Home » Articles » மனம் விரும்பும் பணம்

 
மனம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

-MLM பற்றிய புதுமைத் தொடர்

நண்பனே! நண்பனே! வெற்றியின் நண்பனே!

MLM வியாபாரத்தில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும்?

1. வாழ்க்கைக்குத் தேவையான பணம்.

2. குடும்பத்துடன் மகிழ்ந்திருக்க தேவையான நேரம்.

3. நமக்குப் பின்னாலும் நமது குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பு இது போல் இன்னும், இன்னும் பலப்பல பயன்கள் கிடைக்கும்.

இதனை முதலில் சந்தேகமின்றி, தெளிவாக, புரிந்து கொண்டு பின்னர் முழு ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

100% முழு ஈடுபாடு = முழுமையான வெற்றி 100 %

“Full Effort is Full Victory”

இதற்கு அடிப்படையான ஆறு செயல்பாடுகளை முறைப்படி கற்று, செயல்பட்டே தீர வேண்டும். உங்களுக்கு முன்னர் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இந்த ஆறினை கடந்து வந்தவர்களே.

எனவே, அச்சமில்லை, அச்சமில்லை, அச்சம் என்பதில்லையே – என உறுதியுடன். ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன், தன்னம்பிக்கையுடன் செயல்படப் புறப்படுங்கள்.

அடிப்படையான ஆறு செயல்பாடுகள் = வெற்றி (SIX BASICS = SUCCESS)

|. Make a visiting card & Change your dress – விசிட்டிங் கார்டு மற்றும் தகுந்த உடை.

II. Make a Name list – பெயர் பட்டியல் தயாரித்தல்.

III. Contacting & Inviting – தொடர்பு கொள்தல் & அழைப்பிதழ்.

IV. Show the Marketing Plan – MLM வியாபார திட்டத்தைக் காண்பித்தல்.

V. Follow Up – பின் தொடருதல்.

VI. Parenting New Born Distributors – புதிதாக உருவாகியுள்ள விநியோகஸ்தரை பராமரித்தல்.

I. VISITING CARDS (or) BUSINESS CARDS

நீங்கள் ஒரு வியாபார வாய்ப்பை மற்றவர்களுக்குத் தரும் உயர்ந்த நிலையில் இருப்பவர் எனில் உங்களுக்கென விலாசம் இருக்குமல்லவா? அவர்கள் நினைத்தால் உடனே உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டுமல்லவா? இதற்குத்தான் தேவை விசிட்டிங்கார்டு.
எனவே முதலில் விசிட்டிங் கார்டு உருவாக்குங்கள். இதன் மூலம் தான் உங்களது வியாபாரம் மற்றவர்களிடம் சென்று வளரப் போகிறது. எனவே இதனை Business Building Card (BBC) எனலாம்.

இதன் மூலம் உங்களுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் வியாபரத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும்.

உங்கள் வெற்றிப் பயணத்திற்கான டிக்கெட் விசிட்டிங் கார்டு

A Ticket of you Succes is Visiting Card

என்னங்க! இதெல்லாம் எல்லா வியாபாரத்திற்கும் அடிப்படையான, அவசியமான, விசயம்தானே என நினைப்பது புரிகிறது. என்ன செய்வது செய்யாமல் இருப்பவர்களுக்கு சொல்லித்தானே ஆக வேண்டும். நண்பரே! இதைப் படித்தவுடன், அடித்த விசிட்டிங் கார்டினை அனுப்பி வையுங்கள் ஆசிரியருக்கு – நினைவுப் பரிசாக.

CHANGE YOUR DRESS

முதலிலேயே இந்த விசயத்தைப் பற்றி நாம் விவாதித்திருந்தாலும் அடிப்படையானதில், அவசியமானதாக இருப்பதால் ஒவ்வொரு தொழில் புரிபவரும் அதற்குரிய உடை (மருத்துவர், நடத்துநர், ஓட்டுநர், சர்வர், வக்கீல், போலீஸ் ங்ற்ஸ்ரீ…) அணிவது ஒன்றும் புதிதல்லவே!

எனவே மக்களை அணுக வேண்டிய மல்டி லெவல் மார்கெட்டிங் வியாபாரத்திற் குரிய உடையணிந்து (Full Shirt, Pant, Tie, Belt, Shoes) புறப்படுங்கள்.

உங்களை மாற்றிக்கொள்ள சற்று கால தாமதமானாலும், உங்கள் உடைகளையாவது உடனே மாற்றுங்கள். மாற்றினால் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்; அதனை வாங்கிக்தந்த பெருமையெல்லாம் எனது உடையைச் சேரும் – என ஆனந்தமாகப் பாடலாம்.

