Home » Articles » அனைத்தும் உணர்!

 
அனைத்தும் உணர்!


இளைய பாரதி
Author:

நண்பனே!
வசந்தத்தை மட்டுமே
வாசலில் எதிர்கொள்ள
எப்போதும் எண்ணாதே!

எழும்பும்
சின்னச்சின்ன
சூறாவளியையும்
சிநேகமாக்கத் தெரிந்துகொள்!

வாழ்க்கைப் பந்தயத்தில்
வெற்றியைத் தழுவுமுன்
தோல்வியையும் – கொஞ்சம்
தொட்டுப்பார்!

இனிப்புடன்
சேர்த்து
கசப்பையும் உணரக்
கற்றுக்கொள்!

காலம் சொல்லித்தருவன
அனைத்தையும்
கட்டாயப்பாடமென
ஏற்றுக்கொள்!

மயிலாடுதுறை இளையபாரதி, சென்னை.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்