Home » Articles » வெற்றியின் மனமே……

 
வெற்றியின் மனமே……


இராமநாதன் கோ
Author:

வெல்ல வேண்டிய முதல் எதிரி

திடீரென ஒரு திருடன் படுக்கையறையில் நுழைகிறான்.

தம்பதிகள் மிகவும் திடுக் கிட்டுப் பார்த்தார்கள்.

கோபத்தோடு துப்பாக்கியை நீட்டிய திருடன், “என்னை அடையாளம் தெரிஞ் சுட்டீங்க, உங்களை சுடுவதைத் தவிர வேறு வழியே இல்லை”, என்றபடி மனைவியைக் குறி பார்த்தான்.

“எதுக்கும் நான் யாரை சுட்டேன்ங்கற பேரு தெரியனும். அதனால உன் பேரு என்ன?” என்றான்.

“வள்ளி”.

“அடடே உன்னைச் சுட முடியாதே வள்ளிங்கறது என்னோட அம்மா பேராச்சே.”

பிறகு கணவனைத் திரும்பிப் பார்த்து, “உன் பேரு என்ன?” என்று ஆத்திரத்தோடு கேட்டான்.

பயத்தில் நடுங்கிய கணவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “என்பேரு சுந்தர். ஆனா என்னை வள்ளிசுந்தர்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க” என்றான்.

திருடனின் அத்தனை கோபமும், தம்பதிகளின் பயமும் தனிந்துவிட்டது.

விஷயத்திற்கு வரும்முன்

ஒரு ஜென் கதையைப் பார்ப்போம்.

“குருவே, எனக்கு கட்டுப் படுத்த முடியாத கோபம் வருது. அதிலிருந்து விடுபட நீங்க உதவுங்க” – சீடன்.

“சீடா, உனக்கு கோபங்கற வித்தியாசமான உணர்வு இருக்குது. அதை எங்கிட்ட காட்டு” – குரு.

“இப்போது உடனே அதைக் காட்ட முடியாதே!”

“ஏன்?”

“திடீருனு தானே வருது.”

“அப்படீன்னா அது உன்னுடைய உண்மையான சொரூபம் இல்லையாச்சே. ஏன்னா உன்னுடையதா இருந்தா இப்போ உன்னால காட்ட முடி யுமே. உனக்கு இல்லாத ஒன்றை ஏன் உன்னை தொல்லை படுத்தற அளவுக்கு அனுமதிக்கறே?” – குரு

அன்று முதல் அந்த சீடன் கோபம் வரும்போதெல்லாம் குரு சொன்ன அந்த வார்த்தையை நினைவுக்கு கொண்டு வருவான். சில மாதங்களில் கோபமே இல்லாமல் அமைதியாகவும், நிதானமாகவும், செயல்படுகிற ஆற்றலைப் பெற்றான்.

மனிதனை சீர்குலைக்கச் செய்பவை இரண்டு விஷயங்கள் ஒன்று கோபம். மற்றொன்று, பயம்.

“கோபம் உண்டான மனதில் குழப்பம் உண்டாகும்;

குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும்;

சிந்தனை தருமாறும்போது தவறான முடிவுகளே உருவாகும்;

தவறான முடிவுகளால் தவறான செயல்கள் உண்டாகும்;

தவறான செயல்களினால் அழிவு ஏற்படும்.”

– கீதை

பயம் நம்மை நெருங்குவது, நாய் துரத்துவதைப் போன்றது. பயந்து ஓடிக்கொண்டேயிருந் தால் நம்மை மேன்மேலும் துரத்திக் கொண்டேயிருக்கும். தைரியத்துடன் எதிர்கொண்டால், திரும்பி ஓடிவிடும்.

கோபத்தின் போது சில நடைமுறைகளைக் கையாளலாம்.

ப் பிறரிடம் பேசுவதைத் தவிர்த்தல்;

ப் எந்த முடிவையும் செய்யாமை;

ப் அவசியமாக செய்ய வேண்டிய தாக ஏதாவது இருந்தால், அதை மறக்காமல் முடித்து விடுதல்;

ப் நல்ல நண்பர்கள் அல்லது ஆலோசகர்களை கலந்தாலோசித்தல்;

ப் தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுதல்;

ப் தனியறை கிடைத்தால் படுத்து, ஆழ்ந்த மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுதல். அமர்ந்தபடியே மூச்சை இழுத்து வெளிவிடலாம்.

ப் உடலில் கோபத்தின்போது அதிகமான அளவில் அட்ரீன லின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால், அதன் பாதிப்பைத் தவிர்க்க எளிய உடற்பயிற்சி களை (நேராக நின்று பின் குனிந்து தரையைத் தொடுதல்) சுமார் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

ப் காரமில்லாத சைவ உணவை உண்ணுதல்,

ப் யோகா மற்றும் தியானம் செய்தல்.

இவையாவும் கோபத்தின் பாதிப்புகளைக் குறைக்க உதவும்.

“பயமும், மனிதனின் இயற்கை இயல்புதான். ஒருவரின் பயம் எதுவாக இருந்தாலும் ஆறு காரணங்களின் அடிப்படையில் தான் அவை ஏற்படுகின்றன” என்கிறார் நெப்போலியன் ஹில் அவை:

1. வயதாகி விடுமோ?

2. ஏழையாகி விடுவோமா?

3. இறப்பு வருமோ?

4. நோய் வந்து விடுமோ?

5. பிறர் குறை சொல்வார்களோ?

6. நேசிப்பவரின் அன்பு போய்விடுமோ?

எது நமக்கு பயமளிக் கிறதோ அதை எப்படியாவது வென்றுவிட வேண்டும். இல்லை யேல் அப்பயம் நம்மை வென்று விடும்.

ஒரு அறிஞர் சொல்கிறார்.

அவசரப்படாதே! பயப்படாதே!

நீ விதைத்து விட்டாய். இனி, நிழலில் அமர்ந்து என்ன நடக்கிறதென்று பார்த்திரு.

விதை தளிரும். பின் முளைத்துவிடும். அதை விரைவுபடுத்த உன்னால் முடியாது.

எல்லா பாதைகளும் ஒரு முடிவிடத்தை நோக்கியே செல்கின்றன.

அதைப் புரிந்து கொள்ளுதல்தான் பயனளிக்கும்.

அதற்காக ஏற்படும் கால தாமதம் தவிர்க்க முடியாதது.

அதனால் பொறுத்திரு.

(தொடரும்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2003

திருச்சி தன்னம்பிக்கை பயிலரங்கம்
நிறுவனர் பக்கம்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க
சுயமுன்னேற்ற நூல்கள் திறனாய்வு
திறந்த மனமே சிந்தனை தெளிவாம்
உங்கள் மகளை/ மகனை படிப்பில்-பண்பில் சிறந்தவராக வளர்ப்பது எப்படி?
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
வாணவராயர் சிந்தனைகள்
வெற்றி நிச்சயம்
பொதுவாச் சொல்றேன்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றிமுகம்
உள்ளத்தோடு உள்ளம்
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
தோல்விகளை எருவாக்கு! வெற்றிகளை உருவாக்கு!!
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் மாணவர் பக்கம்
வெற்றியின் மனமே……
எமது பண்பாடு
நூல்கள் வெற்றியின் தூண்கள்
கேள்வி பதில் பகுதி
மாற்றம் மலரட்டும்
உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? கேளுங்கள் என்னை