Home » Articles » வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்

 
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்


admin
Author:

வெளிநாடு சென்று உயர்கல்வியைத் தொடர, குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் படிக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றி முந்தைய கட்டுரைகளில் படித் திருப்பீர்கள்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், அங்குள்ள கல்வி வாய்ப்புகள் மற்றும் வழிமுறை கள் குறித்து இந்தக்கட்டுரையில் காண்போம்.

ஆஸ்திரேலியா

கண்டமே தேசமாய் இருக்கிற நாடு ஆஸ்திரேலியா. நமது இந்திய மாணவர்கள் தற்போது மிகுதியாக சென்று படிக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று.

இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில், கணினிக் கல்வி, மேலாண்மைக் கல்வி போன்ற படிப்புகளில் சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

நமது மாணவர்கள் தங்கிப் படிப்பதற் கான தட்ப வெப்பம் இங்கு உள்ளது. இங்கு பேச்சு மொழியும் பாட மொழியும் ஆங்கிலம் என்பதால் நமது மாணவர்களுக்கு இசைவான கூடுதல் வாய்ப்பாகும்.

ஆஸ்திரேலியாவில் 35க்கும் மேற் பட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன. குயின்ஸ்லாந்து, சிட்னி, மெல்போர்ன் ஆகியவை உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள்.

பொதுவாக, ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களில் அனைத்து பட்ட வகுப்பு களுக்கும் சேர்க்கை பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். சில படிப்புகளுக்கு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பரில் கூட சேர வாய்ப்புகள் உள்ளன. சில மாணவர் களுக்கு உதவித்தொகை கிடைக்கலாம்.

படிக்கும்போதே பணிபுரிந்து பொரு ளீட்ட சிட்னி, மெல்போர்ன், கான்பெர்ரா ஆகிய நகரங்களில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கின்றன. மாணவர்களும் இங்கு படிப்பதை விரும்பு கின்றனர். அங்கு வேலை வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தியப் படிப்புகளை ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் ஏற்றுக் கொண்டாலும், பல்கலைக்கழகங்களைப் பொருத்து விதிமுறை கள் மாறுபடும்.

பொதுவாக, நல்ல மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற்றிருப்பதுடன் GMAT, TOEFL ஆகிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக எழுதியோ அல்லது அவற்றின் அங்கீகாரம் பெற்ற ஆலோசனை நிறுவனங் களிலோ பல்கலைக்கழகங்கள் பற்றிய விவரங் களையும் விண்ணப்பப் படிவங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, IDP Education
Australia, 2B Crystal Lawn, Wallace Garden, 20, Haddows Road First Street, Nungambakkam, Chennai – 600 006.
Email : idp.mds@gnmds.global net.vsnl.net.in

ஆஸ்திரேயாவில் உள்ள எந்தப் பல்கலைக் கழகத்தில் நீங்கள் படிக்க விருப்பினாலும் அங்கு என்னென்ன படிப்புகள் உள்ளன? எப்படி விண்ணப்பிப்பது? பல்கலைக்கழக உதவித்தொகைகள் ஏதேனும் உண்டா, என்ற விபரம் பெறவும், அங்கு படிக்கச் சொல்லவும் Dilinger Consultants நிறுவனத்துடன் dheviakilaa@ yahoo.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள இரண்டு பல்கலைக் கழகங்கள் மிகவும் புகழ்வாய்ந்தவை. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஆகும்.

இஃதன்றி சிங்கப்பூரில் உள்ள பாலிடெக்னிக்குகள் மிகவும் புகழ்பெற்றவை பட்டப்படிப்பைவிட பல்வேறு தொழில் பயிற்சி தொடர்பான படிப்புகளில் பலர் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.

சிங்கப்பூரில் பொறியியல் படிப்பு 4 ஆண்டுகள். பட்டப்படிப்பு 3 ஆண்டுகள், முதுநிலைப் படிப்புகள் 2 ஆண்டுகள்.

கல்வி ஆண்டு ஜூலையில் தொடங்கு கிறது. அறிவியல் பொறியியல், கம்பியூட்டர் என்ஜினியரிங் போன்ற துறைகளில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிப்பதற்கான உதவித் தொகையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், நெப்டியூன் ஓரியண்ட்லைன்ஸ் நிறுவனமும் வழங்குகின்றன.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகை பெற்று படித்து வருகின்றார்கள்.

இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. இளநிலைப் பட்ட வகுப்பில் தொடர்ந்து மிகச் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன், முதுநிலைப் பட்ட வகுப்பில் படிக்கும் வாய்ப்பும் வழங்கப்படு கின்றது. ஆண்டுக்கு அறுபதாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் கல்வி உதவித்தொகையாகக் கிடைக்கும்.

படிப்புக் கட்டணம் தவிர, பல்கலைக் கழகத்தின் பிற கட்டணங்கள், விமானத்தில் சென்று படிப்பு முடித்து திரும்புவதற்கான விமானக் கட்டணம் போன்றவற்றையும் அந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கல்வி உதவித்தொகை பெற்றுப் படிக்கும் மாணவர்கள், சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 6 ஆண்டு பணிபுரியவேண்டும். பணியின்போது மற்ற ஊழியர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போல ஊதியமும் பிற சலுகைகளும் கிடைக்கும்.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி, உதவியைப் பெறுவதற்கு உரிய விதிமுறைகள் குறித்த விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியிடப்படும். அதன் பின்பு விண்ணப்பித்து பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பில் ஆங்கில மொழிப் பாடத்தை படித்திருக்க வேண்டும். மேலும் 85%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தகுதியுடைய மாணவர்களுக்கு மே மாதத்தில் நம் நாட்டிலேயே தேர்வு நடத்தப் படும். அதில் வெற்றி பெறுகிறவர்கள் பிறகு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

நாளிதழ்களில் விளம்பரம் வந்தபிறகு பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Sia-Nol Scholarships, C/o. Robinson Road, P.O. Box. 746, Singapore – 901 446, Republic of Singapore @pXÕ Sia-Nol Scholorships, 5D Airline House, 25 Airline Road, Singapore – 819 829.

சிங்கப்பூரில் உள்ள பிற கல்வி வாய்ப்புகள் குறித்து அறிய சிங்கப்பூர் தூதரகத்தில் கேட்டறியலாம்.

அதன் முகவரி,
Consulate of the Republic of Singapore, No. 3, 8Th Street,
Dr. Radhakrishnan Salai, Chennai – 600 004. Phone No. 8415541, E.mail : singcon@vsnl.com

மேலும் இணையத்தளம் மூலமாகவும் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள், தகுதிகள், கல்விக் கட்டணங்கள் போன்ற வற்றை அறிய முடியும்.

– தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2002

பாபாஜி என்ற மகான்
சிந்தனைத் துளி
மனம் விரும்பும் பணம்
முயற்சி வேதங்கள்
வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நம்பிக்கை நிறைவே நலமிகு வாழ்க்கை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
உறவுகள் உணர்வுகள்
பெற்றோர் பக்கம்…
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
வெற்றியின் மனமே…
கேள்வி பதில் பகுதி
பொதுவாச் சொல்றேன்
உலக குழந்தைகளுக்கான அமைதி மாநாட்டில் நம் உள்ளூர் அரும்புகள்!
உள்ளத்தோடு உள்ளம்