Home » Articles » பெற்றோர் மாணவர் பக்கம்

 
பெற்றோர் மாணவர் பக்கம்


இரத்தினசாமி ஆ
Author:

@ நிலையும் ஆழ் மனமும்

படைத்தவன் காட்டிய வஞ்சனையா?

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களுள் ஒருவர் 90%க்கு மேல் மதிப்பெண் பெறுகிறார். மற்றொருவர் 40% வாங்குவதற்கே சிரமப்படுகிறார். ஒரே பாடம், ஒரே புத்தகம், ஒரே ஆசிரியர் இருந்தும் ஏனிந்த பேதம்.

குறைந்த மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு முகாமில் இதுபற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.

“நானும் என் மூளையுடன் பல ஆண்டுகளாகப் போராடிப் பார்த்து விட்டேன். தினமும் ஆறு மணி நேரம் படிக்கிறேன். சில தேர்வுகளுக்கு 10 மணி நேரம் கூட படிக்கிறேன். காலை, மாலை இரவு என்று எப்போதும் படித்துக் கொண்டேதான் இருக் கிறேன். ஆனால், மதிப்பெண் மட்டும் கூடியபாடில்லை”.

“அதே சமயத்தில் எனது நண்பன் ஒருவன் தினசரி இரண்டு மணி நேரம்தான் படிக்கிறான். ஆனால் தேர்வுகளில் எப்போதும் 90%க்கு மேல்தான். கடவுள் எனக்கு ஒரு சொத்த மூளையைக் கொடுத்து விட்டார். என் நண்பனுக்கு சிறந்த மூளையைக் கொடுத்து விட்டார். என் மூளைக்கு ஏதோ பாஸ் மார்க் தான் எடுக்க முடியும். 1200க்கு 1100 மார்க்குகள் என்பது பகல் கனவு தான்” என்று சொன்ன மாணவர் போல் எத்தனையோ பேர் படைத்தவன் மேல் பழியைப் போடுகின்றனர்.

இது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மூளையின் நிறை அனை வருக்குமே சராசரியாக 1ணீ கிலோதான். கருவிலிருந்து குழந்தையின் உறுப்புகளில் மிக வேகமாக வளர்ச்சியடைவது மூளைதான். 5வது வயது முடியும் போது ஏறக் குறைய 90% மூளை வளர்ச்சி பெற்று விடுகிறது.

T.V.  யில் பத்து ஆண்டு களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி. 3 வயது பெண் குழந்தை திருக் குறளை எப்படிக் கேட்டாலும் சொன்னது. 1 முதல் 1330 வரையும், 1330 லிருந்து 1 வரையிலும் தொடங்கும் அடி, முடியும் அடி, என்று எப்படிக் கேட்டாலும் மிகத் திறமையாக சொன்னது.

ஆச்சரியப்பட்டு போனேன்.

இறைவன் அக்குழந்தையின் மூளையில் திருக்குறள் அனைத் தையும் திணித்து பிறக்க வைத்து விட்டான் என்று இந்த அறிவியல் உலகத்தில் சொன்னால் யார் நம்புவார்கள். விசாரித்த போது தான் தெரிந்தது. அக்குழந்தைக்கு ஒரு வயது முடிந்தபின்னர் தினசரி ஐந்து, ஐந்து குறளாகச் சொல்லி பயிற்சியளித்தார்கள். மூன்று வயதாகும்போது அனைத்தும் அத்துப்படி.

அக்குழந்தையை LKG யில் சேர்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு குழந்தை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வருகிறது. இரண்டும் ஒரே வகுப்பில் அடுத்தடுத்து அமர்கிறது. பார்த்தால் இரண்டுமே ஒரே மாதிரித்தான் இருக்கும். ஒன்றுக்கு திருக்குறள் அத்துப்படி. இன்னொன்றுக்கு அ, ஆ கூட தெரியாது.

இதை வைத்து திருக்குறள் தெரியாத குழந்தையை மக்கு என்றோ, எதற்கும் லாயக்கு இல்லை, என்றோ சொல்லி விட முடியுமா? இரண்டுக்கும் ஒரே வித்தியாசம்.

