Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

எல்லைத் தகராறு மறுபடியும் தலைகாட்டுவது. நாட்டிலே மட்டுமில்லே, வீட்டிலே, அலுவலகத்திலே, தனி மனிதர்கள் மத்தியிலே, எப்பவும் எல்லைத் தகராறு இருந்துகிட்டே இருக்கு. நான் பொதுவாச் சொல்றேன், தன்னுடைய எல்லை என்னன்னு தெரியாத வரைக்கும் போராட்டம் இருந்து கிட்டே இருக்கும்.

பலபேர் சேர்ந்து வாழற பொதுவான சமூகத்திலே தனி மனிதர்களுக்குள் ஏற்படற உறவுக்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு.

கணவன் – மனைவின்னே வைச்சிக்குங்க! ஒரு எல்லைக்கு மேலே தன் உரிமைகளைக் கணவன் பறிக்க நினைச்சா, மனைவி நேரா கோர்டுக்குப் போறது நடக்குது. நான் பொதுவாச் சொல்றேன், எவ்வளவு நெருக்கமா இருந்தாலும் அவங்க அவங்களுக்குன்னு இருக்கத்தான் செய்யும்.

இரண்டுபேர் மத்தியிலே இருக்கிற நெருக்கத்துக்கு அடையாளம், அடுத்தவங்களுக்கு தர்ற சுதந்திரம்தானே தவிர அடுத்தவங்க மேலான ஆக்கிரமிப்பு இல்லை. நான் பொதுவாச் சொல்றேன், அளவு கடந்து உரிமைகள் எடுக்கிறபோது, அதுக்கு ஆங்கிலத்தில் “பொஸ்ஸிவ்னஸ்” அப்படின்னு பேரு. இன்னொருவரைத் தன்னுடைய உடைமையாகக் கருதத் தொடங்கினால் உறவிலே விரிசல் விழத் தொடங்கும்.

இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒவ்வொருதனி மனிதனுக்கும் “தான் சுதந்திரமானவன்” அப்படங்கற எண்ணம் உண்டு. அந்த சுதந்திரத்திற்கு எங்கே ஆபத்து இல்லையோ அங்கேதான் பாதுகாப்பை உணர முடியும்.

நான் பொதுவாச் சொல்றேன், கணவன், மனைவி, பெற்றோர்,குழந்தைகள், அலுவலர், பணியாளர் எந்த உறவிலேயும் எல்லைக்கோடு அடிப்படை உரிமைகளிலே இருக்கு. அந்தக் கோடு தாண்டி, யார் வந்தாலும் அதற்குப் பேர் அத்துமீறல்தான்.

கடன்சுமை தாங்காம, குழந்தைகளையும் கொன்னுட்டு செத்துப்போகிற பெற்றோர்களைப் பார்க்கிறோம். குழந்தைகள் மீதான அக்கறைன்னு நினைச்சு அவங்க அப்படி செய்தாலும், அடிப்படையில் அது அத்துமீறல்தானே!

அவ்வளவு ஏன்? நம்முடைய கௌரவத்துக்காக, குழைந்தைகளுக்கு விருப்பமில்லாத கல்வித் துறையிலே கொண்டுபோய் சேர்ப்பதா வைச்சுக்குங்க. அதுப்பேர்கூட அத்துமீறல்தானே!

நான் பொதுவாச் சொல்றேன், “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே’ அப்படீன்னு சொல்வாங்க! நாம் இருக்க வேண்டிய இடத்திலே இல்லாத போதுதான் நடக்கக்கூடாதது எல்லாமே நடக்கத் தொடங்கும் இல்லையா’

யாருக்கும் உண்டு
எல்லைக் கோடுகள்
மீறும் போதெல்லாம்
விளையும் கேடுகள்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2002

எதிலில்லை…பாடம்….
நமது அதிர்ஷ்ட தேவதை
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
உறவுகள் உணர்வுகள்
ஓ… அன்றில் பறவைகளே!
தயாராகுக! வெல்க!
தோல்வியின் மரணம்….!
சிந்தனைத்துளி
வெற்றியின் மனமே
மணம் விரும்பும் பணம்
ஆன்மிக சூப்பர் ஸ்டார் வாணவராயர் சிந்தனைகள்
பொதுவாச் சொல்றேன்
பெற்றோர் பக்கம்
உள்ளத்தோடு உள்ளம்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றிப் படிக்கட்டுக்கள்