Home » Articles » நீங்கள் ஜெயிக்கத் தயாரா?

 
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?


admin
Author:

கோவை பயிலரங்கம்

தன்னம்பிக்கை மாத இதழும், கோவை வின்னர்ஸ் கிளப்பும் இணைந்து நடத்திய மே மாதத்திற்கான சுயமுன்னேற்றப் பயிலரங்கம், 11.02.03 அன்று காலை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.

கோவை வின்னர்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜ்குரு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னசி எல்.ஐ.சி. முகவரும், பல வெற்றிகரமான முகவர்களை உருவாக்கி, வழிநடத்திச் செல்பவருமான திரு. பி. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு ‘ எதுவும் முடியும் ‘ ( Anything is Possible ) என்ற பொருளில் உரை நிகழ்த்தினார். அவர் உரையிலிருந்து…

வெற்றிபெற, முன்னேற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியது மூன்று முக்கிய ” D ” க்கள். அவை

1. Desire – விருப்பம்

பல நேரங்களில் நம்முடைய சக்தி என்ன என்று தெரியாததற்குக் காரணம், நம்முடைய ஆசை அல்லது விருப்பம் எது என்று நமக்குத் தெரியாமல் இருப்பதுதான்.

2. Direction – வழிமுறை ( பாதை )

வாழ்க்கை வழிமுறையும், ஊருக்கச் செல்வதற்கான பாதையும் ஒன்றுதான். அதற்கான பாதையில் சென்றால்தான் வெற்றியை / ஊரை அடைய முடியும்.

3. Dedication – ( அர்ப்பணிப்பு )

மனப்பூர்வான ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்கள் வெற்றியை, நிறைவைத் தருவதில்லை. எதன் மீது உனக்கு அக்கரை இருக்கிறதோ அதன்மீது உனது பார்வை எப்போதும் இருக்கும்.

இந்த அடிப்படைப் பண்புகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வெற்றியாளாக மாறலாம்.

இந்தப் பண்புகளை, அடிப்படைகளை வளர்த்துக் கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை நீங்கள் கையாள வேண்டும்.

1. Compassion – மனித நேயம்

உங்களது ஒவ்வொரு செயலும், வெற்றியும் மனித நேயம் மிக்கதாக, பிறரை துன்புறுத்தாமல் பெற்றதாக இருக்க வேண்டும்.

2. Perfection – மிகச் சரியானதாக / மிகத் துல்லியமானதாக

உங்களுடைய ஒவ்வொரு செயலும், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் முழு மன நிறைவைத் தருவதாக, சிறப்பு மிக்கதாக அமைய வேண்டும்.

3. Value added Servive – மதிப்புக கூட்டும் சேவை.

நீங்கள் செய்யக்கூடிய பணி / சேவை கடமையே என இல்லாமல், அதை பெறுவர் மகிழ்வோடு, மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும்படியான, சேவையாக அமையவேண்டும்.

4. Building Relations – உறவுகளை வளர்த்தல்

நம்மோடு பணியாற்றுவோர் / தொழில் செய்வோர் / குடும்பத்தில் உள்ளோர் / நண்பர்கள் என எல்லா நிலைகளிலும் நமது உறவு மேம்பாடு அடைய பாடுபட வேண்டும். அப்போதுதான் தொடர் வெற்றிகள் கிட்டும்.

5. Activity – செயல்பாடு

அறிவு எவ்வளவு இருக்கிறது என்பது முக்கயமல்ல, அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எப்படித் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.

6. Leave the Comfort zone – இருப்பதுதான் சௌகரியமான வாழ்க்கை என்று, இருப்பதை அப்படியே ஏற்றுக்க கொள்ளாமல், நமது ஒவ்வொரு செயலும் நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

7. Learning is a continous process

கற்றுக் கொள்ளுதல் என்பது ஒரு தொடர் நிகழ்ச்சி, இது வாழும் வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உலகில் ‘ மாற்றம் ‘ என்ற ஒன்றுதான் மாறாதது. எனவே, மாற்றத்திற்கு தயாராய் இருப்பார்களே வெற்றிபெறத் தகுதி டைத்தவர்கள்.

நல்ல நூல்களை கூர்ந்து படித்தல், படித்ததை கிரகித்தல், படித்ததில் முக்கியப் பகுதிகளை அடிக்கோடிட்டு வைத்தல், பின்னர் அதை எழுதி வைத்து, மீண்டும் மீண்டும் அசை போடுதல், வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பற்றிப் பேசுதல் ஆகியன வெற்றியாளர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள்’ என்றார்.

நிகழ்ச்சியில், கோவை, கோவையைச் சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமின்றி தாராபுரம், மதுரை, திருநெல்வேலி, ஊட்டி, பவானி, கோவி, விருதுநகர், சென்னை, கேரளா மற்றும் தஞ்சாவுர் ஆகிய ஊர்களில் இருந்தும் 200க்கும் அதிக மானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்