Home » Articles » விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!

 
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!


முத்தையா ம
Author:

விளம்பர எழுத்தாளரும் ஓவியரும் அமைக்கும் கூட்டணியே வெற்றிகரமான விளம்பர வடிவாக்கம் என்று கடந்த இதழில் எழுதியிருந்தேன். 1991 லிருந்து விளம்பர எழுத்தாளராக இருந்து வருவதால், அது குறித்த சில விஷயங்களை முதலில் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

விளம்பர எழுத்தாளர் என்கிற சொல்லில் ஆங்கில மூலம் Copy writer என்பது விளம்பர உலகத்தின் விசித்திரமான அம்சங்களில் ஒன்று. அங்கே வழங்கி வரும் பெயர்கள் விதம்விதமான அர்த்தங்களைக் கொடுப்பது தான்.

உதாரணமாக வாடிக்கையாளர் சேவை அலுவலருக்கு Account Executive என்று பெயர். இதைக் கேட்கிற யாரும், “ஓ! பி.காம. படிச்சிருக்கீங்களா” என்று தன் முதல் கேள்வி எழுப்பவார்கள். இந்தப் பொறுப்புக்கும் கணக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அதேபோல், நான் copy writer என்று சொன்னதும், பலபேர்! “ஏன்! நீங்கதான் சொந்தமாகவே எழுதுவீங்களே! என்று அங்கலாய்த்தனர் இன்னும்சிலர் “அட்டா ஜெராக்ஸ் மெஷின் எல்லாம் வந்தாச்சே! ஏன் நேரத்தை வீணடிக்கனும்” என்று வருத்தப்பட்டதும் உண்டு. Copy என்கிற சொல்லைப் பார்த்து எழுதுதல், என்றும் நகலெடுத்தல் என்றும் பிருந்து கொள்ளபட்டதால் வந்த வினை இது.

பிறகு, ‘விளம்பர எழுத்தாளர்’ என்று சொல்லிப் பார்த்தேன். “ஓ! பார்த்திருக்கோம்! ரோட்டோரமா பெரிய பெரிய பலகையிலே சாரம் கட்டி எழுதுவார்களே!” என்று கேட்க ஆரம்பித்தனர். “விளம்பர வாசகங்களை உருவாக்குபவர்” – என்பதை புரிய வைப்பதற்குள் போதும் போதுமன் ஆனதால், Copy writer என்றால் என்ன என்று யாராவது கேட்கும்போது “சிலாகித்ய வாக்ய சிருஷ்டி கர்த்தா” என்று சொல்லத் துவங்கினேன். “ஓஹோ” என்று தலையாட்டி விட்டு நகர்ந்துவிடுவார்கள்.

படைப்பபாற்றல் – வித்தியாசமான சிந்தனை – வார்த்தைகளை சிக்கனமாக செலவிடுதல் – விளம்பரப் பொருளுக்கான கருத்தாக்கத்திலிருந்து விலகாத கூர்மை – எழுத்துக்குள்ளேயே காட்சி பிம்பம் கொண்டு வரும் ஆற்றல் – இவையெல்லாம் விளம்பர எழுத்தாளருகான அடிப்படைத் தகுதிகள்.

ஒரு விளம்பரத்தை எழுதும்போது கற்பனைச் சிறகும் விரிக்க வேண்டும். கால்களாலும் நடக்க வேண்டும். ந்திக்குளேயே கோடி கிழித்துக் கொண்டு நீச்சலடிப்பது மாதிரி நுட்பமான வேலை விளம்பர, எழுத்தாளரின் வேலை.

விளம்பரம் எழுதுவது இரு கைப்படும். அச்சுக்கு எழுதுவது, காட்சிக்கு எழுதுவது. அச்சுக்கு விளம்பரம் எழதும்போது சில அடிப்படைகள் அவசியம்.

ஒன்று முதன்மை வாசகம்
Headline / Caption

அடுத்தது விளம்பரத்தகவல்

Body Copy

மூன்றாவது விளம்பர முழக்கம்

Baseline / Slogan

எல்லா விளம்பரங்களிலும், இவை அனைத்தும் இருந்தாக வேண்டுமென்று அவசியமில்லை. எழுத்தாளரின் படைப்பாற்றலுக்கேற்ப சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம். ஆனால், ஒரு விளம்பரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு இதுதான்.