ஒரு மூளை பயிற்சி பெற்றது. மற்றது பயிற்சி பெறாதது. எனவே உலகில் பயிற்சி பெற்ற மூளை, பயிற்சி பெறாத மூளை என்று இரண்டே வேறுபாடுகள் தான் உள்ளன.

படைப்பில் எந்தவித வஞ்சனையும் இல்லை, ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர.

மீண்டும் மூளைக்கு வரு வோம். மூளையின் செல்களை நியூரான்கள் என்கிறோம். சுமாராக 10,000 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன. (பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களும் 10,000 கோடி உள்ளன, என்னே ஒற்றுமை!)

அறிவு வளர்ச்சி என்பது நியூரான்களுக்கிடையே ஏற்படும் தொடர்புதான் (Interconnection). உலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகளைக் காட்டிலும் பல மடங்கு பெரிது இந்த நியூரான்களுக்கிடையே ஏற்படும் தொடர்புகள். இதில் தான் நினைவாற்றலின் மகத்துவமே இருக்கிறது. இதை ஹிப்போ காம்பஸ் (Hippo campus) என்பர். இங்கு சுரக்கும் அசிட்டைல் கோலைன் (Acetyl Choline) என்னும் இரசாயனப் பொருளுக் கும் நினைவாற்றலுக்கும் நிறைய தொடர்புள்ளது.

நமது மூளையின் எடை நமக்குத் தெரியாதபடி அது ஒருவகை திரவத்தில் மிதந்து கொண்டுள்ளது. பலவித வெளி அதிர்வுகள் மூளையை பாதிக் காமல் இருக்கும்படி மிகவும் பாதுகாப்பாக அமைக்கப் பட்டுள்ளது. என்னதான் நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் இருந் தாலும், மூளையின் ஆற்றலுக்கு நிகரான ஒரு கம்ப்யூட்டரை நம்மால் அமைக்கவே முடியாது.

மூளைப்பகுதியை வலது பக்க மூளை, இடது பக்க மூளை என இரண்டாகப் பிரிக்கலாம். வலது பக்க மூளை படைப் பாற்றல் திறனை வளர்க்கக் கூடியது. ஒருவர் சிறந்த ஓவியனாகவோ, கவிஞனாகவோ, நடிகனாகவோ, பாடகனாகவோ, இசை மேதையாகவோ, புதிய கண்டு பிடிப்புகளைக் காணும் விஞ்ஞானியாகவோ, புதுமை களைப் புகுத்தும் தொழில் மேதையாகவோ, பரிணமிக்க வலது பக்க மூளையின் செயல்பாடு அவசியம்.

வாழ்வில் உயர் நிலையில் உள்ளோர் எல்லாம் வலது பக்க மூளையின் ஆற்றலை பயன் படுத்துபவர்கள்.

வெவ்வேறு மொழிகளைக் கற்பது, கணிதம் கற்பது, நூல்களைப் படிப்பது, தர்க்க உணர்வு (Logic Sense) (கரு மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று அடித்தால் மழை வரலாம் என்ற எண்ணம்), பிறரின் கண்டு பிடிப்புகளை அறிவது போன்றவை களுக்கு பயன்படுவது இடதுபக்க மூளை. முன்பே உள்ளதை உள்ளபடி அறிவதுதான் இதன் வேலை.

நமது பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் இதைக் கொண்டே அமைகிறது.

இடது பக்க மூளையைப் பயன்படுத்துவது எளிது. ஆனால் வலது பக்க மூளையைப் பயன்படுத்த சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம்தான் முடியும்.

நோபல் பரிசு பெற்றவர் களே மூளையின் மொத்த ஆற்றலில் 10%க்கும் குறைவாக பயன்படுத்தும்போது சாதாரணமானவர்கள்…

சரியான பயிற்சிகள் மூலம் வலது பக்க, இடது பக்க மூளையின் பயன்படு ஆற்றல் சதவீதத்தை அதிகப்படுத்த முடியும்.

இதற்கு வயது ஒரு தடையல்ல.

நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள், மகான்கள் பல பயிற்சிகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே, தான் இருந்த இடத்திலிருந்தே மிகப்பெரிய நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும், மிகச் சிறிய அணுவின் அமைப்பு பற்றியும் ஆய்ந்தறிந்தார்கள். (அறிவியல் உபகரணங் கள் வந்தது இருநூறு ஆண்டுகளுக்குள்தான்).

