Home » Articles » நம்மைப் பிணைக்கும் சங்கிலி

 
நம்மைப் பிணைக்கும் சங்கிலி


இராம சுப்பிரமணியன்
Author:

நம்மைப் பிணைக்கும் இரண்டாவது சங்கிலியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.. இந்த இரண்டாவது சங்கிலி என்ன தெரியுமா?… ‘பயம்’.

பயம்

இந்தப் பயம் என்பது மிக வலிமையானதொரு உணர்வு.. எத்தகைய ஒரு செயல்பாட்டையும் முடக்கிப் போடக்கூடிய ஆற்றல் இந்தப் பயத்திற்கு உண்டு. மிகப் பெரிய வீர்ர்களுக்கும் சில விசயங்களிலாவது பயம் இருக்கும்.. புலியை வேட்டையாடக்கூடிய வேட்டை யாளருக்கு நரியைக் கண்டால் பயமிருக்கலாம்… கணவனுக்கு அஞ்சாத காரிகைகளைக்கூட கரப்பான் பூச்சி பயமுறுத்தவதில்லையா?

ஆகவே பயம் என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சந்திக்கின்ற மிக முக்கியமானதொரு உணர்வு.. எனவே இந்தப் பயத்தைக் கையாள்வது எப்படி? என்பதைக் கற்றுக்கொள்வது அவசிமாகிறது.

அடிப்படையில் பயத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.. ஒன்று நல்ல பயம்.. மற்றொன்று கெட்ட பயம்… (இதிலும் எதையும் இரட்டைத் தன்மையா) என்று நினைக்காதீர்கள்… எதையும் வரையறத்துப் புரிந்து கொள்ளுதல் ஆளூமைத் திறனூக்கப் பயிற்சிக்கு முக்கியமானது)

நல்ல பயம்

நல்ல பயம் என்பது நமது நண்பன்… நீங்கள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது திடீரென்று மிரண்டு உங்களை நோக்கி பாய்ந்து வருகின்றது ஒரு மாடு… நீங்கள் துள்ளிக் குதித்து அதன் பாதையில் இருந்து அதன் பாதையில் இருந்து விலகி தப்பிக்கிறீர்கள்.. இந்த உந்துதலை உங்களுக்குக் கொடுத்தது எது? உங்களுடைய பயம்தான்…. இது இல்லையென்றால் மாடு முட்டினால் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாகவே நீங்கள் உணர்ந்து கொள்ள நேரிட்டிருக்கலாம்…

இந்த நல்ல பயத்தை இயற்கை நம்முடைய ஆதார உணர்வுகளில் பதித்து வைத்திருக்கிறது.. (Fear is a basic instinct..)… இப்படி பல்வேறு சூழ்நிலைகளில் நம்மைப் பாதுக்காத்துக் கொள்ள இந்த அடிப்படையான பய உணர்வு நமக்கு அவசியமானதுதான். இந்தப் பயம் ‘நல்ல பயம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கெட்ட பயம்

ஆனால் இந்த கெட்ட பயம் என்று ஒன்று இருக்கிறதே… அது நமக்கு ஏற்படுத்துகின்ற ஆற்றல் இழப்பு அளவற்றது.. இந்த கெட்ட பயம் “ஒரு வேளை அப்படி நடந்தால்.. ” என்கிற (“What if, if it happens?”) எதிர்மறை சிந்தனையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது…’ஒரு வேளை நான் என் செல்வத்தை எல்லாம் இழந்துவிட்டால்….’ ‘ஒரு வேளை எனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டால்..’ இப்படிப்பட்ட “ஒரு வேளை” சிந்தனைகளின் அடிப்படையில் எழும்புகின்ற பயமானது நம்மைப் படுத்துகின்ற பாடு சொல்லி மாளாது…

“நெருப்பாவது உயிரற்ற பிணத்தைதான் எரிக்கும்…….. பயமும் அதையொட்டிய கவலையுமே உயிரோடு உள்ள மனிதனையே எரித்துவிடக்கூடியது” என்பது சான்றோர் வாக்கு.. இப்படி மனிதனை வாட்டி வதைக்கின்ற பயம் அவனுடைய சிந்தனைகளில் பெரும் பகுதியையும், சிந்திக்கின்ற நேரத்தின் பொன்னான மிகப் பெரும் பகுதியையும் ஆக்கிரமித்துக்கொண்டு அளப்பரிய மனித ஆற்றலை கொள்ளை அடித்துக் கொள்கிறது.

