Home » Articles » மாணவர் பெற்றோர் பக்கம்

 
மாணவர் பெற்றோர் பக்கம்


இரத்தினசாமி ஆ
Author:


கற்பனைச் சூழலும் வெற்றிக்கனவும்

தேர்வுகளில் சிறப்பான வெற்றி!

வெற்றிக்கனவு

“கி.பி. 2020க்குள் இந்தியா இவ்வுலகின் தலைசிறந்த நாடு களின் வரிசைகளில் முதன்மை யாக வரக்கூடிய வாய்ப்புகளை நிச்சயம் பெறும். அறிவியல் முன்னேற்றத்தில், தொழில்நுட்பப் பெருக்கத்தில், அறிவாளர் ஆக்கத் தில், ஆன்மீக அறிவியல் ஒன் றிணைப்பில்” நமது இந்திய குடியரசுத் தலைவர் மாண்புமிகு  A.P.J. அப்துல்கலாம் அவர்களின் ஆற்றல்மிகு வெற்றிக்கனவுகள்.

“இளைய தலைமுறையே! கனவு காணுங்கள்! வெற்றிக் கனவு காணுங்கள்!!” என்று தரணி எங்கும் வெற்றிக்கான மந்திரத்தை, கீதை யின் சாரத்தை நிரப்பி வருகின்றார்.

“அனுபவ வார்த்தைகள். ஆற்றல் மிகு வார்த்தைகள்”

கனவுகள் காண்பது சராசரி நிகழ்வுதான். சாதாரண குழந்தை முதல் அறிவுசால் சான்றோர் வரை கனவு காண்கின்றனர். மாணவர் பருவத்தில் பலர் காணும் கனவு களில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

தேர்வு அறையில் வினாவுக்கான விடையெழுதும் நேரம். தெரிந்த வினா தான். அறிந்த விடைதான். விடைத்தாளின் மேல் வைத்த பேனா எழுத மறுக்கிறது. நகர மறுக்கிறது. இறுதி நேரம் நெருங்கிக் கொண்டுள்ளது. உடலெங்கும் வேர்த்துப் போகிறது. தேர்வின் முடிவு தோல்வி யாகிறது.

நன்கு படிக்கும் மாணவருக்கும் இதைப்போல கனவு.

உடல் நலம் குன்றுவது போலவும், விபத்தில் சிக்குவது போலவும் விலங்கு களுக்கிடையே அடைபட்டது போலவும், ஆசிரியரிடம் தண்டனை பெறுவது போலவும் வருகின்ற அச்சக் கனவுகள். சினிமா /T.V.யில் பார்த்த சில கத்தரிப்பு காட்சிகள் ஆழ்மனதில் பதிந்து ஆற்றலை வீணாக்கும் கனவுகளாக வெளிப்படும்.

கலாம் காணச் சொன்ன கனவுகள் எந்த வகை? எதிர்காலத்தில் நான் எப்படி இருக்க வேண்டும்? எந்தப் பட்டங்களை வென்றாக வேண்டும்?

நிகழ்காலத்தில் நிகழ்த்த வேண்டிய சாதனைகள் என்ன? என்னை மேம் படுத்திக் கொள்ள நான் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்ன?

என்னிடமிருந்து நிச்சயமாக நீங்க வேண்டி யவை எவை?

இச்சிந்தனைகளுடன் உறங்கச் செல்லுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எண்ணங்கள், பேரார்வமாக மாற வேண்டும்.

அப்போது உங்கள் கனவுகள் வெற்றிக் கனவுகளாக மாறும். அவைகள். ஆழ்மனதில் பதியும். வேர்விடும். முளை வரும். இலைகள், கிளைகள் தோன்றும். பூ பூக்கும். காய் காய்க்கும். வெற்றிக்கனியாக மாறும்

– நிலையை எளிதில் அடையும் வழி

நமது மனதை அமைதிப்படுத்தவும், மூளையின் அதிர்வெண்களை 7-13 cps ஆக வைப்பதற்கும் உதவுவது  மூச்சுப்பயிற்சி.

தரையில் ஒரு விரிப்பை விரித்து அமரவும். இடது கால் வலது தொடைப்பகுதி மேலும், வலது கால் இடது தொடைப்பகுதி மேலும் இருக்கும்படி அமரவும். முதுகுத்தண்டு, கழுத்து, தலை இவைகள் ஒரே நேர் கோட்டில் இருக்கட்டும். (கீழே அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து, பாதங்கள் தரைவிரிப்பின் மேல் படிந்து இருப்பது போல் வைத்துக் கொண்டும் செய்யலாம்).

