Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

எந்தவித சிக்கலும் இல்லாத வாழ்க்கையை வகுத்துக் கொண்டவர்கள் கூட, கால்போக்கில், ஒரே மாதிரியான வாழ்க்கை முறையால் அலுப்படைந்து விடுகிறார்கள். காரணம் சொல்லத் தெரியாத கனம், மனதில் படிவதற்கு மாற்றங்களேயில்லாத வாழ்க்கை கூட மறைமுகக் காரணமாய் இருக்கலாம்.

சுற்றிலும் கவனியுங்கள். தங்கள் வாழ்க்கை முறையைத் தாவரங்களும் கூட மாற்றிக் கொள்கின்றன. இலையுதிர்க்க ஒரு காலம், பூப்பூக்க ஒரு காலம். பசுமைக்கு ஒரு காலம், கனிகொடுக்க ஒரு காலம் என்று, நின்ற இடம் விட்டு நகராத தாவரங்கள் கூட மாற்றங்களை விரும்பி ஏற்கும் மகத்துவத்தைக் காணுகிறோம்.

வழக்கமான வாழ்க்கையிலிருந்து விலகாமலேயே, சின்னச் சின்ன மாற்றங்கள் வழியாக சிலிர்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மனதின் தாக்கமே மனிதனின் ஊக்கம். எனவே மனதை சின்னஞ்சிறு தேர்வுகூட சூழாமல் காக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு நாளும் உற்சாகமாயிருக்க என்ன வழி என்பதனைக் கண்டுபிடியுங்கள். அந்த வழிகளைக் கடைப்பிடியுங்கள். உங்களை சந்தோஷப்படுத்திக் கொள்ள உங்களால் முடியும். செயலாற்றலுக்கு சாவி கொடுக்கக் கூடியது மன உற்சாகம் மட்டுமே!

அதனை எந்தச் சூழலிலும் இழந்து விடாதீர்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2002

வாழ்க்கை ரொம்ப சுலமுங்க…
உறவுகள் உணர்வுகள்
அச்சம் தவிர்ந்ததே ஆனந்த வாழ்க்கை
பெற்றோர் பக்கம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்….
விளம்பர உலகம்! வாய்ப்புகள் அதிகம்!!
சிந்தனையை ஒரு மையத்தில் குவிப்பது எப்படி?
வெற்றியின் மனமே
பொதுவாச்சொல்றேன்
நிகழ்காலம்
வசீகரமான வாழ்க்கைக்கு….
மனம் விரும்பும் பணம்
கிராமம் கிராமமாய் செல்லுங்கள்… இளைஞர்களுக்கு வழிகாட்டுங்கள்…!
உள்ளத்தோடு உள்ளம்