இதில் இன்னொரு புள்ளி விவரத்தையும் சொல்லி விடுகிறேன்.. நம்முடை பயங்களில் 95 சதவிகிதம் நிஜமாவதில்லை.. இப்போது யோசித்துப் பாருங்கள்.. 95 சதவீதம் நடக்காத காரியத்திற்காகப் பயப்பட்டு, பயப்பட்டு… நம்முடைய ஆற்றல்களை நாமே வீண்டித்துக் கொண்டிருக்கிறோம்… எவ்வளவ உமிகப் பெரிய பேரிழப்பு இது.. யோசித்துப் பாருங்கள்… (இதனாலேயே ‘மிகப் பெரிய’ மற்றும் ‘பேரிழப்பு’ என்று Double superlative போட்டிருக்கிறேன்..)

பயத்தின் தன்மை

சரி.. இந்தப் பயத்தை போக்கிக் கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.. ஆனால் அதற்கு முன்னால் பயத்தின் சில தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.. 95 சதவிகித பயங்கள் நிஜமாவதில்லை என்ற புள்ளி விவரத்திலிருந்து நாம் ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்… பயம் என்பது ஓர் தவறான எண்ண முனைப்பு என்பதே அந்த உண்மை… (wrong focussing) நடைமுறைக்கு வருவதற்கு மிக்க் குறைந்த சாத்தியமே உள்ள ‘விசயங்கள் மீது நாம் தேவையே இல்லாமல் நமது எண்ணங்களைக் குவிக்கிறோம்.

இத்தகைய தவறான குவிப்பு காரணமாகவே இந்தப் பயங்கள் எழுகின்றன. . அது மட்டுமில்லாமல் அவை எழுந்தபின் பூதகரமாக உருவெடுக்கின்றன.

இந்தப் பயங்களுக்கு அடிப்படையையும் அவற்றிற்கு வலிமையையும் தருவது நமது தவறான எண்ணக் குவிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…. ஒரு வெள்ளையான சுவரில் மத்தியல் இருக்கக்கூடிய சிறிய கறுப்புப்புள்ளி நமது கவனத்தைக் கவரும்… அதன் மேல் கவனத்தை நாம் குவித்தேமேயானால் அதுவே நமது எண்ண ஓட்டத்தை ஆக்கிமித்துக் கொள்ளும்… அந்த எண்ண ஓட்டத்திலிருந்து அது வலிமைப் பெறும்… விரைவில் மிகப் பரவலாக உள்ள சுவரின் வெண்மையை நாம் மறந்து விடுவோம்.. மிகவும் குறுகியதாக உள்ள அந்தக் கரும்புள்ளியை மிகப் பெரியதாக்க் காணத்தொடங்குவோம்.. (it is we who make monsters out of our fears)- என்கிறார் கவிஞர்.

பயத்தை போக்குவது எப்படி?

ஆகவே நமது தவறான எண்ண முனைப்பைச் சரிபடுத்துவதுதான் பயத்திற்கான தீர்வாக அமையும்.. விசயங்களைப் பூதாகரப்படுத்திப் பாராக்காமல், அவற்றை அவற்றின் சரியான தன்மைகளோடு பார்ப்பதே பயத்திற்கான நிவாரணம் ஆகும்.. (to see things as they are is the key to cure fear)…

சரியான எண்ண முனைப்புதான் பயத்தைப் போக்கும்.. அந்தச் சரியான எண்ண முனைப்பைக் கீழுள்ள பயிற்சி முறையால் கொணர முடியும்.

உதாரணத்திற்கு ஒரு செயலைச் செய்ய உங்களுக்கு பயமாய் உள்ளது என்று வைத்துக்கொள்வ்வோம்.. புதிதாக ஒரு தொழில் தொடங்குவது என்று வைத்துக்கொள்வோமே… அந்தக் தொழிலைத் தொடங்குவதால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளில் உங்கள் கவனம் குவிந்திருக்கும்.. ஒரு வேளை இந்த்த் தொழிலில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டால் என்னாகுமோ என்ற பயம் உங்களைச் செயலிழக்கச் செய்திருக்கும்.

அந்தத் தொழிலில் இழப்பு ஏற்படுவதற்கு சாத்தியம் உள்ளதுதான்… ஆனால் அந்த இழப்பின் மேலேயே நாம் கவனத்தை வைத்தால் அந்த இழப்பு எண்ணங்கள் வலுப்பெறும்.. அந்தத் தொழில் தொடங்கினால் கண்டிப்பாக இழப்புதான் நேரிடும் என்ற முடிவிற்கே நாம் விரைவில் வந்து விடுவோம்.. இதுதான் நம்முடைய தவறான எண்ண முனைப்பின் விளைவு (effect of wrong focussing) .. இதன் காரணமாக நாம் தொழில் தொடங்குவதால் ஏற்படக்கூடிய வேறு இரண்டு விளைவுகளை கவனித்தில் எடுத்துக்கொள்வதே கிடையாது.. அந்த இரண்டு விளைவுகள் 1). மிக நல்ல விளைவு மற்றும் 2) சாதாரண விளைவு என்பவையே…