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நல்ல தினங்களில் கல்யாணம், பிறந்தநாள், பிற விஷேசங்களில், நன்றாக உடுத்துகிறோம். வருந்தக் கூடிய தினங்களில், துக்க நாள், உடல் நலக்குறைவு தினங்களில் சுமாராகவும், மோசமாகவும் உடையணிகிறோம். என்ன சார் உண்மைதானே?

மேலும், ஆள்பாதி, ஆடை பாதி என்பதும் ஒப்புக்கொண்ட பழமொழிதானே!

மற்றவர்கள் உங்களை விரும்பும்படி, அழகாக உடையணிந்து சென்று பாருங்கள். தடைகள் தானாக வழி விடும்.

If you wear shoes, success near you
If you change your dress, success reach your pocket.

II Make a Name List – பெயர் பட்டியல் தயாரித்தல்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரம் (MLM) மக்கள், மக்களுடன் உறவாடி செயல்படவேண்டிய வியாபாரம். அதிக மக்கள் இதில் இணைந்து செயல்பட வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?

அதிகளவு மக்களை பட்டியலிட்டு (LIST) அவர்களிடம் ஙகங வியாபாரத் திட்டத்தை (STP) காண்பிக்க வேண்டும், அவ்வளவுதான்.

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தவர்களின் பட்டியல் இருந்தாலும், எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். எனவே, ஒவ்வொருவரும் இந்த வியாபார வாய்ப்பை உங்களுக்கு வழங்கியவருடனும் (Sponcer) வழிகாட்டுபவருடனும் (Upline) இணைந்து பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு, குறைந்த பட்சம் 100 பேர்களை பட்டியலில் பூர்த்தி செய்யலாம்.

ஒ. கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்த்தவுடன் உங்கள் நினைவிற்கு வருபவரைக் குறிப்பிடவும்

1. Doctors 21. Bus Drivers 41. Press Owners
2. Medical Representatives 22. Bus Conductors 42. TV Shop Owners
3. Pharmasist 23. Plumbers 43. Departmental Stores
4. Medical Shop Owners 24. Carpenters 44. Readmade shop owners
5. X-Ray Technicians 25. Electricians 45. Fancy Shop owners
6. Lab Technicians 26. Supervisors 46. Studio Owners
7. Optical shop owners 27. Cable TV Operators 47. Book Shop Owners
8. Physiotherphist 28. Teachers 48. Press Reporter
9. Nurse 29. Lecturers 49. Sweet stall owners
10. Insurance Agents 30. Head Masters 50. Jwellery Owners
11. Real Estate Agents 31. Principals 51. Lottery Agency
12. Marriage Agents 32. Bank Managers 52. Private Employees
13. Two-Wheeler Agents 33. Bank Cashiers 53. Xerox Owners
14. Cell-phone Agents 34. Paper Delivery boys 54. STD Booth Owners
15. Engineers 35. Milk Men 55. Tailors
16. Police Inspectors 36. Lodge Owners 56. Hair Designers
17. Fire Service Men 37. Hotel Owners 57. Beauticians
18. Car Dealers 38. Writers 58. Travel Agency
19. Car Drivers 39. Singers 59. VRS Persons
20. Auto Drivers 40. Dancers 60. Retired persons

II. A,B,C,D- வரிசைப்படி உங்களுக்கு தெரிந்தவர்களின் பெயர்களைப் பட்டியல் இடவும்.

இரண்டு பயிற்சிகளில் கிடைத்த பெயர்களை இணைத்து கீழ்க்கண்ட வகைப்படி முறைப்படுத்த வேண்டும்.

நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக் காரர், முன்பு, தற்போது பள்ளி கல்லூரியில் படித்தவர்கள், வியாபாரத்தில் அறிமுகம், உடன் பணிபுரிபவர்கள், சற்றே தெரிந்தவர்கள்.

இவர்களில் நீங்கள் அணுக வேண்டியவர் களை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். முன்னுரிமை 0-100 கி.மீ தொலைவிற்குள் இருப்பவர்கள். அடுத்து 100 கி.மீ மேல் தொலைவில் இருப்பவர்கள்

இதன்படி பெயர் பட்டியல் தயாரித்து செயல்படுபவர்கள் மிக விரைவில் வெற்றியை அடையலாம்.

பெயர் பட்டியல் தயாரிக்கும் பொழுது யாரையும் முன்கூட்டியே கணிக்க வேண்டாம். (Don’t Prejuide). உங்கள் பெயர் பட்டியல் விரிவடைந்து கொண்டிருக்க புதிய நண்பர் களை உருவாக்கிக் கொண்டே இருக்கவும்.

