Home » Articles » தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை

 
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை


நிலா
Author:

கவிஞர் நிலா

சித்திரை மாதம், முன்னிரவு வேளை பௌர்ணமி நிலா பகல்போல காய்ந்து கொண்டிருந்தது. ” கமலம்… கமலம்…” தாத்தா மனைவியை அழைத்தார்.

”என்னங்க வேணும்….!”

”இந்தக் கட்டில பிடி, வாசல்ல போட்டு கொஞ்சம் காத்தட படுக்கிறேன்” என்றார்.

கட்டிலைப் போட்டதும் தோளில் கிடந்த துண்டை எடுத்து மடித்து தலைக்கு வைத்துப் படுக்கப் பார்த்தார்.

”தாத்தா…” என்று குழந்தைகள் தாவிவந்து தங்கள் தளிர் கரங்களால் தாத்தாவை அனைத்துக் கொண்டார்கள்.

”செல்வங்களா… உங்க பள்ளிக் கூடத்துல படிச்ச பாடத்துல இருந்து ஆளுக்கு ஒரு பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்” என்றார் தாத்தா.

”சரி… எல்லோரும் முன்னாடி வந்து உட்காருங்க” என்று சொல்லி… கதையைச் சொன்னார் தாத்தா.

சேர்வராயன் மலையின் வடபகுதியில் அடிவாரத்திலிருந்து ஆரவாரமில்லாமல் ஓடுகிற ஆறு தான் வாணியாறு. அந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓர் அழகிய சிற்றூர் முல்லைக்காடு அந்த ஊரில் அமைதிக்கும் சாந்தத்திற்கும் பெயர் போன பெரியவர் ஒருவர் வாழ்த்து வந்தார்!

எதுவும் அவரின் அமைதியைக் குலைத்து விட முடியாது. எந்த நிலையிலும் எவரிடத்தும் எக்காரணம் கொண்டும் அவர் கோப்ப்படதே இல்லை. அந்த் ஊரில் பலருக்கு இது வியப்பாகவே இருந்தது.

ஒரு நாள் குறும்புக்கார இளைஞர்கள் சிலர் ஒன்று கூடி, எப்படியும் பெரியவருக்கு கோப மூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

பக்கத்து ஊரில் உள்ள ஒரு முரடனை அழைத்து வந்நு , ” அந்தப் பெரியவருக்குக் கோபமூட்டி விட்டால்” உமக்கு 100 ரூ தருகிறோம் ‘ என்றனர்.

அந்தப் பெரியவர் தினமும் கால்யில் ஆற்றில் குளிப்பது வழக்கம்.

இளைஞர்கள் எல்லோரும் ஒடிப்போய் ஆற்றங்கரையில் இருந்த நாணல் புதிரில் மறைந்து கொண்டனர். ஆற்றில் குளித்து முடித்து கரையேறி வந்து கொண்டிருந்த பெரியவரின் அருகில் சென்ற முரடன் பெரியவரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்தான்.

பெரியவர் மெல்ல புன்னகைத்தார், பிறகு மீண்டும் ஆற்றுக்குச் சென்று மூழ்கி மீண்டார்.

ஆற்றிலிருந்து மீண்டும் வந்த பெரியவர் முகத்தில் முரடன் மறுபடியும் எச்சில் உமிழ்ந்தான். மீண்டும் ஒரு புன்னகை புரிந்துவிட்டு ஆற்றில் குளிக்கப் போனார்.

நூற்றுக்கும் மேற்பட்ட முறை அந்த முரடன் இதேபோல திரும்பத் திரும்பச் செய்தும் பெரியவர் கோபப்படவே இல்லை.

முடிவாக முரடன் தோற்றுப் போனான். பெரியவரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டான். மறைந்து இருந்த குறும்புக்கார இளைஞர்களும் ஓடிவந்து பெரியவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

பெரியவரின் சகிப்புத் தன்மையைக் கண்டு வியந்த ஓர் இளைஞர், ” ஐயா, அந்த முரடனின் கொடுஞ்செயலை எப்படி பொறுத்துக் கொண்டீர்கள்? என்று அவரிடமே கேட்டான்.

பெரியவர் புன்னகைத்தபடியே பதில் சொன்னார். . . . . .

வாசகர்களே,

அந்தப் பெரியவர் என்ன பதில் சொல்லியிப்பார்?

இந்தக் கதையிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டது யாது?

உங்கள் விடைகளை 10.5.2003 க்குள் எங்களுக்கு எழுதுங்கள் சிறந்த கடிதத்திற்கு பரிசளிக்கப்படும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2003

விரைந்து படித்தல் (Speed reading)
வெற்றி நட்சத்திரம் நீ!
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
பசுமைக் கொடியசைவில்
தாத்தா சொன்ன தன்னம்பிக்கைக் கதை
தன்னம்பிக்கை வளர விடுங்கள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி!
வெள்ளைக்கொடி
தமிழ்ப் புத்தாண்டில் புதிய சிந்தனைகள்….
தோள்கள் தொட்டுப் பேசவா?
வெற்றிபெற விரைந்து செயல்படுங்கள்
பயம் ஏன்?
சாத்துக்குடி
நல்ல நண்பர்கள் முன்னேற்றத்தின் தூண்கள்
வாசகர் கடிதம்
தன்னம்பிக்கை இதழ் வாசகர்கள் கவனத்திற்கு.
இடம் இருக்கிறதா? உங்களுக்குள்
தன்னம்பிக்கை நினைவுநாள் நிகழ்ச்சி
வெற்றிப்படிகள்
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
அச்சம் தவிர்!
இறந்து கொண்டிருக்கிறது ஈராக்
ரொம்ப நேரம் இ(று)ருக்காதீங்க
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
உறவுகள்… உணர்வுகள்…
பொதுவாச்சொல்கிறேன் புருஷோத்தமன்