Home » Articles » குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்

 
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்


சூரியன்
Author:


சூரியன்

மனதவள மேம்பாட்டு பயிற்சியாளர்

சொல்லக்கூடாதவை :

பல பெற்றோர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, அறிந்தோ, அறியாமலோ கீழ்க்கண்ட வரிசுகளைச் சொல்கின்றனர்.

X நான் உன்னிடம் பேசும்போது நீ எப்பவுமே கவனிப்பது இல்லை.

X நீ எப்பொழுதாவது எதையாவது சரியாகச் செய்திருக்கிறாயா?

X நீ வந்து உன் அப்பாவைப் போல (அ) அம்மாவைப் போலர ( சரியில்லாத தன்மை )

X நீ எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறாய்?

X உன்னால் பொறுப்பாகவே நடந்து கொள்ள முடியாதா?

X நீ ஒரு சோம்பேறி.

X உன்னால் செய்ய முடியாது.

X இந்த ஒரு முறையாவது நீ உண்மையாச் சொல்லு.

X நீ எப்பொழுதும் குறுக்கே குறுக்கே பேசுவாய்.

X உனக்கு எதற்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கணும்?

X நீ சரியில்லை.

X உன்னுடைய சகோதரன் / சகோதரி இப்படி பேசவே மாட்டாங்க.

X இனி நீ பேசும் ஒரு வார்த்தையைக் குட நான் கேட்கத் தயாரில்லை.

X நீ எப்பொழுமே குறைதான் சொல்வாய்.

X இந்த தடவையாவது ஒரு மாற்றத்திற்கு ஒரு நல்லது செய்.

X மனதில் உன்னைப்பற்றி நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய்

X நீ எதுக்குமே முக்கியத்துவம் கொடுக்கிறதில்லை.

X நான் எதையொமே ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுவிடுகிறாய்.

X பணம் மரத்தில் காய்க்கிறது என்று நீ நினைச்சுக் கிட்டுருக்கிறே.

X நீ எப்பவாவது, எதையாவது சரியாக செஞ்சுருக்கியா?

X நீ எதையுமே முயற்சி பண்றதில்லை.

X நீ உன்னைப்பற்றி ரொம்ப ஸ்மார்ட்னு நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

X உனக்குக் குழந்தைகள் பொறந்தால் உனக்கு அப்பத் தெரியும்.

X உனக்கு புடிச்சது தூக்கம்தான்.

X நீ எப்பவுமே விவாதம் செய்கிறாய்.

X உங்கிட்ட பேசறதும், சுவரிடம் பேசறதும் ஒன்று.

X நீ சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்ததே கிடையாது.

X நீ ஒரு சுயநலவாதி.

X நீ எதையும் சாதிக்கப் போறதில்லை

மேற்கண்டதைப்போல வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லும்போது. இவை குழந்தைகளின் உள்மனதில் பதிர்ந்து அவ்வாறு ஆகிவிடுவார்கள். எனவே இவற்றைத் தவிர்க்கவும் ( இருட்டைக் குறை கூறாதீர்கள். விளக்கேற்றுங்கள் )

சொல்ல வேண்டியவை :

v/ மிக அற்புதமாக செய்திருக்கிறாய்.

v/ நீ ஒரு வெற்றயாளன்.

v/ உன்னை நான் முழுமையாக நம்புகிறேன்.

v/ நீ நல்ல சுறுசுறுப்பாய் இருக்கிறாய்.

v/ மற்றவர்கள் உன்னை விரும்புகிறார்கள்.

v/ நீ செய்த முறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

v/ என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துவிட்டாய்.

v/ நீயே பொறுப்புகளை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாய்.

v/ நீ நேரத்தை நல்லபடி பயன்படுத்துகிறாய்.

v/ போனது போகட்டும். அடுத்த முறை நிச்சயமாக உன்னால் நன்றாகச் செய்ய முடியும்.

v/ நன்றாகச் செய்துள்ளாய்.

v/ ஒவ்வொரு நாளையும் வெற்றியான நாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறாய்.

v/ நீ சொல்வதை கவனமாக அக்கறையுடன் நான் கேட்கிறேன்.

v/ நீ ஒரு நல்ல நண்பன்.

v/ நீ மற்றவருடன் இனிமையாகப் பழகுகிறாய்.

v/ நீ ஒரு சாதனையாளன்

v/ நிச்சயமாக உன் வாழ்க்கையில் நீ வெற்றியடைவாய்.

v/ உன்னிடம் நன்றாகக் கவனிக்கும் தன்மை இருக்கிறது.

v/ உன் விசயங்களில் கவனமாக இருந்து சரியாகச் செய்கிறாய்.

v/ நீ பள்ளிப்படிப்பில் ஒழுங்காய் இருப்பது எனக்குப் பெருமையைத் தருகிறது.

v/ உன்னிடம் தனித்தன்மை உள்ளது.

v/ உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

v/ உன்னை நான் விரும்புகிறேன்.

v/ கடினமான வேலையும் எளிதில் செய்து விடுகிறாய்.

v/ உன்னிடம் நற்பண்புகள் நிறைய இருக்கிறது.

v/ உன்னிடம் திறமை நிறைய இருக்கிறது.

v/ சரியான பதிலைச் சொன்னாய்.

v/ நான் உனக்கு உதவட்டுமா?

இதுபோல வார்த்தைகளை வயதுக்குத் தக்கபடி அடிக்கடி சொல்லி வந்தால் நல்ல பதிவுகள் ஏற்பட்டு பண்பில் சிறந்தவராக வெற்றியாளராக குழந்தைகள் மாறுவார்கள். வாழ்வில் முழுவெற்றியடைவார்கள்.

—————————————————————–
திரு. சூரியன் அவர்கள் எழுதிய ” உங்கள் மகனை / மகளை படிப்பில் பண்பில் சிறக்க வளர்ப்பது எப்படி?” என்ற நூலிலிருந்து. இவை போன்ற பல செய்திகள் இந்த நூலில் உள்ளன. இது ஒரு தன்னம்பிக்கை வெளியீடு.
—————————————————

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2003

”சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை”
''சுதந்திர வெளிச்சங்கள் தேசத் தலைவர்கள் பற்றிய உரை"
மனதை திறந்து வையுங்கள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
பெற்றோர் பக்கம்
விழித்திடு!
வெற்றி ஊருக்குச் செல்ல…
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
மனதின் அடக்கமே வெற்றியின் தொடக்கம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம் : 32
சிந்தனைத்துளி..!
வெற்றியின் மனமே…
வெற்றி அழைக்கிறது
நீங்கள் ஜெயிக்கத் தயாரா?
அன்னாசிப் பழம்
வெற்றிக்கு உன் முகம்!
அன்பு வளரத் தீண்டுங்கள் தூண்டுங்கள்
சிந்தனைத்துளி
தோள்கள் தொட்டுப் பேசவா
தொட்டுவிடும் தூரத்தில்…
வெற்றிக்கு ஒரே வழி
தாத்தா சொன்ன தன்னம்பிக்கை கதை
சிந்தனைத்துளி
உறவுகள் உணர்வுகள்
குழந்தைகளிடம் சொல்லக்கூடியுதும் சொல்லக்கூடாததும்
பொதுவாச் சொல்றேன்
ஒருமித்த சிந்தனை வளர்ப்பு ( Concentration Development )
சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்