Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

உறவுகளை வளர்க்க…

ஒரு உண்மைச் சம்பவம்.

வேலூரில் பத்மினி என்கிற ஒரு சமூக சேவகி இருந்தார். கால் ஊனமாகப் பிறந்து சேரிக்குழந்தை ஒன்றை எப்படியாவது நடக்கவைக்க முடிவு செய்தார்.

சிறந்த எலும்புநோய் மருத்துவரின் உதவியால் பல ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

படிப்படியாக முன்னேற்றம் கிட்டியது. நடந்தான், ஓடினான், பிற குழந்தைகளைப்போல் இயல்பாக விளையாடினான்.

இவ்வளவு சிரம்ப몮ட்டு, சிகிச்சையளித்த அவன் வளர்ந்து என்னவானான்?

இன்ஜினியராகவா?

டாக்டராகவா?

தொழில் அதிபராகவா?

த்த்துவ மேதையாகவா?

அதுதான் இல்லை.

மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக.

பத்மினி, ஆழ்ந்த வருத்தத்துடன் சொல்கிறார். “அவனுக்கு எப்படி நடப்பது என்பதற்காக, எத்தனையோ முயற்சிகளையும் , சிகிச்சைகளையும் செய்த நான், வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டு மென்பதில் கவனம் செலுத்தாமல் விட்டதால், இந்த நிலை ஏற்பட்டு விட்டது.”

ஒரு தந்தை மகனைப் பார்த்து, “டேய், உன்னோட வயசுல சர்ச்சில் வகுப்பிலேயே முதல் மார்க் வாங்கனாரு தெரியுமா?” என்று கேட்டார்.

உடனே மகன், “அப்பா, உங்கள வயசில சர்ச்சில் பிரதமராயிட்டாரே, அது தெரியுமா?” திருப்பி பதில் கேள்வி கேட்டான்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எப்படி தொடர்புகளை வளர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுடைய எதிர்கால நடைமுறைகள் அமையும்.

அதற்கு, சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்.

குழந்தைகளுடன் மிக இளம் வயதிலேயே மனம்விட்டு பேசுதல் நல்லது. அவர்களுக்கு மனவளர்ச்சி போதாது என்று நினைப்பது மிகவும் தவறானது.

அவர்களோடு சேர்ந்துள்ள நேர அளவு, அவர்களோடு செயல்படுகிற நேர அளவு இவ்விரண்டுமே மிக முக்கியம், அவர்களோடு சாப்பிடுதல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது உடன் அழைத்துச் செல்லுதல், சமயம் கிடைக்கும் போதெல்லாம் பேசுதல். பேசாவிட்டாலும் அவர்கள வீட்டில் படிக்கின்ற நேரங்களில் உறங்குகிற நேரங்களில் உடனருப்பதன் மூலமே அவர்களின் மன உணர்வுகளை அறிய முடியும்.

பெற்றோர்களின் குண நலன்கள், விநோத போக்குகள், உணர்ச்சி வெளிப்பாடுகளை சிறுவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். அதனால் பிள்ளைகளின் முன்பு நடந்து கொள்கிற விஷயங்களில் கவனமாக செயல்படுதல் மிகவும் அவசியம்.

பிள்ளைகளை நேசிப்பதையும், அவர்களுக்காக எல்லா நேரங்களிலும் உதவ தயாராயிருப்பதையும் உணரும்படி தொடர்புகள் அமைத்தல் நல்லது.

வார்த்தையில் சொல்வதைத் தெளிவாகவும், அதேபோல் சொன்னவாறு நடப்பவராகவும் பெற்றோர்கள் செயல்பாடுகள நல்லது. அப்போதுதான் பெற்றோர்களின் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கையும் மரியாதையும் ஏற்படும்.

பிள்ளைகளைவிட பெற்றோர்கள் அதிக அனுபவமிக்கவர்கள்தான். ஆனால், தங்களைப் பற்றி புகழ்ந்து கொள்ளாமல் அந்த அனுபவத்தை குழந்தைகளுக்காக பயன்படுத்தினால்தான், பயனளிக்கும்.

சிறியவர்களின் குறைகளை நூதனமாக சுட்டிக்காட்டிவிட்டு, பாசிடிவ் அம்சங்களை மனம்விட்டுப் பாராட்டுதல் அவர்களுக்கு நல்ல ஊக்கத்தை கொடுக்கும்.

“நான் சிறுவயதில் இப்படியெல்லாம் செயல்பட்டு வளர்ந்தேன்” என்பதுபோல் எதிர்பார்க்காமல், அவர்களுடைய நிலையில் தங்களை நிறுதி, அவர்களின் மன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளல் அவசியம்.

பசுமையான நினைவுகள் குழந்தைகளின் மனிதல் பதியுமாறு, இளமையிலேயே சில பயணங்கள் மற்றும் சில விழாக்களில் அவர்களுக்குக்குரிய பங்கினை உருவாக்குதல் நல்லது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்