Home » Articles » மனம் விரும்பும் பணம்

 
மனம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

மல்டிலெவல் மார்க்கெட்டிங் பற்றிய புதுமைத் தொடர் – VII

MLM வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?

ஹலோ! எப்படியிருக்கீங்க! Great! Fantastic ! Excellent! Beautiful! உற்சாகமாகயிருங்கள்! உங்களுக்குள்ளே உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்! என்னவென்று! என்னால் எதையும் அடையமுடியும். அதற்குத் தேவைப்படுவதைக் கற்றுக்கொண்டால் என்று! உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உங்களத வெற்றிகு உரிய திறவுகோல்களைப் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிந்து கொள்வோமா?

SINCERITY (உண்மையான பொறுப்புணர்வு)

MLM வியாபாரத்தில் உங்களுக்கு நீங்களே முதலாளி. எனவே, யாரும் உங்களுக்கு உத்திரவிட முடியாது. இது, ஒரு வகையில் சந்தேகப்படவேண்டியதுதான் என்றாலும், பலர் இதனால் பல வேலைகளைத் தள்ளிப்போட்டுவிட்டு, கடமையைச் சரிவரச் செய்யாமல், தோல்வியைத் தழுகின்றனர்.

இந்த வியாபாரத்தில் முதலீடு குறைவாக இருப்பதால் பலபேர் ஈடுபட வாய்பு இருக்கிறது. இது நல்லதுதான் என்றாலும், பலர் இதன் காரணமாக பலர் பொறுப்பின்றி, ஏனோதானோ என்று சரிவரச் செய்வதில்லை. இறுதியில், அவரால் முடியவிலை என ஒப்புக்கொள்ள மனமின்றி வீண் பழியை நிறுவனத்தின் மீது போட்டு விடுகின்றனர். MLM வியாபாரத்தில் வெற்றியும், தோல்வியும், அவரவர் கையில்தான் உள்ளது.

வாழ்க்கை நம் கைகளிலே! என்ற நினைவுடன், செய்வன திருந்தச் செய்! என்பதற்கேற்ப முழு ஈடுபாட்டுடன் உங்களுடைய நேரத்தை எந்த அளவு ஒதுக்க முடியுமோ, அவ்வளவு அதிகம் ஓரிரு வருடங்கள் நிறைய கற்றுக்கொண்டு, குறைவாக, தேவையானதை, தைரியமாகப் பேசி இதில் ஈடுபடுங்கள்.

இவற்றிலிருந்து என்ன புரிகிறது. நிர்பந்தங்கள் ஏற்படும் பொழுது நாம் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம். அதனால் வெற்றி பெறுகிறோம். நமக்கு சுதந்திரம் தரும்போது பொறுப்புணர்வின்றி செயல்படுகிறோம். இதனால் தோல்வி அடைகிறோம். சரிதானே?

SINCERITY – (பொறுப்புணர்வு)
SELF USE- (சொந்த உபயோகம்)
SALES – (விற்பனை)
SACRIFICE- (தியாக உணர்வு)
SPONCERING- (வாய்ப்பளித்தல்)
SERIVCE – (சேவை)

பொறுப்புணர்வுடன் செயல்பட ஒவ்வொருவரும் தன்னைத்தானே சுய பரிசோதனை (Self Analysis) செய்து கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய காரியத்திற்காக மனம், சூழ்நிலை, சுற்றம், ஆகியவற்றில் சில கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாட்டுடன் செய்யும் எந்த ஒரு கடமையும் நிச்சயம் உங்களுக்கு கண்ணியமான வெற்றியைத் தேடித்தரும்.

நிலை பொறுப்பு
1 ஒரு மாணவராக நன்றாகப் படிக்க வேண்டும்
2 ஒரு பணியாளராக அவரது பணியில் சரியாக இருக்க வேண்டும்
3 நிர்வாக இயக்குநராக நிறுவனம் வளர்ச்சி பெறுவதில்
4 MLM ஆக அவரது தொகுதி வளர்ச்சியில்
5 போக்குவரத்து மந்திரியாக தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறை வளர்ச்சியில்
6 மத்திய தொழில்துறை மந்திரியாக இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சியில்

பாருங்கள் மாணவனில் இருந்து மத்திய அமைச்சர் வரை பொறுப்பு, அதகரிக அதிகரிக்கத்தான் அவர்களும் வளர்ச்சி பெற்று வெற்றியாளராக முடிகிறது.