அவர்கள் தான் மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தியவர்கள். அறிவியல் துணை கொண்டு மூளையைப் பற்றி நாம் அறிந்ததைக் காட்டிலும் அறியாத பகுதிதான் மிக அதிகம். வரக்கூடிய தொடர்களிலே மூளைக்கான பயிற்சி களை நாம் காண உள்ளோம்.

மனமும், மூளையும்

மூளையின் இயக்கத்தையும், அதிலிருந்து வெளிப்படும் அலைகளின் அதிர்வுகளையும் Echo Enceplo Gram (EEG) என்ற கருவி மூலம் அளக்கலாம். நாம் விழிப்பு நிலையிலிருந்து, கேட்டல், பேசுதல், நடத்தல், வேலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது, ஏற்படும் அலைகளை அலைகள் என்கிறோம். அதன் அதிர் வெண்கள் வினாடிக்கு 14க்கு மேல் (>14 Cps).

கோபம் உச்சத்தில் இருக்கும்போது, உணர்ச்சி வசப்படும் போது இது 20, 30 என்று எகிறும். மனம் அமைதி நிலையில் இருக்கும்போது மூளையின் அதிர்வெண் 7 முதல் 13Cps க்குள் இருக்கும். (Cps என்பது Cycles per second) இதையே நிலை என்கிறோம். இந்நிலையில் இருந்தால் போதுமானது. அதற்கான பயிற்சிகளைத்தான் நீங்கள் பெற உள்ளீர்கள்.

மனம் மிக, மிக அமைதியாக இருக்கும்போது போன்ற நிலைகளை அடையலாம். இந்நிலைகளில் மூளையின் அதிர்வெண்கள் மிக, மிக குறைவாக இருக்கும். யோகிகள், மகான்களால் இந்நிலையை அடைய முடியும்.

குட்டை நீரும், அலைகளும்

ஒரு தெளிந்த நீருள்ள அமைதியான குளம், நண்பகல் நேரம் அதனுள் உற்று நோக்கினால் தெளிந்து செல்லும் மீன்கள் தெரியும். நண்டுகள், தவளைகள் தெரியும். குளத்தின் தரைப்பரப்பில் இருக்கின்ற கிளிஞ்சல்கள், பாசிகள் தெரியும்.

அந்தக் குளத்தின் மையத்தில் ஒரு கல்லைப் போட்டால் என்ன ஆகும்? குளத்து நீரின் மேல் பரப்பில் அலைகள் உண்டாகும். இப்போது நீரினுள் உள்ளவை எதுவும் தெரிவதில்லை. அலை கள் ஓய்ந்த பின் மீண்டும் தெரியும். அதைப் போலவே மூளையில் அதிர்வெண்கள் அதிகமாக இருக்கும் போது மூளையில் பதியவைக்கவோ, பதிந்ததை திரும்பப் பெறவோ இயலாது.

மனம் அமைதியான நிலையில் மூளையின் அதிர்வெண்கள் நிலையை அடையும், நிலையில் படிப்பது நன்கு பதியும். பதிந்ததை எளிதில் வெளிக்கொணர முடியும்.

எண்பதிற்கும் மேற்பட்ட நினைவாற்றல், தன்னாற்றல் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களை இயக்கி பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சியளித்துள்ள அனுபவத்திலும், பத்தாண்டுகளுக்கு மேலாக யோகம், தியானம், பிரபஞ்ச சக்திகள் ஈர்ப்பு, மனம், உடல், மூளை போன்றவற்றில் செய்த ஆய்வுகள் மூலம் கிடைத்த அரிய செய்திகளையும் கொண்டு உங்களுக்கு பயிற்சி விளக்கங்களை அளிக்க உள்ளேன்.

இனிவரும் தொடர்களை கதைபோல, கட்டுரைபோல படிக்காமல் ஒவ்வொருவரும் ஆர்வத் துடன், முழு ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் அளிக்கப்படும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கடிதம் மூலமோ, தொலைபேசி மூலமோ, தன்னம்பிக்கை இதழ் அலுவலகம் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டு நீக்கிக் கொள்ளலாம்.

அடுத்த இதழில் ஆர்வத்துடன் சந்திப்போம்….

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை