Home » Articles » கடவுள் பிரபஞ்சம் மனிதன்

 
கடவுள் பிரபஞ்சம் மனிதன்


சூரியன்
Author:

– சூரியன்

கடவுள் – பிரபஞ்ச சக்தி – தன்மைகள்

ஒரு பொருளை எடுத்துப் பகுத்துக்கொண்டே போனால் – அணு – புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் – மேலும் மேலும் பிரித்தால் நுண்துகள்.. இறுதியில் ஒன்றுமில்லை. வெட்டவெளி – Space. இதை நம் முன்னோர்கள் “சுத்த வெளியே சிவம்” என்றார்கள். “அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்ற பரம்பொருள்” என்றார் தாயுமாணவர்.

“தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்” என்பர் ஞானிகள். ‘பரம பிரம்மம்’, ‘முழுமுதற் பொருள்’ ‘ஆத அந்தமில்லா அருட் பெருஞ்சோதி’, ‘இறைவன்’, ‘இயற்கை’.. என்று எப்படி அழைத்தாலும் அடிப்படையில் ஒன்றே ஒன்றிலிருந்து இவ்வுலகம் ஆனது.

அந்த ஒன்றின் – அந்தக் கடவுளின் தன்மைகள் என்ன? அது பேராற்றல் மிக்கது. பேரன்பு கொண்டது. நீதி மிக்கது, ஆற்றல் மிக்கது. ஒழுங்குத் தன்மை உள்ளது. அழகுத்தன்மையுள்ளது. இது படைப்பின் அம்சங்களைப் பார்த்தால் நமக்குப் புலப்படுகிறது. பிரபஞ்ச சக்தி கருணை மிக்கது. பேரறிவுள்ளது. மனித்களைப் படைக்கும் முன்பே இங்கு உணவுப் பொருட்கள் படைக்கப்பட்டு விட்டன. மனிதனை படைத்துவிட்டு வைட்டமின் A, B, C, D, E கலந்த உணவை எப்படித் தயாரிக்கலாம். எப்படி உருவாக்கலாம் என்றுயோசிக்கவில்லை. மனிதன் இங்கு வரும்போது எல்லாம் தயாராக இருந்தது. தண்ணீர், காற்று தாயாராக இருந்தது. காற்றிலே மொத்தக் காற்றை உள்ளே இழுக்கிறோம். அதில் ஆக்சிஜன் மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற கார்பன் – டை – ஆக்சைடு வெளியே விடக்கூடிய நுரையீரல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல நாம் சாப்பிட்ட மட்டும் செய்கிறோம். ஆனால், உள்ளுக்குள்ளே என்னென்ன அமிலங்கள் சுரக்கணும். எவ்வளவு நேரம் அந்த உணவு அந்த இடத்திலே இருக்கணும், எப்படி இரத்தமாக மாறணும், இப்படி எல்லாமே கருணை, அறிவு, ஒழுங்குத் தன்மை உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரபஞ்ச சக்தி நமக்கு எது செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு நன்மை இருக்கும். ஆகவே நண்பர்களே, நம் வாழ்க்கையில் எது நடந்தாலும், இந்தப் பிரபஞ்ச சக்தி ஒரு நன்மை செய்கிறது என்பதுதான் உண்மை.

உடன்பாட்டு எண்ணங்கள் (Postive Attitude)

இந்த வாழ்க்கையில் எல்லாச் செயல்களும் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நேற்றுவரை எத்தனையோ செயல்கள் நடந்து இருக்கின்றன. நம் வாழ்க்கையில் சில பிடித்து இருக்கின்றன. எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், துன்பங்கள், மனக் காயங்கள் என்று பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கலாம். இவை எல்லாம் இந்த பிரபஞ்ச சக்தி நம்மை பக்குவப்படுத்துவதற்காக, ஏதேனும் ஒரு நன்மைக்காக அவற்றை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். இது ஒரு (Positive Attitued) உடன்பாட்டு மனநிலை.