இதே போல நீங்களாகவே உங்களது MLM வியாபாரத்தில் விற்பனையில், குழு வளர்ச்சியில் குழு விற்பனையில், என அனைத்திற்கும் பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

எந்த அளவிற்கு அதிகம் பொறுப்பை எடுத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு வியாபாரத்தில் / வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர்ந்த நிலையை அடையலாம்.

MLM வியாபாரத்தில், ஈடுபடும் விற்பனையாளர்களின் பொறுப்புகள் என்ன? அவர்களை வழி நடத்தும் சாதனையாளர்களின் பொறுப்புகள் என்ன எனத் தெரிந்து கொள்ளலாம்.

விற்பனையாளர்களின் உண்மையான பொறுப்புகள்

1. சாதனையாளரின் ஆலோசனைகளை அப்படியே பின்றபற்ற வேண்டும்.

2. தன்னார்வத்துடன் ஒவ்வொரு செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

3. கற்றுக் கொள்; கடைப்பிடி; கற்றுக்கொடு – என செயல்படவேண்டும்.

4. வெற்றி / தோல்வி இரு நிலைகளுக்கும் மனதளவில் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

5. சொல்வதை மட்டும் செய்து, சொல்லாததை கண்டிப்பாக செய்யாமல் இருக்க வேண்டும்.

சாதனையாளரின் உண்மையான பொறுப்புகள்

எந்த ஒரு MLM வியாபார நிறுவனமும், எந்த மக்களிடமும் வியாபார திட்டத்தை விளக்கி அவர்களை இணைப்பதில்லை. ஏதோ ஒரு சாதனயாளரின் பேச்சுக்களை நம்பி, அவரது வாக்குறுதிகளை நம்பித்தான் ஒவ்வொருவரும் MLM வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே பொறுப்புடன் செயல்படும் விற்பனையாளரை வெற்றியாளராக்க வேண்டிய பொறுப்பு சாதனையாளருக்கு உள்ளது.

அவர் மட்டும் சாதித்தால் போதாது. அவரால் சாதனையாளர்கள் உருவாகப்பட்டால்தான் அவரது செயல்பாடுகளுக்கு முழு வெற்றி கிடைக்கும். அவரது வெற்றியும் நிலைக்கும்.

1. தாய் தனது குழந்தையை வளர்ப்பது போல், பருவத்திற்கு ஏற்ப பயிற்சிகள் (உம்: உட்கார வைத்தல், நடக்க வைத்தல், பேச வைத்தல்,பாடுதல், ஓடுதல், ஆடுதல் ) கொடுத்து, தலைசிறந்தவர்களாக ஆக்குவது போல, சாதனையாளர் அவரை நம்பினோரை உருவாக்க வேண்டும்.

2. தந்தை தனது குழந்தையை தக்க கல்வி, உடை, தகுந்த வேலை என சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவனாக ஆக்குவது போல, தேவைப்படும்பொழுது கண்டித்து, கண்காணித்து, கவனித்து தனது கீழ்நிலை விற்பனையாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

3. இந்த MLM வியாபாரத்திற்குத் தேவையான உபகரணங்கள் (tools) சாதனையாளர்கள் மூலமாகத்தான் பெற முடியும். யாருக்கும் இலவசமாக வழங்கக்கூடாது. இலாப நோக்கதுடனும் அதிக பணமும் பெறக்கூடாது.

4. MLM வியாபாரம் வாழ்க்கை (Life) முறை மாற்றுவதற்காக செய்வது, இன்றைய சாப்பாட்டிற்காக செய்வது அல்ல. குழுவினரின் விற்பனை அளவு வளர்ந்து பணம் வர வேண்டுமா? Tools வியாபாரத்தில் பணம் வர வேண்டுமா? என அனைத்து சாதனையாளர்களும் முடிவெடுக வேண்டிய மிக முக்கியமான விஷயம்.

5. குழுவினரின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தன்னைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் உள்ள சாதனையாளர் வெற்றி மேல் வெற்றி பெறுவார்.

இந்த MLM வியாபாரத்தில் ஈடுபடும் போதே உண்மையான பொறுப்புணர்வுடன் (Sincerity) ஈடுபட வேண்டும். என முடிவெடுத்து விட்டீர்கள். முதல் வெற்றிச் சாவியை தடைக் கதவை திறப்பதற்கான இரண்டாவது வெற்றிச்சாவையை பற்றி (Sacrifice – தியாகம் ) பார்ப்போமே!

