Home » Articles » மாதுளை

 
மாதுளை


யோகி இராஜேந்திரா
Author:

– யோகி இராஜேந்திரா, திருப்பூர்
இயற்கை உணவு அலோசகர்

சாறுள்ள பழங்களில் மாதுளம் பழம் மிகச் சிறந்த ஒன்றாகும். இப்பழம் அதிக அளவு சாகுபடி ஆவதால் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றது. இப்பழத்தின் தோல், இலை, மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணமுடையவை.

இதன் விதைகளை நீக்காமல் நன்றாக மென்று சாப்பிடலாம். அல்லது சாறு பிழந்தும் சாப்பிடலாம்.

இதில் அதிக அளவு குளுகோஸ் அடங்கி இருப்பதால் உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.

நன்மைகள்

* மாதுளம் பழம் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் உறுதியடையும்

* நினைவாற்றல், புத்தி கூர்மை வளர உதவும்

* பித்த சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

* உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாவதற்கு மாதுளம் பழச்சாறு அருந்தலாம்.

* மாதுளம் பழத்துடன் சிறிது தேங்காய்ப்பால், தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.

* பிஞ்சு மாதுளம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு மென்று சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

* பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கு நிற்பதற்கு மாதுளம் பழவும் உதவும்.

* மாதுளம் பழத்தோலுடன், உப்பு, மிளகு சேர்த்து அரைத்து பல் துலக்கலாம்.

* மாதுளையின் இளந்தளிர் இலைகளை அரைத்துப் பூசினால் சோறி, சிரங்கு, சேற்றுப்புண் குணமாகும்.

* மாதுளை மரப்பட்டையை இடித்துப் பொடியாக்கி கஷாயம் வைத்து அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

 

1 Comment

  1. r.ramesh says:

    ஒர்னமேண்டல் போமேக்ரானடே க்கும் சாதாரண போமேக்ரானடேக்கும் என்ன வித்தியாசம்

Post a Comment


 

 


April 2003

திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
உறவுகள்…. உணர்வுகள்…
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
உறுதியான செயல்
வெற்றிக் கணக்கு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
மாதுளை
ஏழுலகும் உன் வசம்
வெற்றிமாலை
வாரத்திற்கு 100 மணிநேர உழைப்பு!
தலைசிறந்த விற்பனையாளர் ஆக வேண்டுமா?
தோள்கள் தொட்டுப் பேசவா
படித்தலும், கற்றலும்
சிந்தனைத்துளிகள்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி
பொதுவாச்சொல்றேன் புருஷோத்தமன்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
இளைஞனே… வா!
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மனிதன் மனிதனாக இருக்க!
கிராமங்கள் காலியாகின்றன
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
மலேசியா & சிங்கப்பூரில் கற்றவை
இலட்சியக் கனவு காணுங்கள்
வாசகர் கடிதம்
தோள்கள் தொட்டுப் பேசவா?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
த(க)ண்ணீர்க் கனவுகள்