நிகழ்ச்சிகளை வளர்ச்சிக்குப் பயன்படுத்துக(Possibility Thinking)

இந்தச் செயல்களை எப்படி நம்முடைய வாழ்வின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது என சிந்திக்க வேண்டும். எப்படிப்பட்டட செயல் நிகழ்ந்தாலும் அதை எப்படி நம்முடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது என்ற நோக்கத்துடன் பார்க்கின்ற மனநிலை உள்ளவர்கள் தொடர்ந்து வெற்றியடைவார்கள்.

செயல் விளைவுத் த்த்துவம் ( Cause and effect theory)

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கல்லை தூக்கிக் குளத்தில் போடுகிறோம். கல்லைப் போடுவது செயல், விளைவு அலைகள். ஒரு பொருளை தரையை நோக்கிப் போடுகிறோம். போடுவது ஒரு செயல். விளைவு சத்தம். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கிறது. இதே போல வாழ்க்கையிலும் சரி, தொழிலும் சரி நாம் செய்கின்ற ஒவ்வொரு செயுக்கும் ஒரு விளைவு இருக்கிறது. விளைவை மாற்ற வேண்டுமென்றால், செயலை மாற்ற வேண்டும். எனவே நமக்கு மகிழ்ச்சி வேண்டுமென்றால் வெற்றி வேண்டுமென்றால், வளர்ச்சி வேண்டுமென்றால் அதற்குரிய செயலை செய்தால், விளைவு வந்தே தீரும். இது இயற்கை நியதி.

செயல் – காலம் – விளைவு

‘வெற்றி தள்ளிப் போடப்பட்டுள்ளது. மறுக்கப்படவில்லை’ இது எதற்காக சொல்லப்பட்டுள்ளது என்றால், சிலபேர் வந்து, “தொழிலை நன்றாக செய்கிறேன். கடமையை ஒழுங்காக செய்கிறேன் எனினும் பலன் ஒன்றுமே வரவில்லையே – நான் இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டேன். இன்னுமே பலன் வரவில்லையே, தொழில் வளர்ச்சி இல்லையே’ எனச் சொல்லுவார்கள். இவர்களுக்காகச் சொல்வது என்னவென்றால், நீங்கள் செயல் செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குப் பலன் வரும். சில சமயம் உடனே வரலாம். அல்லது கொஞ்சம் தள்ளி வரலாம். தள்ளி வருவதால் பலன் இல்லை என்று இல்லை. கண்டிப்பாக பலன் வந்தே தீரும். இதைத்தான் பகவத் கீதையில், ‘கடைமைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!’ என்று கருத்து அல்ல. நீங்கள் கடமையைச் செய்தால், உங்கள் தொழிலைச் சரியாகச் செய்தால் அதற்குரிய பலன் நிச்சயம் என்பதே நாளும் முழுமையாக, ஈடுபாட்டுடன் செய்வோம். அதற்குரிய பலன் வந்தே தீரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2004

கடவுள் பிரபஞ்சம் மனிதன்
மனித வளமேம்பாடு
வியர்வைத் துளிகளை விதைப்போம்
யாமறிந்த சிலம்பொலியார்
சிகரத்தை நோக்கி…
பொங்கல் வாழ்த்து
ஆசையும் ஆரோக்கியமும்
உள்ளத்தோடு உள்ளம்
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
கேட்காதீர்கள் கொடுக்கப்படும்
மனதின் ஆற்றலை வளர்க்கும் மலேசியவாவின் தமிழ்க் காதலர்
திடமான தன்னம்பிக்கை
நிரந்திர வெற்றிக்கு உழைத்திடுவோம்
கொடிது கொடிது.. திறமையில் வறுமை
நம்மைப் பிணைக்கும் சங்கிலி
நினைவாற்றல் பயிற்சி வித்தகர்
பொங்கல் சூளூரை!
ஆசிரியர் சு.செ. ஆண்டு பல வாழ்க!
தாரக மந்திரம்
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
நீங்களும் எழுத்தாளராகலாம்
பவளவிழா காணும் பண்பாளர்
சித்திரச் சிலம்பின் வித்தகப் பரல்
உளிபட்டால் சிலையாகலாம் உழைத்திட்டால் வளமாகலாம்
புத்தாண்டில் புறப்படு!
மாணவர் பெற்றோர் பக்கம்