SACRIFICE (தியாகம்)

வெற்றிக்குத் தேவையான தியாகங்களை, மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனை மக்கள் அவர்களாகவே தலைவராக்கி விடுவார்கள். எனவே வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவரும் தியாக உணர்வு உடையவராக இருக்க வேண்டும். இந்த MLM வியாபாரத்தில் செய்யவேண்டிய தியாகங்கள் பற்றி பார்ப்போம்.

1. MLM வியாபாரத்தில் ஈடுபடும் முன்னரே கைவிடுங்கள் சுயநலத்தை, ஈடுபட்டவுடன் கை விடுங்கள் பொழுதைப்போக்கும் நிகழ்ச்சிகளை.

2. உங்கள் நம்பி இணைபவர்களை வழி நடத்திச் செல்லும் பொறுப்புள்ளதால் அவர்களது சௌகரியமான நேரத்திற்கு நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

3. நாம் இது வரை வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்த நிகழ்ச்சிகளை (கல்யாணம், கச்சேரி, சினிமா, T.V.) குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திப்போட வேண்டும்.

ஏன் இதுபோன்ற தியாகங்கள் எல்லாம் இந்த வியாபாரத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது? அருமையான சிந்தனைக்குரிய கேள்வி.

நீங்கள் முடிவெடுத்தால் பலரது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முடியும். பலரை மாற்ற புறப்படும் நீங்கள், முதலில் அதற்குத் தக்கவராக மாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்குத்தான்.

நாலு பேருக்கு நன்மை செய்து நமக்கும் நன்மை தேடிக்கொள்ளும் அற்புதமான, புனிதமான த்துவம் உள்ள இந்த வியாபாரத்தில், நீங்களும் ஓர் அங்கமாகத் திகழ வேண்டுமெனில், முதலில் நீங்கள் தங்கமாக வேண்டும். பிறகு தரணியெல்லாம் தானாகவே தங்கள் புகழ்பாடும்.

சாதனையாளராக இருப்பவர் செய்ய வேண்டிய தியாகங்கள்

ஒருவரின் கீழ் ஒருவராக, அடுக்கு முறையில் இணைந்து செயல்படும் அமைப்புடையதான இந்த வியாபாரத்தில், நமக்குக் கீழே யார் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்களோ அவரைத் தேடிச்சென்று சேவை செய்யும் பொழுது வெற்றியும் தேடி வரும்.

தினசரி அவரவர் கீழ்நிலை வினியோகஸ்தர்களுடன் தவறாது, தானாக தொடர்பு கொள்ள வேண்டும். இந்த முறை தகவல் பறிமாற்றத்தால், பல தகவல்கள் எளிதாக குழுவினர் அனைவருகும் போய்ச் சேரும். பல கருத்து வேறுபாடுகள் காணாமல் போய்விடும்.

உங்கள் ஒருவரது சூழ்நிலையும் மாறுபட்டிருக்கும். எனவே, ஒவ்வொருவரும் அவர்கள் இந்த வியாபாரத்திற்கு ஒதுக்கும் நேரத்தைப் பொறுத்து, எத்தனை நபர்களுக்கு, வாய்ப்பளிப்பது என முடிவெடுங்கள். வாய்ப்பளிப்பது முக்கியமல்ல. முன்னேற தயாராக இருப்பவர்களை வெற்றியாளர்களாக வேண்டியது மிக முக்கியம்.

உண்மையான பொறுப்புணர்வுடன், தியாக உணர்வுடனும் இந்த வியாபாரத்தில் இணைந்தாகிவிட்டது. இரண்டு வெற்றிக் கதவுகளை திறந்து உள்ளே வந்துவிட்ட தங்களுக்கு வெற்றி இன்னும் கொஞ்ச தூரம்தான். இனி தெரிந்து கொள்வோம் சொந்த உபயோகத்தின் பயன்களையும், பலன்களையும்.

SELF USE (சொந்த உபயோகம்)

MLM வியாபாரத்தில் பல்வேறு நிறுவனங்கள் பலவிதமான பொருள்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பான சில பொருள்களை அதற்கு உரியவருகு வழங்கும்போது அவரது சொந்த உபயோகத்தின் மூலம் பலன் (Result) கிடைத்து அதன் பிறகே அந்தப் பொருள் பிரபலம் அடைகிறது.

