Home » Articles » மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்

 
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்


admin
Author:

நிகழ்ச்சியைத் துடிப்போடு இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு கதாநாயக நடிகராவதற்கான வசீகரம் கொண்டிருந்த அந்த சுய முன்னேற்றப் பேச்சாளர். பார்வையாளர்களில் சிலர் மேடைக்கு அழைக்கபட்டனர். கூச்சத்துடன் மேடையேறி இரு இளைஞர்களின் முகத்தில், குறுக்கும் நெடுக்குமாக பல ஒட்டுக்காகிதங்கள் ஒட்டப்பட்டன.

பார்வைக்கா கண்கள் மட்டும் மறைக்கப்படாமல் இருந்தது. கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ‘மம்மி’களைப் போல ஆகிவிட்டிருந்தது அவர்களது முக அலங்காரம்.

நிகழ்ச்சியாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, துணைக்கு ஒருவர் வர, அந்த இருவரும் நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே ஒரு ‘வீதி உலா’ சென்று வரப் பணிக்கப்பட்டார்கள்.

நேரம் கடந்து கொண்டிருந்தது. சில நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த அந்த இளைஞர்களின் மனதில்தான் என ஓர் இராயன மாற்றம்!

ஆம். அவர்களின் முகமூடிகள் கலைக்கப்பட்டு இருவரும், இயல்பான முகத்தோற்றத்திற்கு வந்ததும், நிகழ்ச்சியாளர் அவர்களைக் கேள்வியால் துளைத்தார்.

நண்பர்களே! உங்கள் ‘வீதிஉலா’ அனுபவர் எப்படி இருந்தது?

மடைதிறந்த வெள்ளமாய்ப் பதில் வந்தது, ‘ம்ம்மி’த்தனமாய் முக்க்கட்டோடு உலா சென்று வந்தவர்களி ஒருவர் சொன்னார், “ஐயா.. முதலில் வெளியே சென்றபோது, சரி இன்றைக்கு நம்மீது பொது மக்கள் கல்வீசப் போகிறார்கள் என்ற பயந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை”.

மற்றவர் தொடர்ந்தார், “நானும் அதேபோல பயந்துதான் சென்றேன். ஆனால் பலர் ஆச்சரியப்பட்டார்கள். சிலர் இது என்ன கோலம்? ஏதேனும் மாறுவேடப் போட்டியா? என்று நெருங்கி வந்து விசாரித்தார்கள். இன்னும் சிலர் இதுதான் புது அழங்காரப் பாணியோ என்றனர். பலர் கண்டும் காணாமல் சென்றனர்”.

அவர் கேட்டார், “இதிலிருந்து, நீங்கள் அறிந்த உண்மை என்ன? மனோநிலையில் ஏதும் மாற்றம் ஏற்பட்டதா?

‘நிச்சயமாக’ என்றார்கள் இருவரும்.

“இதுவரை அவர் பார்க்கிறார், இவர் பார்க்கிறார் என்று எண்ணி எண்ணியே செயல்படுவேன். இனி அக்கம் பக்கம் அதிகம் பார்க்காமல் முனைந்து என் பணியில் கவனம் செலுத்துவேன் என்கிற உறுதி வந்திருக்கிறது மனதில்!” என்றார் ஒருவர்.

“தொட்டதிற்கெல்லாம் பயம், தயக்கம், ஒத்திப் போடுதல் என்று இருந்த என் மனோபாவம் இந்தச் சில நிமிடங்களில் தலைகீழாய் மாறிவிட்டது. துணிந்து செய்தால், விரைந்து செய்தால் சாதனைகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது” என்றார் மற்றவர்.

இதுபோல் இன்னும் பல கேள்வி பதில்களிலும், உதாரண நிகழ்ச்சிகளிலும் அந்த இருவர் மட்டுமின்றி அந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவரிடமும் நல்ல நம்பிக்கைகளையும், துணிச்சலையும், வேகத்தையும், விவேகத்தையும் எளிதாக விதைத்துக் கொண்டிருந்தார். பேச்சாளர், அவர் தமிழ்ப் பற்றாளர், ரா. காதர் இப்ராஹீம் ஆவார். மூன்று டாக்டர் பட்டங்களைப் பெற்ற மனோவியல் உளவியல் அறிஞர்.

நகைச்சுவையும், வட்டாரத் தமிழ்ச்சொற்களும் சட்டென்று வந்துவிடச் செய்கின்ற ஆத்மார்த்தப் பேச்சும் கலந்த இவர் நிகழ்ச்சிகள் ரசிக்க மட்டுமின்றி, சரியான கோணத்தில் யோசிக்கவும் வைக்கின்றன. நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி ஒலிநாடாக்கள், புத்தகங்கள் வாயிலாக எண்ணற்றோரின் சோம்பலைத் தூசி தட்டி சுறுசுறுப்பாக்கிக் கொண்டிருக்கிறார். மலேசியாவின் இந்த நட்சத்திரப் பேச்சாளர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்