Home » Cover Story » வெற்றி முகம்

 
வெற்றி முகம்


பாலசுந்தரம்
Author:

முதுபெரும் தொழிலதிபர்
டெக்ஸ்டூல் பாலசுந்தரம்
இந்த இதழிலும் தொடர்கிறார்…

சிறு தொழில்கள் எல்லாமே சிக்கலைச் சந்திக்கக் கூடிய சூழல் இப்போது நிலவுகிறது. யான் ஏற்றுமதி மட்டுமே நல்ல முறையில் செயல்படுகிறது. நவீனமயமாக்களின் முயற்சிகள் எங்கள் காலத்திலேயே தொடங்கியது. கதரை மாராட்டையில் நூற்றுக்கொண்டு இருந்தார்கள். தொழில் துறை அமைச்சராக சி.எஸ். இருந்த காலகட்டத்தில் கதர் நூற்புப்பணியை இயந்திர மயமாக்க முடிவு செய்தார்கள்.

அதற்கான இயந்திரத்தை வடிவமைக்கும் பொறுப்பு டெக்ஸ்டூல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை உருவாக்கி திட்டக்குழுவின் முன்பு வைத்தோம். குடிசைகளில் வைத்து இயங்கும் விதமாக இன்னும் எளிமையாய் இருக்க வேண்டும் என்று நேரு சொல்லிவிட்டார். எனவே மறுமுறை சிலமாற்றங்களை செய்து காண்பித்தோம்.

ரயில்வே சிக்னல் தாயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். அதேபோல, நெய்வேலி லிக்னைட்டிற்கு ஜெர்மனியிலிருந்து இயந்திரம் ஒன்று வந்தது. நிலச்சுரங்கத்தில் பிளேடு ஒன்று குத்தி எடுக்கும் விதமாக அந்த இயந்திரம் செயல்பட்டது.

இங்கே அந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகிக் கொண்டிருந்தது. ஜெர்மன் நிறுவனத்தார் என்ன முயன்றும் அதனை சரி செய்ய முடியவில்லை. அதே இயந்திரம் ஜெர்மனியில் நன்றாக செயல்பட்டதுதான் ஆச்சரியம்.

பிறகு பரிசோதித்ததில் ஒன்று தெரிந்து. அந்தபளேடு சுரங்கத்தில் போய்க் குத்தி எடுக்கும் இடத்தில் மணல் இருந்தது. ஜெர்மனியில் மணல் இருக்காது. அந்தச் செய்தது. இங்கே மணலை குத்தி எடுக்கும்போது பழுதாகிவிட்டது. எனவே, அந்த பிளேடில் அதற்குத் தகுந்தாற்போல சில மாற்றங்களைச் செய்தோம். மாக்னைஸ் இரும்பு சேர்ந்த பிறகு சரியாக இருந்தது. அதற்குப்பிற்கு இயந்திரம் பழுதாகவில்லை. அதிலிருந்து டெக்ஸ்டூலுக்கு கரண்ட்கட் இருக்காது. நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தோடு நல்ல தொடர்பு வைத்திருந்தோம்.

இவையெல்லாம் ஒரு தனி மனிதர் செய்கிற காரியங்களல்ல. குழுவாக சேர்ந்து உழைக்கும் போதுதான் வெற்றி பெற முடியும். இரவு பகலாக உழைத்து பல விஷங்களைச் சாதிக்கும் மனித வளம்தான் இதில் முக்கியம்.

ஒரு காலத்தில் டாடாவுக்கு இணையான அளவு இரும்பு கொள்முதல் செய்தது டெக்ஸ்டுல் நிறுவனம் என்றால் இணைந்து உழைத்ததே இதற்குக் காரணம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2003

அனைத்தும் உணர்!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
இமயமும் தாழட்டும்….
பல்வேறு திறன்களை வளர்ப்போம்
பார்க்கும் கோணத்தை மாற்றுங்கள்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு மணி நேரப் படிப்பு 10 நிமிட புத்துணர்வு
உள்ளத்தோடு உள்ளம்
தோள்கள் தொட்டு பேசவா
பப்பாளிப் பழம்