம் வகுப்பு வரை தேவகோட்டை பள்ளியில் பயின்றேன்.

என்னுடைய 9 ஆம் வயதில் சென்னைக்கு வந்தேன்.  என்னுடைய பெரியம்மவிற்கு எதிர்மாறாக, என் தாயாரிடம் செல்லமாக வளர்ந்தேன். இரு வேறுபட்ட வாழ்க்கைக்கு எனக்கு அமைந்தது.

உலகம் சுற்றிய அனுபவத்தில் புரிந்து கொண்ட உண்மை என்ன?

ஒரு மூலையினுடைய இருட்டுப் பகுதியில் வெளிச்சம் போட்டது போல, என்னுடைய பயண அனுபவங்கள் பல புதிய அனுபவங்களைச் சொல்லித் தந்தது. 1981 – இல் எனது முதல் வெளிநாட்டு பயணம் சிங்கப்பூர்.  அங்கிருந்த சுத்த உணர்வைக் கண்டு வியந்தேன்.  என்னுடைய தாய், தந்தை, ஆசிரியர் சொல்லித் தராத பாடத்தை அந்தப் பயணம் தான் எனக்கு சொல்லித் தந்தது. ஜப்பானுக்கு சென்ற போது அவர்களுடைய உழைப்பைப் பார்த்து வியந்தேன்.  ஜெர்மனி சென்றபோது, எந்தத் துறையில் நாம் அறிவை கொண்டிருக்க வேண்டும் என்ற உணர்வைக் கொடுத்தது.  அமெரிக்காவிற்கு சென்று திரும்பிய பிறகு, மனிதர்களிடம் எப்படி பழகுவது, கனிவான அன்பாக பழகுவது, எதிமறைக் கருத்துகளைக்கூட எப்படி இதமாக கூறுவது என்பவற்றையெல்லாம் கற்றுக்கொண்டேன்.  இப்படி ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பல்வேறு அனுபவப்பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.

ஒரு மனிதன் தன்னிடம் தன்னம்பிக்கை போதிய அளவு உள்ளது, இல்லை என எப்படி உணரலாம்?

ஒருவனுக்கு ஒரு காரியத்தில் செய்ய வேண்டும் என்ற முனைப்பும், நினைப்பும் வந்த உடனே நம்மால் முடியுமா என்ற கேள்வி வந்தால் அவனுக்கு தன்னம்பிக்கை குறைவு என்று அர்த்தம். என்னால் முடியாவிட்டால் எவரால் முடியும், நான் செயலிலும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டால் அவனுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்று அர்த்தம். முடியுமோ, முடியாதோ என்ற எண்ணம் இருந்தாலே ஒருவனுக்கு தன்னம்பிக்கையின் அளவு குறைவாகத்தான் இருக்கும்.

நேரம் நிர்வாகம் கிடைபிடிக்கும் போது மனித உறவுகளில் இடைவெளி விழுவதில்லையா?

நல்ல அருமையான கேள்வி.  நிச்சயமாக நாம் ஒரு ஒழுக்கத்திலே ஆழ்ந்த நம்பிக்கை வைக்கும்போது மற்றவர்கள் அதனால் பாதிக்கப்படுகிறார்கள் என கருதும்போது, நாம் நம்முடைய கோணத்தில் நின்று பார்க்க வேண்டும்.  ஒருவர் நம்மைச் சந்திக்க  வருகின்ற நேரம், நமக்குச் சரியில்லையென்றால் அவரைத் திருப்பி அனுப்புவதில் தவறில்லை.  ஆனால் அப்படி அனுப்பும்போது அவரது மனம் நோகாதபடி கனிவுடன் பேசி, அனுப்புவது நல்லது.  அதுபோல, நம்மோடு இருப்பவர்கள சரியாக நேரத்தைக் கடைப்பிடிக்கவிலையென்றால் மற்றவர் மனம் புண்படாமல், எடுத்துச்சொன்னால் மனித உறவுகளில் இடைவெளி என்பதே இருக்காது.

மனச்சோர்வு மற்றும் சோம்பல் வரும்போது நேரநிர்வாகம் மேற்கொள்ள யுக்தி என்ன?

நாம் நேரத்தைக் கடைபிடிப்பதன் மூலமாக, நேர நிர்வாகம் பற்றி அறிந்து அவற்றின் பலனை உணர்ந்ததும் அதனைப் பின்பற்றியதால் ஏற்பட்ட நன்மைகளை இலாபங்களை அனுகூலங்களை எல்லாம் நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.  எப்படியெல்லாம் சாதித்தோம்.  என்பதை தொடர்ந்துச் சிந்தித்தால் அந்தப் பாதையிலேயே செல்ல வேண்டுமே தவிர மனச்சோர்வு, சோம்பல் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தால் நாம் இதுவரை ஏற்பட்ட வெற்றிகளில் பழுது ஏற்பட்டுவிடலாம் அல்லது பின்னடைவு ஏற்பட்டுவிடலாம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும்.  அப்படி எண்ணினால் மட்டும் தான் மனச்சோர்வு, சோம்பல் வருவதைத் தவிர்க்க முடியும்.

– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2005

எளிது எளிது
நிறுவனர் நினைவுகள்
வெற்றி நமது விலாசமாகட்டும்
விற்பனையில் வியத்தகு சாதனை
சுனாமியில் மீண்ட டாக்டர் பெ. இளங்கோ
படிப்பாளிகளை படைப்பாளிகள் ஆக்குவோம்
செயலாக்குவோம்
சாதனையாளர்
முன்னேற்றத்தின் மூலதளங்கள்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
எப்படி எப்படி எப்படி
சோதனை வெல்வோம்.. சாதனை கொள்வோம்!
நேர்காணல்
நீதான் வெற்றியாளன்
மலரும் மணமும்
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
எங்கும் எதிலும் வெற்றி
பேட்டி
உலகம் உங்கள் கையில்
வெற்றிக்கு கனவு காண்போம்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்