![]() |
Author: இராமநாதன் கோ
|
“அப்பா, ஒரு மணி நேரத்திலே எவ்வளவு பணம் சம்பாதிப்பீங்க?” என்ற கேள்வியுடன் அப்பாவை வரவேற்கிறான் அச்சிறுவன்.
களைப்புடன் திரும்பிய தந்தை ஆச்சரியத்துடன், “இது உங்க அம்மாவுக்கு கூட தெரியாது. உனக்கு அதெல்லாம் வேண்டாத விஷயம்; நான் ரொம்ப களைப்பாயிருக்கேன்” சொல்லிக்கொண்டே உள்ளே போனார்.
“அப்பா, ப்ளீஸ் சொல்லுங்க. எவ்வளுவு பணம் சம்பாதிப்பீங்க”
“சீ… விடு. ஒரு மணி நேரத்திலே ஐம்பது ரூபா” வெறுப்போடு சொன்னார்.
“சரி, எனக்கு ஒரு இருபத்தைஞ்சு ரூபா கடன் கொடுங்கப்பா”
“பணத்துக்காகத்தான் இவ்வளவு அக்கறையா கேட்டியா? போய் தூங்கித்தொலை; இனிமே இப்படி தொல்லை பண்ணாதே”.
படுக்கைக்கு போன தந்தைக்கு ‘தப்பா சொல்லிவிட்டோமா; ஏதாவது முக்கியமானது வாங்க கேட்டிருப்பானோ’ என்ற குற்றவுணர்வு.
திரும்ப மகனிடன் வந்தார்.
“கண்ணா! தூங்கிட்டியா?”
“இல்லையே அப்பா”
“இந்தா பணம். நீ முந்தி கேட்டியே!”
“தேங்க்ஸ், அப்பா பணம் வேண்டாம். இதோ நான் ஐம்பது ரூபா தர்றேன். நீங்க ஒரு மணி நேரம் எனக்காக ஒதுக்க முடியுமா?” என்றபடி தலையணை அடியிலிருந்த ஐம்பது ரூபாயை அப்பாவிடம் நீட்டினான்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்களுக்கு பிரச்சனைகள் என்னென்ன?
பள்ளியில் சிறு சிறு குறும்புகள்.
வீட்டில் சில பொருட்களை வீண் செய்தல்.
பள்ளிக்கு போகாமல் விளையாடி விட்டு திரும்புவது.
படிப்பு ஏறவில்லையென வீட்டிலேயே விட்டு விடுதல்.
குழந்தை தொழிலாளர்கள் பிரச்சினைகள் போன்றன. ஆனால் சமீப காலாமாக இளம் தலைமுறையிடம் காணப்படுகின்ற பிரச்சினைகள் என்னென்ன?
மதுப்பழக்கம், புகைப்பழக்கம்மற்றும் போதைப் பொருட்கள்.
எய்ட்ஸ் நோய்
தீவிரவாத செயல்களில் ஈடுபாடு
திருமணத்திற்கு முன்பே கற்பமாகுதல்
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் சுமூகமின்மை
டென்ஷன் பிரச்சினை
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமென்ன?
பெற்றோர்கள் பணத்திற்கு முதலிடம் கொடுத்து செயல்பட்டதும் சமூக சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களுமே.
இங்கு இளந்தலைமுறையின் முக்கிய கேள்வி:
“உங்க காலத்துக்கு வேண்டுமானால் இதெல்லாம் சரியாக இருக்கலாம். இப்ப இருக்கிற நிலமைக்கெல்லாம் இதெல்லாம் சாத்தியமா?”
இப்படி பல அபிப்ராயங்களுக்கு இளையதலைமுறையினர் கேட்பது நம் காதில் விழத்தான் செய்கிறது.
இதற்கு பதிலை ஒரு அறிஞர் சொல்கிறார்.
“என் பெற்றோரக் எனக்கு கொடுத்த சொத்துக்களிலேயே மிகப் பெரியது என்னவென்றால்…
எல்லையில்லாத அன்பு.
வாழ்ந்த பண்பான முறைகள்,
சரி எது? தவறு எது? என புரிய வைத்தது.
கடும் உழைப்பின் முக்கியத்துவம்.
சுயமரியாதை மற்றும் தரமான கல்வி
இவைகள்தான்; அதனால்தான் இந்த நிலைக்கு உயர்ந்தேன்.
காலங்கள் மாறலாம்; மனிதனின் கோலங்கள் மாறலாம்; கோர்ட்டில் சாட்சிகளும் மாறலாம். ஆனால் மனித வாழ்வில் அடிப்படை உண்மைகள், இயற்கை நியதிகள் மற்றும் பண்புகள் எக்காலத்திலும் மாறுவதில்லை.
பணத்தை எடுத்துக் கொண்டால் அதன் அவசியத்தை யாரும் மறக்க முடியாதுதான். ஆனால், அதனால் முடியாததையும் அறிதல் அவசியமே.
“பணத்தால் கட்டிடத்தை வாங்க முடியும்; ஆனால் குடும்பத்தை வாங்க முடியாது.
பணத்தால் கடிகாரத்தை வாங்க முடியும்; ஆனால் நேரத்தை வாங்க முடியாது.
பணத்தால் உணவை வாங்க முடியும்; ஆனால் ஜீரணத்தை வாங்க முடியாது.
பணத்தால் பதவியை வாங்க முடியும்; ஆனால் மரியாதையை வாங்க முடியாது.
பணத்தால் இரத்த்ததை வாங்க முடியும்; ஆனால் உயிரை வாங்க முடியாது.
பணத்தால் மருந்தை வாங்க முடியும்; ஆனால் நலத்தை வாங்க முடியாது.
பணத்தால் இன்ஸ்யூரன்ஸ வாங்க முடியும்; ஆனால் பாதுகாப்பை வாங்க முடியாது”.
“பண்போடு சேர்ந்த பணம் – உயர்வு
பண்பில்லாத பணம் – ஆபத்து”

August 2002














1 Comment
உங்களோட கட்டுரை ரொம்ப usefulla இருக்கு. தொடர்ந்து
எழுதுங்க .