கரைகண்டு திரும்பாத அலையாக வா…
கனல்பட்டு உருகாத மெழுகாக வா…!
தடைகண்டு தளராமல் நடைபோட்டு வா…
விடையொன்று வெற்றிக்கு வழிகாட்டும் வா…!
முன்னேற உன் வேர்வை வித்தாகட்டும்
முயற்சிக்கு உன்னுள்ளம் சொத்தாகட்டும்!
வளர்ச்சிக்கு வழிகாட்டும் வளர்பாதை தன்னில்
வாழ்நாளில் உன்கால்கள் நடைபோடட்டும்!
இமயத்திற்கு இணையாக உயரட்டும் நிலைகள்
இன்பத்தின் நிழலாக மலரட்டும் செயல்கள்!
தளராத மனதோடு போராடு நாளும்
மலராத கனமெல்லாம் மலர்ந்துன்னை சூழும்!
நிழலுக்கு ஏங்காமல் நிழலாக மாறு
நெஞ்சுக்கு அஞ்சாமை உரந்தன்னை போடு!
வரப்போகும் சமுதாயம் வாழ்த்தட்டும் உன்னை
தரப்போகும் சொல்லாரம் அணுகட்டும் விண்ணை!
-சிவசு
கோயமுத்தூர்

October 2002
























1 Comment
நல்ல கவிதை