கண்களை லேசாக மூடிய நிலையில் வைத்துக் கொள்ளவும். ஆழ்ந்த சுவாசத்தை மெதுவாக, மெதுவாக மூக்கின் வழியாக உள்ளே இழுக்கவும். அதே போல மெதுவாக, மெதுவாக வெளியேற்றவும். உங்கள் மனம் மூச்சின் இயக்கத்திலேயே இருக்கட்டும். ஒருமுறை சுவாசத்தை உள்ளே இழுத்து வெளியேற்றுவதை ஒரு சுற்று (Cycle) என்கிறோம்.

இதைப்போல் குறைந்தது பத்து முறை செய்ய வேண்டும். தொடக்கத்தில் 5 நிமிடங்கள் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

இதன் மூலம் மனம் அமைதி அடைகிறது. மூளையின் அதிர்வெண்கள் படிப்படியாக குறைந்தது  நிலையை அடையும்.

மூச்சோட்டத்தில் இருக்கிறது முக்கியத்துவம்

இப்பயிற்சியை தொடர்ந்து செய்ய, செய்ய (ஒரு நாளைக்குப் மூன்று, நான்கு தடவைகள்) புற மன இயக்கம் குறைந்து ஆழ் மனம் அறியப்படும் (Subconcious mind). இந்நிலையில் நாம் ஆழ் மனதிற்கு ஆணைகளைப் பிறப்பித்தால், அவைகளை எளிதில் பதிவு செய்து கொண்டு அதன்படி இயங்க ஆரம்பிக்கும் கீழ்க்கண்டவாறு உறுதியுடன் மனதிற்கு கூறவும்.

“ஆழ்ந்த சுவாசத்தை நான் ஒவ்வொரு முறையும் இழுத்து விடும்போது என் புறமனம் அமைதி பெறுகிறது. உடலில் உள்ள இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்து வருகிறது. உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து உள் உறுப்புகளும் படிப்படியாக தளர்ந்து கொண்டே வருகின்றன. தளர்ந்து கொண்டே வருகின்றன. தளர்ந்து விட்டன. என் உடல் எடையற்றதாகி காற்றில் மிதப்பது போல இருக்கிறது.

ப்    எனது உடல் சக்தியும், தன்னம்பிக்கையும் உயர்வடைகிறது. எனது அறிவாற்றல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ப்    எனது நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.

ப்    எனது ஆசிரியரை நான் நேசிக்கிறேன்.

ப்    அவர் நடத்தும் பாடங்களை ஆர்வத்தோடு, கூர்ந்து கவனிக்கிறேன்.

ப்    நான் படிக்கும் பாடங்கள் எளிதில் மனப்பாடம் ஆகிறது.

ப்    நான் பொதுத்தேர்வை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.

ப்    நான் பொதுத் தேர்வை சிறப்பாக எழுதுவேன்.

ப்    நான் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவேன்.

மேற்சொன்ன உயர்வான எண்ணங்களை (Positive thoughts) ஆழ் மனதில் பதியச் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எதிர்மறை எண்ணங்களை (Negative thoughts) நம் மனதில் நுழைய விடக் கூடாது.

தினசரி காலையிலும், மாலையிலும் மேற்சொன்ன ஆழ்மனக் கட்டளைகளை  நிலையிலிருந்து சொல்லச் சொல்ல அவை செயல்வடிவம் பெறும்.

உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேரார்வம் கொண்டால்தான் வெற்றியை நோக்கிய பயணம் துவங்கும் என்பதை உணருங்கள்.

ஆழ் மனதில் பதிந்த அற்புத வார்த்தைகளால் நாளுக்கு நாள் முன்னேற்றத்தை உணர்வீர்கள்.

கற்பனைச் சூழல்

“கற்பனை அறிவைக் காட்டிலும் சிறந்தது” (Imagination is more Powerful than knowledge) என்றார் அறிவியல் மேதை ஐன்ஸ்டின். எனவே, உயர்வான எண்ணங்களை கற்பனை செய்யுங்கள். கனவு காணுங்கள் இதன் மூலம் உங்கள் படைப்பாற்றல் திறன் மேலோங்கும்.

இதோ ஓர் கற்பனைக் காட்சி

நிலையை அடைவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். கண்களை மூடிய அந்நிலை யிலேயே மனத்திரையில் கீழ்க்காணும் திரைப் படத்தை ஓட விடுங்கள்.

“வானுயர்ந்த மலைகள். அதில் அடர்ந்த காடுகள். அம்மலையிலிருந்து ஓடி வருகின்ற அருவி. அது எழுப்பும் ஓசை. அந்த அருவி கீழ்நோக்கி வந்து ஆறாக சலசலத்து ஓடுகிறது.

