Home » Articles » நிறுவனர் நினைவுகள்

 
நிறுவனர் நினைவுகள்


தியாகராசன் தூசி
Author:

1967 ஆம் ஆண்டு இராசிபுரம் அருகில் உள்ள கால்காவேரி ( காக்காவேரி) என்னும் கிராமத்தில் (மணமகள் இல்லத்தில்) இல.செ.க. அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

அய்யா இல.செ.க. அவர்களின் வாழ்க்கைத் துணைவியார்  திருமதி. கமலம் அவர்கள் பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்கள். திருமணத்திற்கு அடுத்த நாளே அய்யா அவர்கள் இராசிபுரம் உயர்நிலைப்பள்ளிக்கு மாறுதல் கிடைத்ததால் உள்ளூரில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

அம்மா (திருமதி கமலம்) அவர்கள் இரண்டு கல் தொலைவில் சென்று பணியாற்றி வந்தார்.

பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் அம்மா அவர்கள் குடும்பப் பொறுப்பை செவ்வனே ஏற்று நடத்தி வந்தார்கள்.

வித்துவான் தேர்வில் கல்லூரி முதன்மைப்பெற்று உயரிய முதற்பரிசைப்பெற்ற இல.செ.க. அவர்கள் வித்துவான் மாணவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை பெற்று பாராட்டையும் பரிசையும் பெற்றார்.

கல்லூரி முடித்து தமிழாசிரியர் பணியேற்று பணியில் இருந்து கொண்டே 1969 – ஆம் ஆண்டில் சென்னைப்  பல்கலைக் கழகத்தில் இளங்கலை (பி.ஏ. ) பட்டம் பெற்றார்.

1971 ஆம் ஆண்டு எம்.ஏ. தேர்வில் பல்கலைக் கழகத்தில் முதன்மை பெற்றதுடன் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்று வரலாறு படைத்தவர்.

பெற்ற பரிசுகளும் தங்கப் பதக்கங்களும்

1. பிராங்களின் கெல் – பதக்கம்

2. மறைத்திரு. ஜால்லாசாரம் – பாதிரியார் – பதக்கம்

3. பலாந்ததம் கலைக்கழகம் ரொக்கப்பரிசு மற்றும் பதக்கம்

4. டாக்டர். கே.எஸ். கிருஷ்ணன் 60 ஆம் ஆண்டு நினைவுத் தங்கப் பதக்கம்

5. திரு. ரெங்கைய செட்டி பரிசு – பதக்கம் 1971

ஐந்து பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளையும் பெறுவது என்பது அவ்வளவு கடினம் என்பதை அறிவோம்.  ஏற்றுக்கொண்ட தமிழாசிரியர் பணியையும் செம்மையாகச் செய்து கொண்டு, தனியாக படித்து தேனி போல சுற்றிச் சுழன்று தேர்விற்கான கருத்துக்களை சேகரித்துக் தொகுப்பதிலும் வகைப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே!  அவரின் கடுமையான உழைப்பைப்ப பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2005

முன்னேற்றம் தரும் முத்துக்கள்
உங்களின் சரியான எடை
எண்ணங்கள் மலரட்டும்
மனசே மனசே
நேரம் அறிந்து கணையைத் தொடுத்துவிடுங்கள்
நேர்காணல்
நிறுவனர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் துணைவேந்தர்கள்
கடல் அரக்கன்
ஸ்ரீராம் நிறுவனத்தின் வெற்றிக்கதை
தன்னம்பிக்கை வளர தாய்மொழி
முன்னேற்றத்தின் மூலதனங்கள்!
நிறுவனர் நினைவுகள்
தன்னம்பிக்கை ஒன்றுதான்
விடியலை நோக்கி!
மலரும் மணமும்
இளமை எவ்வளவு
பிள்ளைகளை சான்றோர் ஆக்குவதில் பெற்றோர் பங்கு
பயம் என்ற மாயை
எதிர்மறை சூல்களை அடையாளம் காண்பது எப்படி?
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி!
இன்றைய இலக்கு
மனித வள மேம்பாடு
வெற்றி நிச்சயம்
கவிதையும் அழுகிறது
கோயில் வழிபாடு ஏன்?
திறந்த உள்ளம்