– செ. குமரேசன்
MLM தொடர்…
இன்றைய இலட்சியவாதிகளே! நாளைய கோடீஸ்வர கொடை வள்ளல்களே!
உங்களது இலட்சியக் கனவிற்கு இலக்கு நிர்ணயித்து விட்டீர்களா?
இலக்கு நிர்ணயித்து, வெற்றிப் பயணத்தில் படிப்படியாக முன்னேறிச் செல்ல முடிவெடுத்தவர்களுக்காக …… இனி
வெற்றியின் ரகசியம்
எல்லோருக்கும் தாங்கள் அறியாமலேயே உள்மனத்தில் உயர்வடைய வேண்டும் என்ற தாகம், ஏக்கம் இருக்கிறது. இருந்தும், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உயர்வை அடைவதற்கு பலர் முயற்சி செய்யாமலே இருக்கிறார்கள்.
வெற்றியின் இரகசியம் – கடினமான உழைப்பு என்ற இரண்டு சொற்களில் அடங்கியுள்ளது என்கிறார் பால் கெட்டி.
கடினமாக உழைக்காமலே முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெற்றியடைய முடியாது என்பதே இன்று வரை உண்மையாக உள்ளது.
உங்கள் கஷ்டங்கள் அதிகமாக இருந்தால், அவை நீங்க நீங்கள் என்ன செய்ய வெண்டும்? மற்றவர்களை விட கடினமாக உழைக்க, உழைக்க அதிக அளவு வெற்றி பெறலாம். வெற்றி பெற்றால் கஷ்டங்கள் நீங்கும்.
கடினமாக உழைத்தால், எவரும் தனது இலட்சியக் கனவினை அடையலாம்.
உங்கள் இலட்சியக் கனவின் இலக்கினை நீங்கள் அடைய வேண்டுமென்றால், கடினமாக உழைக்கத் தயாராகுங்கள். கடினமாக உழையுங்கள்.
திணை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
– பழமொழி.
மனதில் தோல்வி விதைத்தவன் தோல்வியை அறுவடை செய்வான்
வெற்றியை விதைத்தவன் வெற்றியை
அறுவடை செய்வான் – புது மொழி.
எனவே, திரும்பத் திரும்ப அழுத்தமாக, ஆழமாக செல்வத்தை நினையுங்கள்.
– நீங்கள் செல்வந்தர் ஆகலாம்.
திரும்பத் திரும்ப உறுதியாக நிச்சயமாக தலைமையை நினையுங்கள்.
– நீங்கள் தரணி போற்றும் தலைவர் ஆகலாம்.
நண்பர்களே! ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் இந்தத் தொடரின் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. படிப்பதால் மட்டுமே பயன் கிடைக்குமா? என்றால் நிச்சயமாக நீங்கள் படிப்பதைத் தொடர்ந்து நடைமுறையில் செயல்பட வேண்டும். செயல்படுவர்களுக்குத் தான் வெற்றி கிடைக்கும்.
வெற்றி உங்களது இலட்சியக் கனவென்றால், அதனை நனவாக்க வெற்றியின் இரகசியத்தைத் தெரிவித்து உங்களைத் தயாராக்குவதே இந்தத் தொடரின் இலட்சியம்.
மகாநதி! மகத்தான வெற்றி !!
வெற்றி பெற எப்படிச் செயல்பட வெண்டும்?
மாகநதிகள் ஓரிடத்தில் பிறந்து, பூமி மாதா மீதே வளர்ந்து, நீண்டு இறுதியில் கடலில் சென்று அடைக்கலமாகின்றன. புறப்படும் போதே இயற்கை அதன் சேருமிடத்தை நிச்சயிக்கிறது. அதற்கென வழி வகுக்கிறது.
ஏன் நீங்களும் இதுபோல செயல்படக் கூடாது?
உங்கள் வழியிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஏன் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கக் கூடாது?
மகாநதியின் வெள்ள ஒட்டம் ஒரே சீராக இருக்காது. சில நேரங்களில் வேகமாகவும், சில நேரங்களில் அமைதியாகவும், மெதுவாகவும் ஓடும. ஆனால், எப்போதும் அதன் இலக்கினை நோக்கியே ஓடியவண்ணம் இருக்கிறது.
ஏன் நீங்களும் இதுபோல செயல்படக் கூடாது?
தொடர்ந்து உங்கள் வெற்றியை நோக்கி அதே பாதையில் செல்ல வேண்டியதுதான் முக்கியம்.
உங்கள் முன்னேற்றத்தை மகாநதியுடன் இணைத்துப் பாருங்கள்.
மகத்தான, தடுத்து நிறுத்த முடியாத, தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறும் சக்தியைப் பெறுவீர்கள். உங்களுக்குள் சோர்வுகள் வரும்போது மீண்டும், மீண்டும் இதனைப் படியுங்கள். மகா சக்தி பெறுவீர்கள்.
