Home » Articles » மாணவர் பெற்றோர் பக்கம்

 
மாணவர் பெற்றோர் பக்கம்


இரத்தினசாமி ஆ
Author:

வெற்றிப் பாதையில் பயணிக்க…

உங்களால் முடியும் (you can)

பிரபஞ்சத்தால் உருவாக்கப்பட்ட உயிரினங்களில், மனித இனம் மிக உயர்ந்தது. மனதைக்கொண்ட மனிதன் அதிலிருந்து வெளிப்படும் எண்ணங்கள் மூலமே உயர்வோ, தாழ்வோ பெறுகிறான். எண்ணங்களை நல்வழிப்படுத்தினால் வெற்றிப் படிக்கட்டுகளில் எளிதாக ஏறலாம்.

வேடந்தாங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பறவகளின் சரணாலயம். அந்த ஊரில் உள்ள நீர் நிறைந்த ஏரியைச்சுற்றியுள்ள மரங்களில் சில மாதங்கள் தங்கிச் செல்வதற்காக பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பறவைகள் கடல் கடந்து வருகின்றன.

நான் புறப்பட்ட இடத்திலிருந்து சென்று அடையும் இலக்கான வேடந்தாங்கல் வரும் வரை அந்தப் பறவைகள் தொடர்து பறந்து கொண்டேயிருக்கின்றன. இரவு, பகல் என்று பாராமல், மழை வெய்யில் என்று பயப்படாமல் உணவின்றி, உறக்கமின்றி தொடர்ந்து பல நாட்கள் பறந்து கொண்டேயிருக்கின்றன.

தன் இலக்கை அடைவதொன்றே குறிக்கோளாக இருக்கிறது. அந்தப் பறவைக்கு, தனது குறிக்கோளிலே வெறியாக இருக்கிறது.

நான்கு அல்லது ஐந்து அறிவுகள் பெற்ற சாதாரணமான ஒரு பறவையால் முடியும் போது, ஆறு அறிவு படைத்த உங்களால், ஏழாவது அறிவையும் பெற உள்ள உங்களால் உங்கள் இலட்சிய இலக்கை அடைய முடியாதா?

நிச்சயம் முடியும்! உங்களால் முடியும்!!

வெற்றிப் பாதையில் உள்ள கற்களைத் தூக்கியெறியுங்கள்:

உங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக நீங்கள் நினைப்பதை ஒவ்வொன்றாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதுங்கள். உதாரணமாக, கோபம், சோம்பேறித்தனம், தள்ளிப்போடும் மனப்பான்மை, மறதி, ஆசிரியர்கள் / அதிகாரிகளைக் கண்டால் பயம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிகையின்மை, அதிக தூக்கம், பொய் சொல்லுதல், பொறாமை போன்றவைகள்.

எங்கள் முகாமில் கலந்து கொண்ட ஒரு மாணவர் தன்னிடம் தடைகளாக 37 தடைக்கற்களை எழுதியிருந்தார். இருளடைந்து கிடக்கும் இத்தகைய மனதை வைத்துக்கொண்ட வெற்றிச் சிகரத்தில் எப்படி ஏற முடியும்?

மன இருளை நீங்கி வெளிச்சத்தை ஏற்ற முடியுமா?

இத்தகைய கேள்விகளுக்குள்ளே முடங்கியுள்ளனர் பலர். விரிவான விடைக்காக ஏங்குகின்றனர் சிலர்.

நிச்சயம் உங்களால் முடியும். நூற்றுக்கு நூறு முடியும். அதற்கான பலம், ஆற்றல் உங்களிடம் புதைந்துள்ளது. அதை வெளிகொணரத் தேவைப்படும் பயிற்சிகளைப்பெற்றால் அத்தடைகளை எரிக்க முடியும். தூக்கி எறிய முடியும். ஒளி படைத்த நெஞ்சுடன் வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.

தடைகள் எழுதப்பட்ட வெள்ளைத் தாளை கிழித்து ஒரு தகர டப்பாவில் போட்டு எரிக்கவும். நீங்குவதாக எண்ணவும, மீண்டும், மீண்டும் இப்பயிற்சியை செய்யவும்.

