Home » Articles » அறிவும் வெற்றியும்

 
அறிவும் வெற்றியும்


சித்திரபாரதி
Author:

‘தட்டிக் கழித்தல்’ என்பது ஒரு வகை வைரஸ் நோய்! நம் புராணங்களில் வரும் அரக்கர்கள் போல் அது பல வடிவங்களை எடுக்க வலது என்று சென்ற இதழில் கண்டோம். ‘உடல் நலக் குறைவுய என்ற அதன் ஒரு வடிவத்தை அங்கே பார்த்தோம். இப்போது இன்னொரு வடிவத்தைப் பார்ப்போம்.

அறிவு இல்லை

எனக்கு ஒரு நண்பர் இருகிறார். இவர் ஒரு சிறு வியாபாரி. எப்போதும் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலைதான். நண்டுப் பிடியில் சிக்கித் தவிக்கும் நடுத்தர வர்க்கத்தினர். நண்பர் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் தன் நிலையைப் பற்றி ஓயாது புலம்பிக் கொண்டே இருப்பார். புலம்பல் பொறுக்க மாட்டாமல் ஒருநாள் அவரிடம் ‘வியாபாரத்தைத விரிவு படுத்துங்கள் அல்லது வேறு வியாபாரம் ஏதாவது ஆரம்பியுங்கள்!’ என்று கூறினேன். அதற்கு நண்பர் சொன்னார், ‘அதற்கெலாம் மூளை வேணும்ப்பா! நமக்கு எங்கே..!’

கோடு தாண்டாமை

இப்படித்தான் 95 சதவீத மக்கள் தங்கள் வாழ்க்கையை வீண்டித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ‘அறவு’ என்பது ஒரு சிலருகே கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனத் தவறுதலாக நினைத்துக்குக் கொண்டு தனக்குப் போதிய அறிவு இல்லையென்றும், எனவே தன்னால் வாழ்க்கையில் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் முடிவு கட்டி, தங்களுக்குத் தாங்களே ஒரு கோட்டைப் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கோட்டைத் தாண்டாத சத்யசீலர்கள், தாழ்வு மனப்பான்மை மிக்க இவர்கள், தங்களைப் பற்றி ஒரு புதைக்குழிக்குள் அமிழ்த்திக் கொள்வார்கள். நீங்களும் இவர்களில் ஒருவரா? அப்படியானால் இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க இரண்டு அடிப்படையான விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அ0 உங்கள் அறிவாற்றலை மிக்க் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.

ஆ) பிறர் அறிவாற்றலை மிக அதிகமாக மதிப்பிடுகிறீர்கள்.

இந்த இரண்டு எண்ணங்களும்த உங்களை ஆட்சி செய்வதால், நீங்கள் சவால்களைச் சந்திக்கப் பயப்படுகிறீர்கள், சாதனைகள் புரிவதிலிருந்து ஒதுங்குகிறீர்கள்.

அறிவைப் பயன்படுத்துதல்

வாழ்க்கையில் முன்னேற , உங்களுக்கு எவ்வளவு அறிவாற்றல் இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விசயமே இல்லை; இருக்கின்ற அறிவை உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமே முக்கியம். உங்கள் அறிவை/ புத்திசாலித்தனத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதை உங்களுடைய வேலைகளைச் செய்ய எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் – இந்த இரண்டும் தான் உங்கள் முன்னேற்றத்தின் அளவை நிர்ணயிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் அறிவாற்றலைப் பற்றிய உங்கள் எண்ணம்தான் உங்கள் வாழ்க்கைப் பாதையை அமைக்கிறது.

அறிவு நிறைய இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் தங்கள் வாழ்க்கையைத் துருப்பிடிக்கச் செய்து கொண்டவர்கள் ஏராளம். குறைந்த அளவே அறிவு இருந்தும், தங்கள் வாழக்கையில் ஒளிசஞ்சுடர் ஏற்றிக் கொண்டவர்களும் அநேகம்.

அறிவு மனம் போன்றது. பலர் பெட்டி நிறைய பணத்தை வைத்துக்கொண்டு, அதை நல்ல வழிகளில் செலவழித்து தனக்குமகிழ்ச்சியைத் தேடிக் கொள்ள மாட்டார்கள். பிறருக்கும் உதவ மாட்டார்கள். இன்னும் சிலர் குறைவாகப் பணமிருந்தும் அதைத் தங்களுக்கும், பிறர்க்கும் பயன் தரத்தக்க வழிகளில் செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். இரண்டாமவரே அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள்.

