Home » Articles » நல்ல விதைகளைத் தூவுவோம்?

 
நல்ல விதைகளைத் தூவுவோம்?


சூரியன்
Author:

நண்பர்களே!

இந்த உலகில் எல்லாம் இருக்கின்றது. நல்லதும், கெட்டதும் (Postive & Negative) கலந்துள்ளன்ன. இரவு, பகல், தெரிந்த பகுதி, தெரியாத பகுதி, வெளிப்பட்டது . வெளிப்படாத்து, வெப்பம், குளிர்ச்சி.. இப்படி இரண்டு பகுதிகளாய் இருக்கின்றன. திருவள்ளுவர் “இருவேறு உலகத்து இயற்கை” என்பார்.

இப்படி இருக்கின்ற இந்த உலகில் மனிதர்கள் மன எண்ண அலைகளுக்குத்தக்கபடி, மன நிலைக்குத் தக்கபடி கருத்துகளை,மனிதர்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஈர்த்துக் கொள்கிறார்கள்; ஈர்க்கப்படுகிறார்கள். இதை வாழ்வியல் ஈர்ப்பு – விது என்கின்றனர். அறிஞர் (“The Law of Attraction”).

நாம் “தன்னம்பிக்கை” வாசகராக மாறி இருபது சாதாரண நிகழ்ச்சி அல்ல. நம்முடைய எண்ணங்கள்.. “புதிய நல்ல முன்னேற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்வியலை இன்னும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தன்னம்பிக்கை உணர்வுகளைப் பெருகிக் கொள்ள வேண்டும்” என்று இருந்ததால், அதை நிறைவு செய்யும் விஷயங்களை ஈர்த்தோம். இந்த இதழ் நம் வசம் வந்தது.

சாதாரண விஷயங்களில் சுகங்கண்டு – வேண்டாத விஷயங்களை, பொழுது போக்கிற்காக படிக்கின்ற சாதாரண மனிதர்கள் அல்ல நாம். நாம் நேரத்தின் அருமையை உணர்ந்தவர்கள், நல்ல கருத்துக்கள் கொடுக்கும் நல்விளைவுகளைத் தெளிவாக உணர்ந்தவர்கள். ஆகவே இவ்விதழைப் படிக்கிறோம்.

அடுத்து ஒரு கேள்வி –

சினிமா, அரசியல் கலப்பற்ற இதழை – தனி மனிதர் மேம்பாடு அடைந்தால் சமுதாயம் மேம்பாடு அடையும் – என்ற இலட்சியத்தை மையமாக வைத்து இயங்கிடும் இதழை – வியாபார நோக்கமின்றி நல செய்திகளைப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிற இவ்விதழை ஏன மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடாது?

அப்படிச் செயதால் அவர்களுக்கு நாம் செய்வது மிக மிக நல்ல உதவியாகும்.

எனது பயிற்சி முகாம்களில் பயிற்சிகளில் கலந்து கொள்கிற அனைவருக்கும் “தன்னம்பிக்கை” இதழை அறிமுகப்படுத்தி வருகிறேன். எல்லா ஊர்களிலும் நான் சந்திக்கும் மனிதர்களிடம் இதுபற்றிக் கூறுகிறேன்.

இன்று ஓர் முடிவு எடுங்கள்!

முடிந்த அளவு உங்களது நண்பர்களிடம் – உறவினர்களிடம் இதுபற்றிக் கூறுங்கள். ஓர் இதழைக் கொடுத்து – அதில் உள்ள ஒருசில கருத்துக்களைச் சொல்லி படிக்கச் சொல்க! இது நல்ல விதைகளைத் தூவுகிற செயல். ஆயிரக்ணக்கான விதைகளைத் தூவி, ஒரு சில முளைத்தாலே பெரும்பலனைக் கொடுக்கும்.

தடுமாறுகிற மனத்துக்கு – வழிதேடுகிற மனத்துக்கு – சோர்வுற்ற மனத்துக்கு – நல்ல ஊக்கக் கருத்துக்கள் ஆதரவு அளிப்பதுடன் அவர்களை எழுச்சியுற வைத்துப் போரிடத் தயார் செய்யும்! தடைகளை – தோல்விகளை – பிரச்னைகளை அணுகுகிற முறையை மாற்றும்.

வாழ்க்கையைப் பற்றி பல கோணங்களில் சிந்திக்க வைத்துப் புரிய வைக்கும் “நம்மால் முடியும்” என்று விஸ்வரூபம் எடுக்க வைக்கும்.

இந்த உதவி மற்றவர்களுக்கு நாம் செய்தால் அது ஓர் மிகப்பெரும் உதவியாகும்.

இளைஞர்களிடம் நிறையச் சக்தி இருகிறது. தக்க வழிகள் காட்டப்படாததால் ஈர்த்து இலயமாக வைக்கும் இலட்சியங்கள் இல்லாததால்தான் – அந்த சக்தி வழி தவற வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இந்த இதழ் போல் தொடர்ந்த நல் நூல்களும், நல்லவர்களின் தொடர்பும் இருந்தால் மாதம் ஒவ்வொருவரும் சாதனை புரிவர்! இந்த மாதம் ஒவ்வொரு வாசகரும் ஒரு நண்பரைச் சந்தாதாரர் ஆக்கினால் –

தன்னம்பிக்கை இதழ் பிரசுரம் இரண்டு மடங்காகும். இப்படியே தொடர் நிகழ்ச்சியாய் இது ஆகுமானால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த இதழ் சென்று சேர்ந்து விடும் நாள் விரைந்து வரும்.

15 – மாதம் சந்தா ரூ. 100/- மட்டும்தானே வரும். பயனைப்பார்க்கும் போது சிறிய முதலீட்டில் மாபெரும் விளைவு!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்