“Consistantly Create New Friends for Bigger, Better, Great Business”

III Contacting & Inviting – தொடர்பு கொள்தல் & அழைப்பிதழ்.

பெயர் பட்டியலைத் தயாரித்தவுடன் அடுத்து ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தென்ன? அவர்களைத் தொடர்பு கொண்டு, அழைத்து, திட்டத்தைக் காண்பிக்க வேண்டியதுதான்.

தொடர்பு கொள்வதிலும், அழைப்பதிலும் வெற்றியாளர்கள் பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வெற்றி நிச்சயம்!

ஙகங வியாபாரம் பலவகையான மக்களை ஒருங்கிணைத்து நட்புடன் சேவை செய்வதன் மூலம் நாமும் பலன் அடைவதேயாகும்.

ஒருவரை அணுகும்போதும், புரிய வைக்கும் போதும், இணைக்கும் போதும் கொஞ்சம்… கொஞ்சம்… சிரமமாகத்தான் இருக்கும்.

நன்கு பேசிட கற்றுக் கொண்டால் எளிது. எனவே, பேசிடக் கற்றவர்க்கு “பேசினால் காசு”

ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்?

எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும்?

எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?

ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்?

இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரத்தில் உங்களின் கீழே இணைபவர் களால்,

1. உங்களது வாழ்க்கைத் தரம் உயர்வடையப் போகிறது.

2. உங்களது கனவுகள் நனவுகளாகப் போகிறது.

3. உங்களது தலைமுறையினர் நலமாக இருக்கப் போகிறார்கள்.

4. உங்களது உழைப்பு நிறுத்தப்பட்டு விட்டாலும் தொடர்ந்து வருமானம்.

ஆகவே ஆர்வத்துடன், அன்புடன், பண்புடன், பாசத்துடன், தொடர்பு கொள்ளுங்கள். பொறுமையுடன், விடா முயற்சியுடன், சகிப்புதன்மையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும்?

1. தொலைபேசி மூலமாகவோ, அழைப்பிதழ் மூலமாகவோ, நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.

2. பிறந்த நாள், திருமண நாள், என விழா தினங்களில் தொடர்பு கொள்ளலாம்.

3. நீங்கள் மனைவியுடன் சென்று அழைத் தால் அவரும் மனைவியுடன் வருவார்.

4. ஆர்வத்தைத் தூண்டி, பணத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் தொடர்பு கொள்ளவும்.

5. உங்களுக்கு இந்த ஙகங வியாபார வாய்ப்பை அளித்தவர் உதவியுடன் தொடர்பு கொள்ளவும்.

6. உங்களது பெயர் பட்டியலில் உள்ளவர் களை எவ்வளவு சீக்கிரம் தொடர்பு கொண்டு அழைக்க முடியுமோ அதற்குள் தொடர்பு கொள்ளவும்.

எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?

1. நேருக்கு நேராக நீங்களும், அவரும் சந்தித்து உரையாட முன் அனுமதி பெற One to One Plan.

2. உங்களது வீட்டில் சிறிய கூட்டத்தினை ஏற்படுத்தி, அதில் அவர் கலந்து கொள்வதற்குத் தகவல் தர House Meeting.

3. வாராவாரம் உங்களது குழுவிற்காக நடைபெறும் வாய்ப்பாளர்கள் கூட்டத் திற்கு அழைப்பதற்காக. Weekly Prospects Meeting.

4. வெற்றியாளர்கள் அவர்களது வெற்றியை எடுத்துரைக்கும் சாதனைக் கருத்தரங்கத் திற்கு அழைப்பதற்காக (Business Building Seminars, Rallys)

Inviting – அழைத்தல்

புதிதாக இந்த வியாபாரத்தில் இணைந்தவர்கள் முதலில் மக்களை அணுகும் முறையைக் கற்றுக்கொண்டால் வெற்றி என்பதை முன்பே பார்த்தோம்.

எப்படி மக்களை அணுகுவது என்ற இரகசியம் புரிந்துவிட்டால், வாய்ப்பளிக்க யாருமில்லையே என்ற கவலை பிறக்காது.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

இந்த வியாபாரத்தினை உலகில் எங்குமுள்ள மக்களுடனும் இணைந்து செய்யலாம். நமது இந்திய தாய்த்திரு நாட்டின் பிரச்சனையே 1. மக்கள் தொகை

2. வேலையில்லா திண்டாட்டம் இரண்டுதான். ஆனால் ஙகங வியாபாரத்திற்கு தேவையே இவ்விரண்டும்தான். எனவே எப்போதும் அழைத்தலை நிறுத்த வேண்டியதில்லை.

