Home » Articles » வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….

 
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….


admin
Author:

கனடா

அமெரிக்காவைப் போலவே; கனடா நாட்டிற்கும் நமது மாணவர்கள் கணிசமான அளவினர் மேற்படிப்புகளுக்குச் செல்கின்றனர். கனடா பல்கலைக்கழகங்களும் அமெரிக்க கல்வி நிலையங்களுக்கு இணையாக கருதப்படுகின்றன. அமெரிக்காவில் படிப்பதற்கு ஆகும் செலவைவிட கனடாவில் செலவு குறைவு என்பதால் இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களும் உண்டு.

பிரெஞ்சு, ஆங்கிலம்

கனடாவில் பெரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் ஆட்சி மொழிகள். இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டுமோ பயிற்று மொழியாக இருக்கும். எனவே அங்கு படிக்கச் செல்கிறவர்களுக்கு இந்த இரு மொழிகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். டோஃபெல் (TOEFL) . தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

செமஸ்டர் முறை

பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் முறை நடைமுறையில் உள்ளது. கனடா பல்கலைக்கழகங்கள் கல்வி ஆண்டை இலையுதிர் காலம் (Fall) , வசந்த காலம் (Spring) இரண்டாகாப் பிரித்துள்ளன. இலையுதிர் காலத்தல் சேரும் வெளி நாட்டு மாணவர்களுக்கு சில பல்கலைக்கழக்கள் அடிப்படை பயிற்சியை அளிக்கின்றன.

உதவித்தொகை

இளநிலைப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதறக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.முதுஇலைக்கல்வி பயிலும், மாணவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர். பயிற்சி உதவியாளர் ஆகிய பணிகள் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதால் அதன் வழியாக கிடைக்கும் தொகை ஓரளவுக்கு கல்வி கற்க போதுமானதாக இருக்கும்.

கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள படிப்புகள் குறித்து தில்லியில் உள்ள கனடா ஹைகமிசன் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்களைப் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு www.study_in_canada.com, அல்லது www.ei.worldwide.com இணையத் தளங்களின் மூலமும் தகவல் பெறலாம்.

ஜெர்மனி

பொறியியல் கல்விகுப் புகழ்பெற்ற கல்விநிறுவனங்கள் ஜெர்மனியில் பல உள்ளன. அண்மைக்காலமாக உயிர்தொழில் நுட்பவியல் கல்விக்கும் பலர் செல்கின்றனர். பொதுவாக கல்வித் துறையில்புகழ்பெற்ற நாடுகளில் முதன்மையானவற்றில் ஜெர்மனியும் அடங்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 11/2 இலட்சம் மாணவர்கள் ஜெர்மனியில் பயின்று வருகின்றனர்.

ஜெர்மன் மொழி

பெரும்பாலும் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக மாணவர்கள் ஜெர்மனி செல்வர். அதற்கு முன்னதாக சென்னையில் உள்ள மாக்ஸ் முல்லர் பவன மூலம் ஜெர்மன் மொழியைக்கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.அப்போதுதான் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி ஜர்ன் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிக்க முடியும்.

ஆங்கிலமும் பயிற்று மொழி

சமீபகாலமாக பொறியியல் போன்ற சில படிப்புகளுக்கு சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் வகையில் ஆங்கில மொழி வாயிலாகவும் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர்.

தேர்வு

ஜெர்மனியின் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் முறையே நடைமுறையில் உள்ளது. அக்டோபரிலிருந்து மார்ச் வரையிலும் பிறகு ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலும் என ஆண்டுக்கு இரண்டு பருவங்களாக நடைபெற்று வருகின்றனர். மற்ற சமயங்களில் விடுமுறையாக இருந்தாலும் கல்வி தொடர்பான கருத்தரங்குகள், பணியரங்குகள் நடைபெறும். குறித்த கால இடைவெளிகளில் தேர்வுகள் நடத்தப்படும். இருப்பினும் கருத்தரங்குகளில், செய்முறைப் பயிற்சிகளிலும், வகுப்பறைகளிலும் மாணவர்கள் எப்படி திறம்படப் பங்கேற்றுச் செயல்படுகிறார்கள் எனபதும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.

மருத்துவம் மற்றும் பிற தொழில் நுட்பக் படிப்புகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் உரிய அனைத்துப் பாடங்களையும் முற்றாக அறிந்த பிறகுதான் அடுத்த செமஸ்டருக்குப் போக முடியும்.

ஆய்வுப் படிப்பு

ஜெர்மன் அகாடெமி எக்சேஞ்சு சர்வீஸ் மூலமாக அந்தந்த நாட்டு அரசுகளின் வழியாக கல்வி உதவித்தொகையை ஜெர்மன் அரசு வழங்குகிறது. முனைவர் பட்ட ஆய்வுக்கு ஏரும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கும். சில ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் அங்க பட்டப்படிப்புகு கட்டணம் வாங்குவதில்லை.

கல்விச் சலுகைகள்

ஜெர்மனியில் தங்கிப் படிப்பதற்கு மாதம் 500 டாலர் செலவாகும். இந்தச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளும் வகையில் ஜெர்மன் அரசு சில சலுகைகளை அளித்து உள்ளது.

சர்வதேச மாணவர்கள் நகர பேருந்த களில் பயணம் செய்ய குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழக கேண்டீன்களில் சலுகை விலையில் சாப்பாடும் அளிக்கப்படுகிறது.படிக்கும் போதே மூன்றுமாதம் தொழில் நிறுவனங்களில் பகுதிநேரப் பணிபுரியும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. பணியிடைப் பயிற்சியின் போதுமாதம் 500 டாலர்கள் வரை கிடைக்கும்.பயிலும் பல்கலைக்கழக வளாகத்திலேயும் பகுதிநேரப் பணியாற்றி பணம் பெற்று படிப்புச் செலவை ஈடுகட்டவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் விபரங்களுக்கு

ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் பற்றியும்; அங்கு கிடைக்கும் உதவித் தொகைகள் மற்றும் விபரங்களையும் அறிய கீழ்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்க..

1. German Academic Exchange Service Office,
176, Golf Links, New Delhi – 110003.
Internet: www.daad.de/newdelhi
E-mail: daadnd@bol.net.in

2. GErman universities of Applied Sciences,
analstrasse 33, 73728 Essilingen, Germany.
Internet: www.german – jas.de

மேலும் ஜெர்மன் மொழியை பயில விரும்புவோர் சென்னையில் உள்ள மேக்ஸ் முல்லர் பவனுடன் தொடர்பு கொள்க.

Max Mullar, 13 Khader Nawas Khan Road.
Off Nungambakkam High Road, Chennai – 600 006.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்