ஆற்றல் மிக்க ஆழ்மனம்

எண்ணங்கள் தோன்றுமிடம் மனம். மனம் ஒரு கரும் பலகை என்றால் அதில் எழுதப்படும் எழுத்துக்கள், எண்ணங்கள் . அலைந்து கொண்டிருப்பது மனதின் இயல்பு. அதை அறிந்து தெளிவது மனிதனின் மாண்பு.

மனதை புறமனம். ஆழ்மனம் என இருவகைப்படுத்தலாம். புறமனம் நடிக்கும். இடத்திற்கு தகுந்தாற்போல் நடக்கும். உதாரணமாக, வகுப்பாசிரியர் தந்த வீட்டுப் பாடத்தை நீங்கள் செய்யவில்லை. நேரத்தை T.V. யிலும், வெளியே சுற்றுவதிலும் கழித்து விட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். வகுப்பில் ஆசிரியர் “ஏன் வீட்டுப்பாடம் செய்து வரவில்லை” என்று கேட்டால் எத்தனை பேர் உண்மையைச் சொல்கிறீர்கள். தலைவலி, வயிற்று வலி என்று பொய் சொல்லி தப்பிக்கிறீர்கள். எனவே புறமனம் நடிக்கிறது. ஆனால், ஆழ்மனதிற்கு அனைத்தும் தெரியும்.

நீண்ட நாள் நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரைக்காண ஊட்டியில் இருக்கும் அவர் இல்லத்திற்கு செல்கிறார். ஒருவர், மலைமீது செல்லும் முதல் பயணம். வானுயர்ந்த மலைகள், சில்லிட்ட காற்று அவரது உடலைத் தழுவ, வளைந்து செல்லும் பாதையிலே புது அனுபவம் பெறுகிறார். நடுங்கும் குளிரில் நண்பரின் இல்லத்தை அடைய அவரை அன்புடன் வரவேற்கின்றனர். அவருக்கென ஒரு அறை ஒதுக்கப்படுகிறது.

அறையில் சுவர்கள், தரையெல்லாம் மரத்தால் மறைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. வெளிச்சம் மட்டும் வரவேண்டும். குளிர் காற்று வரக்கூடாது என்பதற்காக, பலமான விருந்து உபசரிப்பு. இரவில் குளிர் அதிகமாகிறது. அவருக்காக உல்லன் ஸ்வெட்டர், இரசாய் எனும் பஞ்சால் அடைக்கப்பட்ட மெத்தையான போர்வை, வெப்பமூட்டும் மின்சார ஹீட்டர் என்ற புதுமைகளுக்கிடையே உறங்கப் போனார் அவர்.

பிரயாண களைப்பு, அமைதியான சூழல், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதில் ஓர் கனவு. அடந்த காட்டில் அவர் மட்டும் தனிந்து விடப்பட்டார். மதம் கொண்ட யானை அவரைத் துரத்துகிறது. ஓட முயற்சிக்கிறார். கால்கள் நகர மறுக்கின்றன. பயத்தால் உண்மையாகவே வேர்க்கிறது. இதோ அருகே வந்த யானை அவர் மேல் மிதிக்க காலை மேலே தூக்குகிறது. அம்மா என்று அலறுகிறார். உண்மையாகவே.

கண்களைத் திறக்கிறார். ஒரே இருட்டாக உள்ளது. மின்சார வெட்டினால் எரிந்து கொண்டிருந்த இரவு விளக்கும் இருண்டது. எழுந்து கழிப்பறை போகலாம் என்றால் கால்களை நகர்த்தக்கூட முடியவில்லை.

வியர்த்துக் கொட்டியது. தன் உடல் மேல் போர்த்தப்பட்டவைகளை தூக்கி எறிந்தார். ஆனாலும் புழுக்கம். உடனடியாக காற்று தேவை அவருக்கு. இலையெனில் உயிர் போகும் நிலை. படுக்கைக்கு அருகில் இருந்த டேபிள் மேல் கைகளை தடவு பேப்பர் வெயில் அகப்பட்டது. அறை முழுவதும் கண்ணாடி ஜன்னல் என்பதால் ஏதோ ஒன்று உடையும் தூக்கி வீசுகிறார். பேப்பர் வெயிட்டை.

‘ஜல்’ என்று கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. ‘ஜில்’ என்று காற்று அவரை நோக்கி வீச ஆரம்பித்தது.