அந்த ஆற்றின் இரு மருங்கிலும் பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டங்கள், பழத் தோட்டங் கள், அடர்ந்த காடுகள். அம்மரங்களிலும் செடி களிலும் வசிக்கின்ற பறவைகள், வண்டினங்கள் எழுப்புகின்ற ஓசைகள். துள்ளித் திரிகின்ற மானினங்கள். பல வண்ண வண்ணத்துப் பூச்சிகள். தென்றல் காற்று. நறுமணம். இயற்கையோடு இணைந்த மனம்.

அங்கே ஒரு அழகானதோர் பளிங்கு மாளிகை அதனுள்ளே செல்கிறீர்கள். அங்கு நீங்கள் விரும்பி வழிபடும் இறைவன் கொலுவீற்றிருக்கும் மனதைக் கவரும் கோயில். பிரபஞ்ச உயர் சக்திகள் நிரம்பி வழியும் அங்கு நீங்கள் கேட்பது கிடைக்கும். நினைப்பது நடக்கும்.

அப்பளிங்கு மாளிகையினுள் சுற்றிப் பார்க்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த வகையில் படிக்கும் அறை. அங்குள்ள ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கின்றீர்கள். அது அப்படியே மூளையில் பதிகிறது.

உங்களுக்குப் பிடித்த சுவையான உணவுகள் உள்ள அறை. நீங்கள் விளையாட, பொழுதை பயனுள்ள வகையில் போக்க ஒர் அறை.

இப்படிப்பட்ட கற்பனைச் சூழலை மனத்திரையில் அடிக்கடி காணுங்கள். இதன் மூலம் எளிதில் ஆழ் மனதை அடையலாம்.

ஆழ்மனதிற்குச் செல்ல மெல்லிசை மிகவும் உதவும். வீணை, புல்லாங்குழல், வயலின் ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளின் மெல்லிசை  நிலையை விரைவில் அடைய, கற்பனைச் சூழல் நன்கு அமைய உதவும்.

நிலையில் படியுங்கள்

உடலை தளர்வுபடுத்தி, கண்களை மூடிய நிலையில்  நிலைக்குச் செல்லும் மூச்சுப் பயிற்சியை இரண்டு நிமிடம் செய்த பின்னர், உங்கள் மனத்திரையில் முன்னர் சொன்ன கற்பனைச் சூழலை அமைத்துக் கொள்ளுங்கள்.

பளிங்கு மாளிகையின் படிக்கும் அறையில் இருப்பதாக கற்பனை செயது கொள்ளுங்கள். அங்கிருந்து படிக்கும்போது உங்களுக்கு அனைத்துப் பாடங்களும் எளிதில் புரிகின்றன. நன்கு நினைவில் நிற்கின்றன.

இப்போது நீங்கள் படிக்க நினைக்கும் பாடத்தை உண்மையிலேயே கண்களைத் திறந்து எடுத்துப் படிக்கவும்.  நிலையிலேயே படியுங்கள். எப்பொழுதெல்லாம் மனம் வெளியே செல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போது மீண்டும்  மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

வெளிச்சூழல் உங்களை  நிலைக்கு இழுத்தாலும், பழகப் பழக  நிலையிலேயே படிக்கப் பழகிக் கொள்வீர்கள்.

தேர்வு சமயங்களில் தொடர்ந்து மணிக் கணக்கில் படிக்கும்போது ஒரு மணிக்கு ஒரு முறை 10 நிமிடங்கள்  நிலைக்கு வரவும்.  நிலைக்கு வருவதற்கு முன்னர் கீழ்கண்டவாறு உங்கள் மனதிற்கு கட்டளை இடவும்.

“ நிலையிலிருந்து நன்கு படித்த நான் சிறிதுநேர ஓய்விற்காக  நிலைக்குச் செல்கிறேன். நான் எப்பொழுதெல்லாம்  நிலைக்கு வர வேண்டும் என நினைக்கிறேனோ அப்பொழு தெல்லாம் மீண்டும் என்னால்  நிலைக்கு வரமுடியும்”

மேற்கண்டவாறு  நிலையில் நீங்கள் படிக்கும்போது மிக எளிதாக, மிக விரைவாக நீங்கள் படிக்க வேண்டியவைகள் மூளையில் பதியும். மூளையின் நியூரான்களுக்கிடையே தொடர்பும், அசிட்டைல் கோலைன் திரவ உற்பத்தியும் அதிகரித்து நிரந்தர நினைவாற்றலாக மாற வழிவகை செய்யும்.

மனம் என்பவன் யார்? எங்கு அவன் இருப்பிடம்?

படிக்கும் முறைகள் என்னென்ன?

இவை பற்றி அடுத்த இதழில் காண்போம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்