நீங்கள் புதிய தொழில் தொடங்குவதால் மிகச் சிறந்த நல்ல விளைவும் ஏற்படலாம்.. இந்த இரண்டு விளைவுகளிலும் நாம் கவனத்தைச் செலுத்தாமல் மோசமான விளைவில் மட்டுமே கவனத்தைச் செலுத்துகிறோம்…

இந்தத் தவறான எண்ண ஓட்டத்தை விடுத்து நாம் அனைத்தையும் தழுவிய ஓர் பார்வையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.. (Overall view) அப்போதுதான் நாம் அனைத்தையும் அதனதன் சரியான தோற்றத்தில் பார்க்க முடியும்.. எப்படி அந்தச் சரியான தோற்றத்தை அடைவது…?

ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்ய பயப்படுகின்ற செயலை தலைப்பில் எழுத்திக்கொள்ளுங்கள்.. கீழுள்ள இடத்தில் மேலிருந்து கீழாக மூன்று பாகங்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள். (three columns) அவற்றில் கீழ்கண்டவாறு எழுதிக்கொள்ளுங்கள்.

புதிய தொழில் தொடங்குதல்

மிக மோசமான விளைவு

எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படாலம்.. பெரிய நட்டம் அடையலாம்..

சாதாரணமான விளைவு

தற்போது இருப்பது போன்ற நிலையே தொடரலாம்.. பெரிய அளவில் நட்டமோ லாபமோ இல்லாமல் சமமான நிலையில் விளைவு ஏற்படலாம்.

மிக நல்ல விளைவு

மிகப் பெரிய இலாபம் கிடைக்கலாம்.. நாம் மிகப்பெரிய செல்வந்தன்.. ஆவேன்… எனது கனவுகள் எல்லாம் நிறைவேறும்.. எனது குடும்பத்திற்கு வேண்டிவற்றை நிறைவாக செய்ய முடியும்.. சமுதாயத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்ய முடியும்!

இப்போது இந்த மூன்று விளைவுகளையும் ஒரு சேரப் பாருங்கள்… அப்போதுதான ஒரு சமச்சீரான, ஓர் ஒட்டுமொத்த பார்வை கிடைக்க முடியும். அனைத்துத வாய்ப்புகளையும் மிகைப்படுத்தாமலும் குறைக்காமலும், அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே பார்க்க முடியும்….

இப்படிப் பார்க்கும் போது உங்களின் பெரிதாக்கப்பட்ட பயம் மறையும்.. உங்களால் ஒரு தீர்மான முடிவை எளிதாக எடுக்க முடியும்.. உங்கள் பயம் சம்பந்த்பட்ட அனைத்து விசயங்களையும் நீங்கள் இது போன்று ஆய்வு செய்யலாம்.. தெளிவான முடிவுகளையும் எடுக்கலாம்.

செயலே இறுதித்தீர்வு

ஆனால் முடிவு எடுப்பதோடு நின்று விடாதீர்கள்.. செயலில் இறங்குங்கள்.. ஏனென்றால் பயத்திற்கு இறுதித்தீர்வு செயல்பாடே.. Action cures fear என்பதை மறந்துவிடாதீர்கள்….

நீச்சல் கற்றுக் கொள்வதற்கு முன் உங்களுக்குத் தண்ணீரைக் கண்டு பயம் இருந்திருக்கும்.. அந்தப் பயம் எப்போது போனது? முதன் முதலில் தண்ணீரில் குதித்த பிறகுதான் போயிருக்கும். (உங்களுகு நீச்சல் கற்றுக் கொடுத்தவர் நீங்கள் எதிர்பார்க்காத்த நேரத்தில் உங்களைத் தண்ணீரில் தள்ளியிருக்கக்கூடும்.. ஒரு திடீர் செயல்பாட்டால் உங்களை தண்ணீர் பயத்தைப் போக்கவே அவர் அப்படிச் செய்திருப்பார்.)

ஆகவே செயல்பாடே பயத்திற்கு எதிரான இறுதி வெற்றியைப் பெற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் செயல்பட மறுக்கிற ஒவ்வொரு கணமும் நமது பயத்திற்கு வலுவை ஊட்டிக்கொண்டு இருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும். ஆகவே திடமாக ஒரு முடிவெடுத்தவுடன் உடனே செயல்படத் தொடங்குங்கள்…

நாம் மேலே செய்த ஆய்வெல்லாம் அந்த வெற்றிக்கான செயல்பாட்டை செய்வதற்காக நம்மை நாமே ஊக்குவித்துக் கொள்வதற்காகத்தான்.. ஆகவே நண்பர்களே… மறந்து விடாதீகள்.. Action Fear….

மறுபடியும் சந்திப்போம்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்