Home » Articles » வாழைப்பழம்

 
வாழைப்பழம்


யோகி இராஜேந்திரா
Author:

Health corner

யோகி இராஜேந்திரா,திருப்பூர்

பழங்களைப் பற்றி செய்திகளில் இதுவரை நாம் சாறுள்ள பழங்களைப்பற்றித் தெரிந்து கொண்டோம். இனி, சதையுள்ள பழங்களையும் அறிந்து கொள்வோம்.

இயற்கையின் படைப்பில், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், வாழை என்று ஏராளமான வகைகள் உண்டு. சதையுள்ள பழங்களில் என்ன சத்து அடங்கியுள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நாம் தினசரி சாப்பிடுகின்ற அரிசி, கோதுமை தானியங்களில் அடங்கியுள்ள கார்போஹைடிரேட் அதாவது மாவுச்சத்து இதில் நிரம்பியுள்ளது.

சதையுள்ள பழங்களில் மா, பலா, வாழை இந்த மூன்றையும் முக்கனிகள் என் பார்கள். இவற்றில் வாழைப்பழம் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

வாழைப்பழம் ஆண்டு முழுவதும் சாகுபடியாவதால் எல்லா இடங்களிலும் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றது. இறை வழிபாட்டிலும், சுப சடங்குகளிலும் இன்றியமையாத ஒன்றாகப் பயன்படுகின்றது. என்வே, இப்பழம் நீண்ட நெடுங்காலமாக மனிதனின் முக்கிய உணவாக இருந்து வந்திருப்பதை உணரலாம்.

வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. அவைகளின் தரத்தை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம். இ

1. செவ்வாழை

2. விருப்பாச்சி

3. நேந்திரம்பழம்

4. தேன்வாழை

5. நாடம்பழம்

6. ரஸதாளி

7. பூவன்பழம்

8. மோரீஸ் ( பச்சைப்பழம் )

சாப்பிடும் முறைகள் மற்றும் நன்மைகள்

பெரும்பாலானவர்கள் உணவுக்குப்பின் வாழைப்பழ்ம சாப்பிடுகின்றனர். இது தவறு, ஏற்கனவே நமது உணவில் மாவுச்சத்து இருப்பதால், மீண்டும் அதை சத்துள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை கூடிவிடும. எனவே இதனை தனி உணவாகச் சாப்பிடுவதே நல்லது.

ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போன்ற மூளை உழைப்பாளிகள், காலையில் உணவில் இட்லி தோசை இவற்றைத் தவிர்த்துவிட்டு இரண்டு செவ்வாழைப்பழம், ஐந்து பேரீச்சம்பழம் சிறது தேங்காய் சேர்த்துச் சாப்பிட்டால் மதியம் வரை உற்சாகமாகப் பணியில் ஈடுபடலாம்.

” கலை உணவு கவலையின் தொடக்கம்” என்று சொல்வார்கள். எனவே, நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்கள் தயவுசெய்து இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்துத் தருவது நல்லது.

இப்பழத்தினைப் பாலில் போட்டு வேகவைத்துச் சாப்பிட்டால் மூலவியாதி தனியும். உஷ்ணத்தினால் உடலில் தோன்றும் கட்டிகளின் மீது இதைக் குழைத்துப் பூசலாம்.

அம்மை, டைபாய்டு, காமாலை நோய் கண்டவர்களுக்கு வாழைப்பழமே சிறந்த உணவாகும்.

வாழைப்பழத்தில் மாவுச்சத்துமட்டுமல்லாமல் வைட்டமின் A, B, C, ஆகய சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஜீரண சக்கதியை அதிர்க்கச் செயவதோடு மலச்சிக்கல் நீக்கவும் உதவும்.

மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்குப் புத்துணர்ச்சியையும் தரவல்ல வாழைப்பழத்தை இனிமேலாவது முறையோடு உண்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2003

திண்ணையக் காணோம்
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
செயல்திட்டம் தீட்டுங்கள்
உயிர்த்தெழு நண்பனே!
படிக்கும் முறைகள் தேர்வுகளில் சிறப்பான வெற்றி 9
தோல்விகளைத் துரத்த…
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
சிறந்த நண்பர்கள்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தொண்ணூறைத் தொடும் தொழில்மேதை டெக்ஸ்டூல் திரு. பாலசுந்தரம்!
உள்ளத்தோடு உள்ளம்
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை
படிப்போம் படிக்க வைப்போம்!!
நாமக்கல் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் உதயம்
தாழ்வு மனப்பான்மை
தோள்கள் தொட்டுப் பேசவா?
வசப்படுத்திக்கொள்
கடவுள் பிரபஞ்சம் மனிதன்
கோவை சுயமுன்னேற்றப் பயிரங்கம்
புதிய குழந்தை
உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
வாழைப்பழம்
உறவுகள்…. உணர்வுக்ள்….