Home » Articles » கேள்வி – பதில் பகுதி

 
கேள்வி – பதில் பகுதி


admin
Author:

ஜி ஆர் பதில்கள்

மனசுவிட்டுப் பேசுங்க

இந்த உலகமே என்னைத் தாழ்வாக நினைக்கிறது. நான் பார்ப்பவர்களெல்லாம் என்னை தாழ்வாகவே பேசுகிறார்கள். அதனால் கோபத்தில் வெடிக்கிறேன். என் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தோல்வியடைந்துள்ளேன். நான் எப்படி முன்னேறுவது?

பி. மகேஸ்குமார்,
திருப்பூர்

உங்களுக்கு அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை உள்ளதால், பிறருடைய இயல்பான நடவடிக்கைகள் கூட உங்களைத் தாழ்த்துவதாக நினைக் கிறீர்கள்.

ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான வயது 15 முதல் 30 வயது வரை என்று சொல்லலாம். அந்த வயதில்தான் எந்த வகை படிப்பு, எந்தத் துறையில் வேலை, திருமணம், சமூக தொடர்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் தொடங்குகின்றன.

ஆகையால், இந்த வயதிலுள்ள நீங்கள் உங்களுடைய மனநிலையை சிதற விடாமல் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான குறிக்கோளில் கவனத்தைத் திருப்புங்கள்.

உங்களுடைய மனதில் தாழ்வானவன் என்ற எண்ணத்தை உருவாக்காத வரையில் நீங்கள் தாழ்ந்தவன் அல்ல. தோல்வியாளனும் அல்ல.

உதாரணத்திற்கு, ஒருவர் உங்களைப் பார்த்து “முட்டாள்” என்று சொன்னால், நீங்கள் உடனே யாரைச் சொல்கிறார் என்பது போல சுற்றும் முற்றும் பாருங்கள். அந்த வார்த்தை உங்களுக்குச் சொன்னதல்ல என்பதை உங்கள் மனமும் ஏற்கும். அப்படிச் சொன்னவர் முதலில் கோபமடைந்தாலும் அடுத்ததாக தன்னைத் திருத்திக் கொள்வார்.

பெரும்பாலும் மற்றவர்களை தாழ்வாகப் பேசுகிறவர்கள், மனவளர்ச்சி பெறாதவர்கள். சில சமயங்களில் நல்லவர் கள் கூட கவனக்குறைவால் தவறான வார்த்தைகளைச் சொல்லி விடுவதுண்டு. ஆகவே, பிறருடைய வார்த்தைகள் உங்களைப் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டு முன்னேறுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2003

உறவே உயர்வு முரணோ முடக்கம்
வெற்றியின் மனமே..
கேள்வி – பதில் பகுதி
உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?
இந்தியா நேற்று இன்று நாளை
வெற்றியின் விதைகள்
உறவுகள் உணர்வுகள்…
கனவு மெய்ப்பட வேண்டும்
விதியை எழுதுபவன்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
மலரட்டும் நலவாழ்வு
திருச்சி & திருவாரூர் தன்னம்பிக்கை விழாக்கள்
வெற்றி மாலை
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு
மாணவர் பெற்றோர் பக்கம்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்!!
நீங்கள் வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல
பொதுவாச் சொல்றேன்
கனவு மெய்ப்பட வேண்டும்
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்