அறிவாளிகள்

அறிவாளிகளில் ஒரு வகை. இவர்களிடம் எந்த் ஒரு காரியத்தைப் பறிப் பேசினாலும், எதிர்மறையாகவே பேசுவார்கள். ஒருகாரியத்தைச் செய்வதால் ஏற்படும் துன்பங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுவார்கள். இவர்கள் வாழ்க்கையின் இருண்ட பகுதியை மட்டுமே நேசிக்கும் இருட்டுக் காதலர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் உங்கள் உற்சாகத்தை ஐந்தே நிமிடங்களில் உறிஞ்சி விடுவார்கள்.

இன்னும் சில ‘அறிவாளிகள்’ இருக்கிறார்கள். இவர்கள் நடமாடும் புள்ளி விவரப் புத்தகங்கள். வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு, இவர்கள் பரிசுகளை அள்ளிச் செல்வார்கள். இவர்களைப் பார்க்கும் உங்களுக்கு ஒரு வபிரமிப்பு ஏற்படும். ‘அடேயப்பா’ எவ்வளவு அறிவு! எவ்வளவு நினைவாற்றல்! என்று உங்களுடைய மனம் வியக்கும். அடுத்த கணம் ‘நமக்கு இவ்வளவு அறிவு இல்லையே!’ என்ற ஆதங்கம்ப மேலிட உங்கள் மனம் சோர்ந்து போகும். கொஞ்சம் சிந்தியுங்கள்! தேதிகளையும், பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்வதற்குத்தானா அறிவாற்றல் என்று பெயர் ? வெறும் தகவல்களை மட்டும் போட்டு வைக்கும் குப்பைக் கூடைதானா மூளை? இல்லவே இல்லை.

ஜன்ஸ்டீன்

அது ஒரு சரித்திர வகுப்பு! ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனிடம் திடீரென்று ஒரு போரின் (War) தேதியைக் குறிப்பிடும்படிச் சொன்னார். மாணவன் சொன்னான் ‘எனக்குத் தெரியாது!’ ஆசிரியர் மாணவனிடம் கடிந்து சொன்னார், ‘இது எவ்வளவு முக்கியமான தேதி? இது கூட உனக்குத் தெரியவில்லையா?’ மாணவன் சொன்னான், ஐயா, ‘தேதிகளை நினைவில் வைத்துக்கொள்ள என்னுடைய அறிவாற்றலை வீணடிக்க விரும்பவில்லை!! தேதிகளை தேவைப்படும் போது புத்தகங்களைப் புரட்டித் தெரிந்து கொள்ளலாமே’ என்றான். மிகுந்த கோபமுற்ற ஆசிரியர் மாணவனை மீண்டும் கேட்டார். ‘பின் எதில்தான் உனக்கு விருப்பம்’ பளிச்சென்று வந்ததது. மாணவனின் பதில் ‘ஐயா! எனக்குப் போர்களைப் பற்றி ஆர்வமில்லை’ மனிதர்கள் ஏன் போர் செய்கிறார்கள் என அறிந்து கொள்ளவே விரும்புகிறேன்'”(I am interested in why people make wars!) ஆசியர் அசந்து போனார். புரிய வைத்த மாணவர் பின்னாளில் தன் அறிவாற்றலை மிக அதிகமாகப் பயன்படுத்தியவர் என்று விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜன்ஸ்டீன்! ஜன்ஸ்டீன் தன் அறிவை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று சிந்தியுங்கள். எனக்கு புத்திசாலித்தனம் போதாது! அவ்வளவு அறிவு நமக்கு எங்கே!’ என்று எண்ணுவதை இந்த வினாடியிலே விட்டுவிடுங்கள். இந்த ‘அறிவில்லைய என்ற நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள இதோ, இந்தத் தடுப்பூசிகளை இப்போது போடுக் கொள்ளுங்கள்.

அ) உங்கள் அறிவாற்றலை ஒருபோதும் குறைத்துமதிப்பிடாதீர்கள்.

ஆ) உங்கள் அறிவைவிட அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியம். ‘நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை வள்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற முதல் தேவை வெற்றி மனப்பான்மை.

இ) உங்கள் அறிவைத் தகவல் சேகரிக்க மட்டும் பயன்படுத்தாதீர்கள். அறிவைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்க பழகுங்கள். கற்பனையைக் கலந்து புதிய வழிகளைக் கண்டுபிடியுங்கள்.

சரித்திரம் படைக்க உங்கள் அறிவைப் பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது சரித்திர நிகழ்வுகளைப் பதிவு செய்ய மட்டும் உங்கள் அறிவைப் பயன்படுத்தப் போகிறீர்களா?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2004

நீங்களும் எழுத்தாளராகலாம்
அறிவும் வெற்றியும்
மகிழ்ச்சி மிக சுலபம்
எண்ணத்தில் முதன்மை கொள்வோம்
தேர்வு
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
உள்ளத்தோடு உள்ளம்