வாராயோ தோழா! தோழி வாராயோ!

வளமான எதிர்காலம் காண்போமே!

நீங்களாக பத்து நபர்களை அழைத்தும் வராவிட்டால், உடனே தங்களது செயல்பாடு களை உங்களது ஸ்பான்ஸரிடம் தெரிவித்து சரி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் அழைத்தவர் வரவில்லையே என ஒருபோதும் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நீங்கள் அவரது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியும் அவருக்கு புரியவில்லை.

புதிதாக இந்த வியாபாரத்தில் இணைந் தவர்கள், உடனடியாக ஆர்வமுடன் அவர் களது உறவினர்களை, நண்பர்களை அழைத்து, அவர்கள் நிச்சயமாக வந்து விடுவார்கள் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன? வரமாட்டார்கள். வந்தாலும் சேரமாட்டார்கள். சேர்ந்தாலும் செயல்பட மாட்டார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளில் கவலை, அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை, நம்மால் முடியாது என்ற எண்ணங்கள் தோன்ற விடாமல், ஸ்பான்ஸர் / அப்லைன் மூலம் இதனை சாமர்த்தியமாக சமாளிப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

வெற்றியின் இரகசியம் தெரியுமா? “விடாமுயற்சி” தான். எதிர்ப்பு, கேலி, தோல்விகளுடன் மனம் தளராமல் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுவதுதான் விடாமுயற்சி.

புனிதமான MLM வியாபாரத்திற்கு மற்றவர் களை அழைப்பதற்கு, புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களும், செய்யக் கூடாதவைகளும்.

1. ஒருவரிடம் போய் நான் கேட்பதா என்ற “EGO” வை விட வேண்டும்.

2. அவரது வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் வாய்ப்பினைத் தருகிறீர்கள்.

3. யாரையும் கெஞ்ச வேண்டாம், கட்டாயப் படுத்த வேண்டாம்.

4. பதட்டப்படாதீர்கள், கோபப்டாதீர்கள், அவசரப்படாதீர்கள்.

5. முழு ஈடுபாடின்றி செயல்படாதீர்கள்.

6. வாக்குவாதம் செய்யாமல், நானும் உங்களைப் போலத்தான் என ஒத்துப் போங்கள்.

7. இது ஒரு சிறிய வியாபாரம் என்று கூறாதீர்கள்.

8. உங்களுக்கு இதனால் ஆதாயம் என்று எண்ணும்படி பேசாதீர்கள்.

9. இந்த வியாபாரம் மிகவும் கஷ்டம் என்று எண்ணும்படி பேசாதீர்கள்.

10. தொலைபேசியில் அதிக நேரம் பேசாதீர்கள்.

அழைப்பு விடுக்கும்போது செய்ய வேண்டியவை:

1. உங்களுக்கு நேரமின்றி பிசியாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளுங்கள்.
2. உற்சாகமாக, உல்லாசமாக, தெளிவாக, உறுதியுடன் செயல்படுங்கள்.
3. ஆர்வத்தைத் தூண்டி, நேரத்தை நிர்ணயிப்பதில் கவனமாக இருங்கள்.
4. கேள்விக்கு, கேள்வியிலேயே பதில் கூறுங்கள்.
5. உண்மையாக, நம்பிக்கையுடன் நான்கு முறையாவது அன்புடன் அழையுங்கள்.

புதியதோர் உலகிற்கு அழைப்பிதழ்

MLM வியாபாரத்திற்காக நீங்கள் அணுகும் நபர், இந்த வியாபார முறையினை தெரியாதவர். பல தோல்வியாளர்களின் காரணங்களைக் கேட்டவர். அவற்றையெல்லாம் உண்மையென நம்பி, “எனக்கு எல்லாம் தெரியும்” என்ற மமதையில் இருப்பவர்கள்.

ஆகவே, “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்பதையும், “தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு”, என்பதையும் எடுத்துரைத்து, நாம்தான் அன்புடன், பொறுமையுடன் அழைக்க வேண்டும்.

இன்னும்… இன்னும்… அழைப்பு விடுத்தல் குறித்தும், திட்டம் காண்பித்தல் குறித்தும், மகாத்மா பிறந்த மாதத்தில் தொடரும்…

வழிகாட்டுதல் தொடரும்.

இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும்!

 

2 Comments

  1. tamil says:

    All super. Continue ur jobs

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்