Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

காதலிப்பது அவசியம்

அதிகாலையில் எழுந்திருக்கிறீர்களா?

எழுந்ததும் உற்சாகமாக இருக்கிறீர்களா?

உங்கள் வேலையை நினைத்து இன்றை நாளை புதிய வாய்ப்பாக்க் கருதி செயலில் இறங்குகின்றீர்களா?

பிற மனிதர்களிடம் பழகும்போதும் தொழிலை செய்யும்போதும் மகிழ்ச்சியுடன் பேசி செயல்படுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘ஆம்’ என்ற பதில்களே வருமானால் உங்களுக்கு தனிப்பட்ட ஒரு ஆற்றல் உள்ளது எனலாம். அது என்ன ஆற்றல்?

ஒருவேளை ‘இல்லை’ என்ற பதில்களுடன் “இந்தப் பொழுது ஏன் விடிந்ததோ?

இந்த வேலையை எப்பத் தான் தொலைப்பேனா?

இன்றைக்கு என்னதான் ஆகப்போகுதோ?” என்ற கேள்விகள் வருமானால், அந்த மாபெரும் ஆற்றலை இழந்த தாகப் பொருள். அது என்ன ஆற்றல்?

மகாபாரத்த்தில் ஒருமுக்கிய அம்சம்.

வில்லாற்றலில் உயர்ந்த குரு. துரோணர்.

அர்ச்சுனன் அவருடைய சீடன், அஸ்வத்தாமன் அவருடைய மகன். இருவருக்கும் ஒரே மாதிரித்தான் வில்வித்தையை கற்றுக்கொடுத்தார்.

ஆனால், துரோணரின் மகன் அஸ்வத்தாமனை விட சீடனான அர்ச்சுன்ன் திறமையாக கற்றுவிட்டான். அந்த அர்ச்சுன்னை விடவே அதிக திறமையானவனாக ஏகலைவன் வில்லாற்றலைக் கற்றான். அதுவும்துரோணர அவர்கள் இருவருக்கும் கற்றுக் கொடுத்ததை மறைந்திருந்து பார்த்தே கற்றுவிட்டான்.

அதெப்படி சாத்தியம்?

அறிஞரான எமர்சன் சொல்லுகிறார். “உலகத்திலுள்ள எல்ல வெறிகளையும் அந்தகுறிப்பிட்ட ஆற்றலால்தான் அடைய முடிந்தது.”

வெப்ஸ்டர் டிக்ஸ்னரியை 36 வருடங்களாக எழுத உதவியதும் அந்த ஆற்றல்தான்.

பத்தாயிரம் முறை தோல்வியடைந்த எடிசனை தொடர்ந்து செயல்பட வைத்து உலகத்திற்கு மின் விளக்கை கொடுக்க வைத்ததும் அந்த ஆற்றல் தான்.

கிரிமினல் குற்றவாளியாக சிறையில் தள்ளப்பட்டு 27 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்று விடுதலையாகி வெளியே வரும்போது உலகமே போற்ற்கூடிய தலைவராக நெல்சன் மண்டேலாவை உருவாக்கியது.

அதுதான் என்ன?

அதற்கு விவேகானந்தர் தெளிவாகச் சொல்கிறார்.

“உலகில் வந்து விட்டீர்கள்; அதற்கு அறிகுறியாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லாவிட்டால் உங்களுக்கும் மரங்கள், க்களுக்கும் என்ன வித்தியாசம்? அவையும் தோன்றுகின்றன, வளர்கின்றன, மறைகின்றன.

எழுந்திருங்கள், எழுந்திருங்கள்.

நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது. பகற்பொழுது நெருங்கக் கொண்டிருகிறது. அலை எழுந்துவிட்டது. அதன் பெரு வேகத்தை எதிர்த்து நிற்க வேண்டும். உங்களுடைய இலட்சியத்தை அடையும் வரை நில்லாமல் முன்னேறுங்கள். அதற்கு வேண்வடுதெல்லாம் உற்சாகம், உற்சாகமே.

நீங்கள் பெரும் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் எனப்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரப்பைக் கண்டு நடுங்காதீர்கள். வானத்தில் முழங்கும் இடியோசைக்கும் அஞ்ச வேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

உனக்குள் எல்லா சக்தியும் உள்ளது. பலசாலியே, உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகும் உன் காலடியில் அமரும்.

எல்லாவற்றுக்கும் தேவையான அந்த அடிப்படை ஆற்றல் ஆர்வமே! தணியாத ஆர்வமே!

ஒரு இளைஞன் தன் காதலியைச் சந்திக்க நினைக்கிறான். போவதற்கு நேரமில்லை.

பெற்றோர்கள் அருகிலேயே இருக்கிறார்கள்; அவர்களுக்குத் தெரிந்தால் காரியமாகாது.

வெளியில் கொட்டும் இடிமழை. மாலை நேரமாகிக் கொண்டிருந்தது.

இன்னும் ஒரு சில நிமிடங்கள் தாமதமானால் காதலி போய் விடுவாள். அந்த சமயத்தில் ஒரு நண்பன் அரக்க பறக்க ஓடி வருகிறான்.

“ஒரு அர்ச்சன்ட் மேட்டர்; நீ எப்படியாவது என்னோடு வரணும்,” கெஞ்சுகிறான்.

எல்லாவற்றையும் சமாளித்து டூவ்வீலரில் பறக்கிறான். அதுவும் பஞ்சராகிவிடுகிறது.

இருப்பினும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று காதலியை சந்தித்து விட்டான்.

இத்தனை தடைகளையும் தாண்டி எப்படி நினைத்ததை முடித்தான்..?

அதுதான் காதலின் வேகம். ஆர்வத்தில் ஒரு வகை.

அந்த ஆர்வத்தை உருவாக்குவது எப்படி? மேன்மேலும் வளர்ப்பது எப்படி?

அடிப்படையாக ஏதாவது ஒரு இலட்சியத்தை உருவாக்கி செயல்படுதல, அதை அடைய முழு நம்பிக்கையை உருவாக்குதல் சிக்கலின் போதும், பாசிடிவ்வாக செயல்படுதல்.

பிற மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்துதல். ( மனமாற பிறரை பாராட்டும்போத் நமக்கே உற்சாகம் பிறந்து விடும்.)

பிறரது உண்மையான பாராட்டுதலை ஏற்றுக் கொள்ளுதல். நம்மை பிறர் தாழ்த்தும்போதோ (அ) நம்மீது உடன்பாடு இல்லாத்தை திணிக்கும்போதோ அதை மறத்து விடுதல்.

மனம் விட்டு ‘ஹ்ஹ…. ஹா’ என சிரித்தல்.

உற்சாகமூட்டும் நூல்களை படித்தல்.

ஏதாவது ஒரு உடற்பயிற்சியை நாள் தோறும் செய்தல்.

இதில் எவையெல்லாம் இலையோ அவைகளை இன்று முதலே தொடங்கினால் ஆர்வம் பெருகிவிடும். எந்த குறிக்கோளையும் அடைற்கு அத்தகைய காதலே அவசியம்.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்