Home » Articles » பயிலரங்கம் கனவா? நனவா?

 
பயிலரங்கம் கனவா? நனவா?


சாந்தாசிவம்
Author:

‘ உங்களுக்காக ‘ திருமதி. சாந்தாசிவம்

பெரும்பாலும் நம்மில் பலருக்கும் நாம் இப்படி ஆக வேண்டும். அவரைப்போல் உயரவேண்டும். என்ற கனவுகள் நிறைய அதுவும் பயிலரங்கத்திற்குச் செல்பவர்களுக்கு இதெல்லாம் வாழ்வின் உச்சக்கட்டக் குறிக்கோள். பயிலரங்கத்திற்குச் செல்பவர்களுக்கு இதெல்லாம் வாழ்வின் உச்சக்கட்டக் குறிக்கோள். பயிலரங்கம் நடத்துனர்களுடனும் அதைக்கேட்க வரும் நண்பர்களுடனும் ஒரு சகஜமான நட்புநிலை உருவாக்கத்தான் இந்தக் கட்டுரை.

நமக்குள் பல திட்டங்கள் – பல குழப்பங்கள் – போராட்டங்கள் கூட! பலரும் இந்த நிலையில் பயிலரங்க ஹாலுக்குள் நுழையலாம்.

சிறந்த பேச்சாளர், வாழ்க்கையின் அடிப்படைக்குத் தேவையான மிக முக்கியமான தலைப்பின் கீழ் பேச இருக்கிறார். நமக்கோ எவ்வளவு நாளாக இவரைப் பார்க்க இருந்தோம், இன்றுதான் கிடைத்திருக்கிறது, அரிய வாய்ப்பு என்ற சமாதானம். கூடவே ஒரு பரபரப்பு, பயிற்சியாளர் பேச ஆரம்பித்ததும் அவரின் ஆரம்ப உரையிலேயே நாம் உற்சாகத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இதெல்லாம் வெளிமனத்தின் செயலால். உள்மனமோ வேறு சில விஷயங்களில் நுழைந்திருப்புது என்னவோ நிஜம். எல்லோருமே அல்ல. ஆனால் பலரின் நிலைமை இதுதான்.

கனவுத் தொழிற்சாலையிலிருந்து விடுபட்டால்தான் திறமையான பயிலரங்க நடத்துனரின் உபயோகமான பேச்சைக் கேட்க முடியும். நாம் எப்போதுமே உள்மனத்தால் வேறொன்றை நினைத்து மனம் நிரம்பி வழியுமாறே செய்து கொண்டிருக்கிறோம்.

பயிலரங்கங்கள் தற்போது சக்தி வாய்ந்த உற்சாக டானிக்காக இருக்கின்றன. பல விஷயங்களைப் பேசி, தன்னம்பிக்கையுள்ளவர்களாக ஆக்குகிறார்கள்.

இதில் குறைந்தபட்சமாக நாம் ஒன்றிப்போய் கவனிக்கும் மனோசக்கதியை பெற்றிருக்க வேண்டும். நம் மனதை கற்பனைக் குதிரையாக ஓடவிட்டு இருப்பதைத் தவிர்த்து மனதை ஒருநிலைப்படுத்திக் கேட்கும் திறனை வளர்த்துக்கொண்டால் வாழ்வில் நாம் பந்தயக் குதிரையாக சளைக்காமல் ஓட முடியும்.

ஆசிரியர் பாடம் நடத்துகிறார் என்றால் பசு புத்திபோல் கேட்கும் திறனை வளர்த்துக் கொண்டால்தான் அந்த மாணவன் மனதால் ( மாடு புல்லை மீண்டும் வாய்க்கு கொண்டுவந்து அசைபோடுவதைப் போல் ) பாடத்தை மீண்டும் அசைபோட முடியும். தேர்ச்சியும் பெறமுடியும். இல்லையெனில் பல வருடங்கள் அதே வகுப்பில் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

எங்கள் குடும்ப நண்பர் திரு. லேனா தமிழ்வாணன் நேரத்தைப் பற்றி அருமையான விளக்கப் பட்டியல் தந்திருக்கிறார். நூலாகவும் எழுதியிருக்கிறார். அவரைப்போல் கடை பிடிப்பதும் கஷ்டம் – அதைப் படித்தாலோ அவர் பேச்சைக் கேட்டாலொ பலரும் ஒரு இரண்டு நான் மேலே போனால் ஒரு நான்கு தாக்கு பிடிக்கிறது சார் அப்புறம் பழைய கதைத்தான். நீங்கள் சொல்வதுபோல் நேரத்தை வகைப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்கின்றனர், அவரிடமும், என்னிடமும், அவர் எழுதியதோ, பேசியதோ குறை காணமுடியாது. நாம் செயல்பட முடியாது மனதை அலைய விடுவதுதான் குறை என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்று.