எல்லோருக்கும் வெற்றி பெற விருப்பம் இருக்கிறது. வெகு சிலரே விருப்பத்தினைக் குறிக்கோளாக மாற்றுகிறார்கள். குறிக்கோளினை அடைய தங்களை தயார் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
ஒருவர் வெற்றிமேல் வெற்றி என தொடர்ந்து வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், பலர் நான் வெற்றி பெறத் தயாராகிக் கொண்டு இருக்கிறேன் என்று தயாராகிக் கொண்டே இருக்கிறார்கள்.
இதற்கு தீர்வு என்ன? காரணம் என்ன? என்பது என்று நமது கல்வித் திட்டத்தில் அங்கமாக்கப்படுகிறதோ அன்று முதல் நமது நாட்டிற்கே வெற்றிதான்.
வெற்றி
ஒருசில அடிப்படைச் செயல்களை பொறுப்புணர்வுடன் தொடர்ந்து செய்து வருவதால் கிடைப்பதற்குப் பெயரே வெற்றியாகும்.
வெற்றி என்பது நாம் எத்தனை முறை தோல்வி பெற்றுள்ளோம். தோல்வியடைந்தவுடன் எழுந்து நின்றிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
மீண்டும்… மீண்டும்… தொடர்ந்து எழுதலே வெற்றியைத் தருகிறது.
வெற்றிக்கு முன் தோல்வி
பல்வேறு சாதனையாளர்களின் வரலாற்றை அலசும்போது நமக்குத் தெரியும் உண்மை என்னவெனில், பலமுறை தோல்வி பெற்ற பின்னரே அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், வெற்றி மட்டும்தான் பெரும்பாலான மக்கள் பார்வையில் படுகிறது. அவர்கள் சாதனையாளர்களின் ஒரு பக்கத்தைப பார்த்துவிட்டு விமர்சனம் செய்பவர்கள்
விமர்சனங்கள்
1. அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி
2. அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
3. முன்னரே இதனைச் செய்யத் தொடங்கியதால் வெற்றி பெற்றுள்ளார்.
4. அவருக்கு அமைந்ததைப் போல் பெற்றோர் / மனைவி / நண்பன் எனக்கு இல்லை.
சில வெற்றிகளுக்கு முன் தோல்விகள்
தனது 67 – ஆவது வயதில் அதுவரை தான் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை அவரது தொழிற்சாலை தீப்பிடித்ததால் இழந்தார். சாதாரணமாக அவரது நிலையில் எல்லோரும் தனது வாழ்நாள் உழைப்பு முழுவதும் வீணாகி விட்டது. என மிகுந்த வருத்தமடைவோமல்லவா?
ஆனால், இனி நான் புதிதாக அனைத்தையும் தொடங்குவேன். என உறுதியுடன் கூறி பேரிழப்பிற்கு பின் மூன்று வாரங்களுக்கு பிறகு ஒலிப்பதிவுக் கருவியைக் கண்டுபிடுத்தார் அவர். யார் எனத் தெரியுமா?
தாமஸ் ஆல்வா எடிசன் மேதை தான்.
இன்னுமொரு ( தோல்வி / வெற்றியாளரின் சாதனைக் கதை பார்ப்போம்.
21. வயதில் வியாபாரத்தில் தோல்வி
22. வயதில் சட்டமன்றத்தில் தோல்வி
24. வயதில் மீண்டும் தொழிலில் தோல்வி
26. வயதில் காதலில் தோல்வி
27. வயதில் நரம்புத் தளர்ச்சியால் பாதிப்பு
34. வயதில் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி.
45. வயதில் ஆட்சிக் குழுத் தேர்வில் தோல்வி
47. வயதில் துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி
49. வயதில் மீண்டும் ஆட்சிக்குழுத் தேர்தலில் தோல்வி
52. வயதில் வெற்றி! வெற்றி! அமெரிக்காவின் ஜனாதிபதியானார் – யார் எனத் தெரியுமா?
ஆப்ரஹாம் லிங்கன் அவர்கள் தான்.
இவர்களை மக்கள் தோல்வியாளர்கள் என புறக்கணிக்காமல் வெற்றியாளர்களாகத் தானே பாராட்டுகிறார்கள்.
வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி கிடைக்கும்.
வெற்றியும் சந்தோஷமும் ஒன்றாக இணைந்தே இருக்கும்.
வெற்றிபெற எந்தவித மந்திரசக்கதியும் இல்லை. வெற்றி வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்றுமே கிடைக்காத அதிசய பொருள்தான்.
இவ்வுலகில் இருப்பவர்களை இரண்டு விதமாக பங்கிடலாம். எப்படி?
1. வெற்றியாளர்கள் 2. தோல்வியாளர்கள்
இதில் தோல்வியாளர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் எப்பயனும் இல்லை. எனவே, வெற்றியாளர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வெற்றியாளர்கள்
வெற்றி பெறுவதற்குரிய தகுதிகள் எல்லோருக்கும் இருக்கிறதா? எனில், ஆம் இருக்கிறது. ஆனால், அதனை அறியாமலே பலர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கழித்து விடுகின்றனர். தகதிகளை அறிந்து கொள்வோமா?