அவருக்கு தேவையான காற்று கிடைத்ததால் நன்கு உறங்கிப்போனார். காலைக் கதிரவனின் ஒளி முகத்தில் பட விழிப்பு நிலைக்கு வந்தவர் இரவில் காற்று வர உடைந்த கண்ணாடி ஜன்னலை மன வருத்தத்துடன் தேடினார். நண்பருக்கு செலவு வைத்து விட்டோமே என்று தேடிய அவருக்கு ஒரே அதிர்ச்சி.

ஆம். அந்த அறை ஜன்னலின் அனைத்துக் கண்ணாடிகளும் அப்படியே இருந்தன. ஆனால் முழு உயரத்தைக் காட்டும் நிலைக் கண்ணாடி மட்டும் உடைந்திருந்தது.

ஜில் என்ற காற்று வந்ததை அவர் உணர்ந்தாரே, அது எப்படி? ஜல் என்ற கண்ணாடி உடையும் சத்தம், அவர் ஆழ் மனதில் பதிந்து ஜில் என்ற காற்று வீசிய உணர்வை ஏற்படுத்தியது. காற்று வரவில்லையென்றால் உயிர் போய் விடும் என்று பயந்ததும் மனம்தான்.

வெறும் கண்ணாடி உடையும் சத்தம் காற்றை கொண்டுவந்ததாக நினைத்ததும் மனம்தான்.

ஆற்றல் மிக்க ஆழ்மனதை அறிந்து, அதில் உங்கள் எதிர்கால லட்சியத்தை, லட்சிய உருவகத்தை, நற்குணங்களை, செயல்கள், எண்ணங்கள் கொண்ட உருவத்தைப் பதித்து விட்டீர்களானால் அது செயல்பட ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் நான் முன்னேறிக் கொண்டே இருக்கிறேன்.

“Everyday in everyway I am getting better, better and better.”

பேரறிஞர் எமிலிகூலின் மேற்சொன்ன உயர்வளிக்கும் வாசகத்தை நினைவு கூறுங்கள்.

“எண்ணங்களாலே இந்த பிரபஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.”

“எண்ணங்களே உலகை ஆழ்கிறது”

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுகிறாய் (தத்துவமஸி)

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப”

என்றெல்லாம் எண்ணங்களின் மேன்மையைப் பற்றி தத்துவ மேதைகள் தவஞானிகள் அறிந்துணர்ந்து கூறியிருக்கின்றனர்.

புற மனதில் தோன்றும் எண்ணங்களை விட ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்கள் பல மடங்கு வலிமையானவை.

வெற்றிப் பாதையில் பயணம் செய்பவர்கள் ஆழ்மனதை இயக்கும் கலையை அறிந்திருந்தால் வெற்றி எளிதாகிறது.

வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் ஆழ்மனதை இயக்கத் தெரிந்தவர்களே

குறிப்பாக மாணவர் பருவத்திலிருந்தே (14 வயதிலிருந்தே) ஆழ்மனதை அறிய, இயக்க கற்றுக்கொண்டீர்களானால் உங்களிடம் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.

+2 வில் நீங்கள் நுழையும் போது உங்கள் மனச்சுமைகளை, மகத்தான வெற்றியாய் மாற்றும் வல்லமையை பெற்று விடுவீர்கள்.

வெற்றிப் பாதையில் எளிதாக பயணிப்பீர்கள். எப்படி ஆழ் மனதை இயக்குவது?

(அடுத்த இதழில் சந்திப்போம்.)

 

1 Comment

 1. M.J.SYED ABDULRAHMAN says:

  ஆல் மனதி ல் இத்தினி அதிசம? என்னும் ஆச்சிரியம் எப்படி ஐயா
  நல்ல சிந்தனி எனக்கும் தேவை இதை போல் நிறைய வரவேர்க்ரன் நன்றி
  நன்றி தன்னம்பிக்கை
  தங்கயு சார்
  ஜ. செயத்அப்துல்ரகுமான். அக்கௌன்டன்ட்

Post a Comment


 

 


December 2002

பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
மாணவர் பெற்றோர் பக்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
கோவையில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
புதிய விற்பனை உத்திகள்
பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்
கரூர் தன்னம்பிக்கை வாசகர் வட்ட அறிமுக விழா!
மனம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
மனசுவிட்டுப் பேசுங்க
மாபெரும் வெற்றிக்கு மாற்றமே அடிப்படை
வெற்றி முகம்
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
ஆசிரியருக்கு கடிதம்
வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
கனவே கண் வளராய்