எல்லாமே நூறு சதம் சரியாக இருக்க வேண்டும் என்று எண்ணம் எனக்கு இருக்கிறது. அதனால் பலமுறை தேர்வுகள் எழுதும்போது இன்னும் சரியாக படிக்கவில்லையே என்ற எண்ணத்தில் பரிட்சையே எழுதாமல் விட்டுள்ளேன்.
பல தொழில்களை செய்ய ஆசைப்பட்டிருக்கேன். ஆனால் எதிர்பார்த்த அம்சங்கள் அமையவில்லையே என்று தள்ளிப்போட்டுள்ளேன். இதற்கு மேலும் ஏதாவது செய்து தப்பாகிவிட்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் வேறு வந்துவிடுகிது. இதற்கு என்ன செய்யலாம்?
(- கே. ராஜா, முத்தூர்)
நூறு சதம் சரியாக இருக்க முயற்சிப்பது தவறல்ல. ஆனால், படிப்பில் முப்பத்தைந்து சதம் வாங்கினாலே வெற்றி என்று ஒரு குறைந்தபட்ச அளவை வைத்துள்ளார்கள். ஆகையால், படிப்பில் நூறு சதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை.
இரண்டாவது, தொழில்களைப் பொறுத்த வரையில் நன்றாக யோசித்து சரி என்று முடிவு செய்துவிட்டால், செய்யத் தொடங்கி விட வேண்டும். அதற்கான மற்ற தேவைகளை படிப்படியாக பெருக்கிக் கொள்ளலாம். பல செயல்களில் கால தாமத்த்தால், அச்செயலை செய்கின்ற மனநிலையே போய்விடும். அல்லது அதற்கான தேவையே இல்லாமல் போய்விடும்.
மூன்றாவது, எந்த செயலிலும் தவறு வருதல் சகஜமே, தவறை திருத்தி திரும்ப வராமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது. ஒரே தப்பை இரண்டாது முறையும் செயதால் அதுதான் தவறு.

July 2002















No comments
Be the first one to leave a comment.