1. கற்றுக் கொள்ளும் ஆர்வம்
2. நற்சிந்தனை – நம்பிக்கை
3. மன உறுதி
4. கடின உழைப்பு
5. விடா முயற்சி
6. குணம்
I கற்றுக் கொள்ளும் ஆர்வம்
நமக்கெல்லாம் நன்கு தெரிந்ததுதான், மாதா, பிதா, குரு, தெய்வம். பாருங்கள் தெய்வத்திற்கு முன்னிடத்தில் குருவிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலில் நீங்கள் ஒரு நல்ல மாணவனாக மாறுங்கள். உங்களை ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ள எந்த குருவாவது இருக்கிறார்களா? எனத் தேடுங்கள். மிக கவனமாக நல்ல குருவை தேர்ந்தெடுங்கள்.
ஒரு நல்ல குரு இல்லாதவர்கள் கண்களிலிருந்தும் பார்வையற்றவர்கள் போல சிரமப்பட வெண்டும். எனவே, உங்களுக்கு அறிவுக் கண்ணை வழங்கிய ஆசானை, அன்றாடம் வணங்குங்கள். உங்களது எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பி ஆசிரியரே.
ஒரு நல்ல மானவனாக கற்றுக் கொள்கிறீர்கள். அதன் பின் அதனை கடைபிடிப்பவர்களே வெற்றி பெற முடியும்.
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – குறள்
இதில் MLM வியாபார நண்பர்கள் இன்னும் ஒரு கடமையைச் செய்ய வேண்டியுள்ளது. என்னவெனில், நீங்கள் கற்றுக் கொண்டதை கடைப்பிடிப்பதை, கற்பிக்கவும் வேண்டும். இதனால் ஒவ்வொரு சிறந்த MLM தலைவர்களும், ஆசிரியர்களே! பணம் சம்பாதிக்கக் கற்றுத்தரும் குருமார்களே!
II நற்சிந்தனை = நம்பிக்கை
எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை நம்பிக்கைதான். உணர்வுகளுடன் கலந்துவிட்ட எண்ணங்கள், இலட்சியங்களுடன் நம்பிக்கையும் இணைந்துதான் உடனடியாக செயல்பட முடியும்.
நம்பிக்கைதான் நமது மனதிற்கு இனிய எஜமான். நீங்கள் நினைப்பது நடக்கும் என நம்பிக்கை வைத்து செயல்படும் பொழுதுதான் வெற்றி கிடைக்கும்.
சாதனையாளராக உங்களுக்குள்ளே மாபெரும் சக்தி நீறு பூத்த நெருப்பாக மறைந்துள்ளது. இதனை நம்பிக்கை காற்றினால் கொழுந்துவிட்டு எரியச் செய்யுங்கள். வெற்றிச் சிம்மாசனம் உங்களுக்கு கிடைக்கும்.
நதியில் படகில் பயணம் செய்வது போன்றதே வாழ்க்கை.
திடீரென வெள்ளம் வரலாம்; படகில் ஒட்டை விழலாம். இதுபோன்றே பிரச்சனைகள் ஏற்படலாம். பிரச்சனைகளால் கவலை, பொறுப்பு, துக்கம் நமது உள்மனதை பாதித்து சோர்வினை ஏற்படுத்தலாம்.
எனவே, ஒவ்வொருவரும் தயார் நிலையில் மற்றொரு படகினை வைத்திருக்க வேண்டும். அந்த படகின் பெயர் ” சமயோசிதம்”.
பிரச்சனைகளின் மேல் சவாரி செய்ய இந்தப்படகு பயன்படும். பிரச்சனைகளை சமாளித்து முன்னேறும் இந்தப் படகிற்கு புதுப்பெயர் சூட்டுவோமா? என்ன பெயர்? ” நம்பிக்கை”
நம்பிக்கை இல்லாமல் இருப்பதே நமது வளர்ச்சிக்குத் தடை. தமது முடிவான சாதனையை அடைய முடியும் என்ற நம்பிக்கையே வெற்றிக் கான மூல காரணமாக அமைகிறது.
நம்பிக்கை, தன் – நம்பிக்கையை தமிழகத்தில் ஒவ்வொருவருக்கும் தருவதை தனது இலட்சிய கனவாக கொண்டு வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வரும் தன்னம்பிக்கை மாத இதழில், இனி வரும் மாதங்களில் மன உறுதி, கடின உழைப்பு, விடாமுயற்சி, குணம் – குறித்தவைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.
மற்றவர்களை வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு மெய்ப்பட வெண்டும்.
வாருங்கள்! இணைந்து முன்னேறலாம்!!
( தொடரும்….)

April 2003






























No comments
Be the first one to leave a comment.