இதில், ‘காட்சி பூர்வமாக யோசிப்பதுய என்பது மிகவும் முக்கியம். ஒரு தயாரிப்பின் தன்மையை விளக்குவதில் ஓவியரின் கலை வண்ணமும் எழுத்தாளரின் கை வண்ணமும் முதன்மை வாசகத்திலிருந்தே கைகோர்த்து விட வேண்டும்.

90- களின் தொடக்கத்தில், ஒரு செங்கல் நிறுவனத்திற்காக விளம்பரம் ஒன்றை ச்சி விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்தபோது உருவாக்கிறோம். ஓவியர் திரு. சுந்தரேசன் என்பவர் “ஹரப்பா மொஹஞ்சதரோ காலத்துக் கட்டிடம் ஒன்றின் புகைப்படம் உள்ளது. அதைத்தான் பயன்படுத்தப் போகிறேன்” என்றார்.

இது, விளம்பரத்திற்கான கருத்துருவாக்கத்தை முடிவு செய்தல். அந்த விளம்பரத்திற்கு நான் கொடுத்த முதன்மை வாசகம்

“செங்கற்களுக்கென்று..
ஒரு சரித்திரம் உண்டு.!”

இப்படி பொதுவான விஷயத்தில் தொடங்கி, அந்த நிறுவனத்தின் செங்கற்கள் குறித்த விபரங்களை தந்து, கடைசியில், சரித்திரம் படைக்கப் போகும் செங்கற்கள் செங்கற்கள்” என்று அந்த விளம்பரம் முடிவடைகிறது.

ஓவியருக்கும் எழுத்தாளருக்குமான ஒத்திசைவின் முக்கியத்துவம், இது போல் பல நேரங்களில் வெளிப்படும்.

பெரிய அளவில் பேக்கேஜ் செய்யும் நிறுவனங்களுக்கு கடினமான பலகைகளில் ஆணி பொருத்துவதற்கான கருவி ஒன்றினை யு.எம்.எஸ். நிறுவனம் வடிவமைத்தது.இதற்கான விளம்பரத்தை வடிவமைக்கும் போது, ஆணியடிப்பது எளிது என்கிற கருத்தை வலியுறுத்த விரும்பினோம். எனவே ஓவியத்தில், ஒரு வாழைப்பழம் – அதில் ஆணி என்று அமைத்து இனி மேல் ஆணிகளைப் பொருத்துவது இத்தனை எளிது” என்கிற வாசகத்தை முதன்மை வாசகமாக்கினோம். ராகவேந்திர விளம்பர நிறுவனத்திற்கு படைப்பாக்க ஆலோசகராயிருந்து உருவாக்கிய இந்த விளம்பரம், இன்னும் மனதில் பதிந்திருகிறது.

விளம்பரத்திற்கான மைய கருத்துரு வாக்கத்தை ஓவியர் – எழுத்தாளர் யார் வேண்டுமானாலும் ஆலோசனையாகத் தரலாம். அனைத்துத் தரபினரும் ஏற்கும் விதமாய் இருந்தால்போதும். விளம்பரம் எழுதும்போது, தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்ளும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமின்றி, எல்லோருமே ஆர்வத்தோடு படிப்பார்களா என்று பார்ப்பது அவசியம். அந்த அளவு சுவாரஸ்யமானதாக விளம்பரம் திகழ வேண்டும்.

மிக மிக சுருக்கமாக அதே நேரம் சுவையாக விவரங்களைத் தரும் விதத்தில் எழுதுவதென்பது ஆங்கில வாசகங்களை அடியொறி எழுதுவதாகவே அமையும். எனவே போதிய அளவு ஆங்கில அறிவு அவசியம்.

‘மொழி பெயர்த்து’ எழுதுவது என்பது வேறு. ஆங்கிலத்தை அடி யொற்றி எழுவது என்பது வேறு. என்ன வித்தியாசம்?

(அடுத்த இதழில்…)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்