உதாரணத்திற்கு, கண்கள் ஆடாது அசையாது நாம் உறக்க நிலையிருக்கிறோம் என்றால் நாம் கனவுகள் இல்லாத ஒரு சரியான உறக்க நிலையிருக்கிறோம் என்றே பொருள். கண்கள் நிலைகொள்ளாது சற்றே திறந்த நிலையில் இருந்தாலும், சுழன்றபடி ஆடிக்கொண்டிருந்தாலும் கனவுகளுடன் கூடிய உறக்க நிலையிலிருக்கிறோம் என்பதை அறிவோம்.

நல்ல கவனிப்புடன் மனம் அலைபாயாமல் எதிரிலிருப்பவரின் பேச்சைக் கேட்பதை நாம் எந்த இடத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாது போனால் கனவுகளுடன் கூடிய தூக்க நிலைக்குத் தள்ளப்படுவோம்.

அறிவு என்பது பாராசூட்டைப் போன்றது. விமானம் சரியில்லாதபோது பாராசூட் விரிந்து கொடுப்பதைப் போல் அறிவு விசாலமானால் நாம் எதையும் விழிப்புணர்வுடன் சிறப்பாகச் செய்யமுடியும்

அறிவு என்பதன் அர்த்தமே, நம் கடந்த கால அனுபவத்தையும், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள், பாதிப்புக்களை முன்னெச்சரிக்கையாக வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக நடந்து கொள்வதுதான். நெருப்பு சுடும் என்பதில் அறிவும் அனுபவமும் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு இது தெரியாது. நம் பெற்றோ இதை நமக்குத் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, மருத்துமனைக்கு நோயாளியாக சென்று டாக்டர் சொல்வதையெல்லாம் கேட்டு அவர் கடைபிடிக்கச் சொல்வதை மிகச் சரியாக செயல்படுத்தி நம் உடம்பை அக்கறையாக கவனித்துக் கொள்வோம். வீட்டிற்கு வந்ததும் அருகிலிப்பவர்கள் நம்மை அக்கறையாக கவனிப்பதாக நினைத்தும், நம் சபலத்திற்கும் நிறைய சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்வோம்.

எப்போதுமே, எதையும் ஒழுங்காகக் கடைபிடிக்க மறக்கிறோம். மறுக்கிறோம். இரண்டு நாள் மருந்து சாப்பிட்டு வீக்கம் வடிந்து விடுவதைப் போல் நம் உற்சாகம் இருக்கக் கூடாது.

ஒன்று கற்றவராகவோ, கற்பவராகவோ இருக்க வேண்டும். இல்லை கற்றுக் கொடுப்பவராக இருக்க வேண்டும். இம்மூன்றில் ஏதாவது ஒன்றாகவானது இருந்தால் உலகம் போற்று பவராக வாழ முடியும்.

பயிலரங்கம் நமக்கு உற்சாகத்தில் திளைக்க மட்டுமே. களைத்துப்போக அல்ல. கனவுகளை நனவாக்குங்கள். பயிலரங்கங்கள் நடத்துபவர்களின் கனவை நம்மால் நனவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இனி புது உற்சாகத்தோடு செல்லத் துவங்குங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2003

செயல்களைத் திரும்பிப் பாருங்கள்
HEALTH CORNER
ஈரோட்டில் ” சுதந்திரச் சுடர்கள்”
ஈரோட்டில் '' சுதந்திரச் சுடர்கள்''
மாணவர் பக்கம் பெற்றோர்
வெற்றிப் படிகள்
சிந்தனைத்துளி
உறவுகள்… உணர்வுகள் …
நோயின்றி வாழ்வது சுலபம்
சிந்தனைத்துளி
படிப்போம்! படிக்கவைப்போம்!!
கோவை தன்னம்பிக்கைப் பயிலரங்கம்
சிறந்த நண்பர்கள் வெற்றி தூண்கள்
பயிலரங்கம் கனவா? நனவா?
வெற்றிக்கு வழிகாட்டும் வெற்றியாளர்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
வேர்கள் உள்ளவரை
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
ஒரு முக்கிய அறிவிப்பு
பகிர்ந்து தருதல் பெரும் பேரின்பம்
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்