அனைவருக்கும், பயன்படும் அத்தியாவசிய பொருள்களை ஒவ்வொருவராக பயன்படுத்தி பலனை வெளியே செல்லும் போது அந்தப் பொருளில் விற்பனை விரைவில் வெற்றி பெறுகிறது. எப்படிப் பார்த்தாலும் யாராவது ஒருவர் சொந்த உபயோகம் செய்தால் தான் விற்பனையே நடக்கும்.

புதிதாக அறிமுகப்படுகிற பொருள்களை மக்களிடம் எடுத்துக்கூற தனியாக பயிற்சி ஏதும் பெறுவதை விட, சொந்த உபயோகமே சிறப்பான பயிற்சியாகும்.

உதாரணமாக மாதம் ரூ. 500/ – க்குரிய பொருள்களை ஒவ்வொரு விற்பனையாளரும் சொந்தமாக தமது வீட்டிற்கு பயன்படுத்தி வருகிறார் எனில் இதே முறையில் குழு வளர்ச்சி அடைந்து வரும்பொழுது,

குழு விற்பனையாளர்கள் x சொந்த உபயோகம் = விற்பனை அளவு

100 X 500 = 50,000
500 X 500 = 2,50,000
1000 X 500 = 5,00,000

என வியக்கும் வகையில் விற்பனை அளவ உயர்ந்து அவரவர் திறமைக்கேற்ப வருமானமும் கிடைக்கும்.

எந்த நிறுவனம் அதிகமான பொருள்களை, அத்யாவசியமான பொருள்களை MLM வியாபார முறையில் மட்டும் அறிமுகப்படுத்துகிறதோ, அந்த நிறுவனத்தில் இணைந்து குழுவை வளர்க்கும்பொழுது, விற்பனையாளர்களின் சொந்த உபயோகப் பொருள்களின் மதிப்பு உயர, அதிக வருமானமும் கிடைக்கும்.

நிச்சயம் நமது விற்பனையாளர்கள் சொந்த உபயோகம் செய்வார்கள், என்ற நம்பிக்கையில்தான் MLM நிறுவனம் இயங்கி வருகிறது.

மக்கள் அனைவரும் உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் ஒவ்வொரு விற்பனையாளரும், அவர் உபயோகிக்காமல் இருந்தால், சொந்தமாக ஓட்டல் நடத்தி வருபவர், அவரது பசிக்கு, ருசிக்கு அடுத்த ஓட்டலில் உணவருந்துவதுபோலத்தான்.

எந்த MLM நிறுவனும் சந்தேகப்பட்டு தனது நிறுவன விற்பனையாளரகள் சொந்த உபயோகம் செய்கிறார்களா என சோதிப்பதற்கு வழியில்லை.

இந்த MLM வியாபாரத்தில் இணையும் முன்னர் பல்வேறு நிறுவனத் தயாரிப்புகளை உபயோகப்படுத்தி இருக்கலாம். தவறில்லை. ஆனால் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டபின் ஒவ்வொரு விற்பனையாளரும் சொந்தமாக உபயோகப்படுத்துவது தமது நிறுவன தயாரிப்புகளாக மட்டும் இருக்கட்டும்.

Ok friends. இனி நீங்கள் சொந்த உபயோகம் செய்வீர்கள். வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன், பாதி தூரம் வந்துவிட்ட நாம், பொக்கிஷத்தை அடைய செய்ய வேண்டிய விற்பனை (Salses) , வாய்ப்பளித்தல் (Sponsoring), சேவை (Servicing) பற்றி தொடர்ந்து கற்றுக் கொள்ளலாமா?

இந்தியா சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் 15ல் தானே, தாங்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம்பெற ஆகஸ்ட் மாத்தில் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம், சிகரங்களைத் தொடுவோம்.

– வழிகாட்டுதல் தொடரும்.

இணைந்த கைகள் எதையும் சாதிக்கும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2002

வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க!
நல்ல விதைகளைத் தூவுவோம்?
மனசுவிட்டுப் பேசுங்க
பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே…!
உறவுகள் உணர்வுகள்
ஆக்க மனப்பான்மையே அரும்பெருஞ்செல்வம்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்…
வாணவராயர் சிந்தனைகள்
மனம் விரும்பும் பணம்
அனுபவமில்லாதவர் அப்துல்கலாம்
வெற்றியின் மனமே
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
பொதுவாச் சொல்றேன்
உள்ளத்தோடு உள்ளம்