Home » Articles » மலரட்டும் நலவாழ்வு

 
மலரட்டும் நலவாழ்வு


யோகி இராஜேந்திரா
Author:

அவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர். கைராசியான டாக்டர் என்றும் அவரைப் பற்றிச் சொல்வார்கள். அவரிடம் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி வைத் தியம் பார்க்கச் சென்றார். அந்தப் பெண் மணியைப் பரிசோதித்த டாக்டர் அதிர்ந்தார்.

“அம்மா உங்கள் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்து” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

குழப்பத்துடன் வீடு திரும்பிய அந்த அம்மையார் மேற்கொண்டு மருத்துவம் செய்ய வசதி இல்லாததால் எங்கும் செல்லாமல் இருந்து விட்டார்.
அடுத்த பத்து நாட்களில் மருத்துவர் சொன்னது போல மரணம் சம்பவித்துவிட்டது.

ஆனால், மரணமடைந்தது அந்த நோயாளிப் பெண்ணல்ல. அவருக்கு ஆலோசனை கூறிய டாக்டர்.

திடீர் என்று மாரடைப்பு (Heart Attack) நோய் தாக்கி அந்தப் புகழ் பெற்ற டாக்டர் அகால மரணமடைந்தார்.

உயிருக்கே ஆபத்து என்று கருதப்பட்ட அந்தப் பெண்மணி இன்னும் உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கிறார். இது கதையல்ல. நிஜம்.

இதைத்தான் திருமூலர்,

இடப்பக்கமே இரைநொந்ததென்றார்
கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே
என்று திருமந்திரத்தில் பாடுகின்றார்.

சடுதி மரணம் எனப்படும் இந்த அகால மரணத்தால் நாள்தோறும் மக்கள் ஈசலைப் போல் மடிகின்றனர். சாதாரண மனிதர்களுக்குத்தான் இந்த நிலை என்றால் ஊருக்கெல்லாம் மருத்துவம் செய்கின்ற ஒரு மருத்துவர் தனது மரணத்தை உணரமுடியாமல் போனது ஏன்?

ஒரு மனிதன் பல துறைகளிலும் படித்துப் பட்டம் பெறலாம். பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருக்கலாம். ஆனால், நமது உடல் பேசுகின்ற மொழியைத் தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாவிட்டால் மருத்துவருக்கும் மாடு மேய்ப்பவருக்கும் ஒரே முடிவுதான்.

இந்த உடல் பேசுகின்ற மொழியை நம்மால் ஏன் உணர முடிவதில்லை? மனித மனம் புலன்கள் வழியாக இன்பத்தைத் துய்ப்பதிலேயே மூழ்கி விட்டது. நமது சிந்தனைத்திறனை பொருளீட்டு வது, போகத்தில் திளைப்பது இவற்றில் மட்டுமே செலவிடுகிறோம்.

ஒரு மேசையின் மேல் தேன் உள்ள ஒரு பாட்டிலைத் திறந்து வைத்துவிட்டு வேடிக்கை பாருங்கள். அந்தத் தேனைக் குடிப்பதற்காக எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதைப் பார்க்கலாம். ஆனால், தேனைக் குடித்துவிட்டு ஒரு எறும்புகூட உயிருடன் திரும்பிப் போவதில்லை. தேனில் விழுந்து முழ்கி இறந்து விடுவதைக் காண்கிறோம்.

இந்த எறும்புகளைப் போலவே சில மனிதர் களின் வாழ்க்கையும் முழுமை அடையாமல் அரைகுறையாக முடிவடைகின்றது.

இதையே சிவ வாக்கியர்,

நீள வீடு காட்டி நீர் நெடுங்கதவு சாத்துவீர்,

வாழவேணும் என்றாலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?

காலன் ஓலை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மை பாதம் உண்மையே

என்று நமக்கு நினைவூட்டுகிறார்.

மனிதர்களுக்கு எதற்கு இரண்டு கைகள்?

ஒரு கையால் குடும்பம் மற்றும் சமுதாயக் கடமைகளைச் செய்யவேண்டும். இன்னொரு கையால் இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும். தனது உலகக் கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பிறகு இரண்டு கைகளாலும் இறை வனையே பற்றிக்கொள்ள வேண்டும்.

அதாவது, ஒரு கை பொருள் தேடுவதற்கும், மற்றொன்று அருள் தேடுவதற்கும், ஆரோக்கியத்தை அடைவதற்கும், தன்னைப் பேணிப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஒருவரைப் பார்த்தவுடன் கேட்கும் முதல் கேள்வி “நலமா?” என்பதுதான். கடிதம் எழுதினாலும் முதலில் நலம் விசாரித்துதான் எழுதுகிறோம். “அறம் செய்ய விரும்பு” என்கிறாள் ஔவைப் பாட்டி. அறத்தில் தலையாய அறம் தன்னைப் பேணிக்காத்தலே ஆகும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்