Home » Articles » வாழ்க்கை வாழ்வதற்கே!

 
வாழ்க்கை வாழ்வதற்கே!


வேங்கை மார்பனார்
Author:

அண்மையில் ஒரு புத்தக விற்பனையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். ‘இப்போது விற்பனையாகும் புத்தக்களில் அதிகமானவை சுயமுன்னேற்றம் மற்றும் ஜோதிடம் பற்றிய புத்தகங்கள்தான்’ என்று.

அதாவது, பெரும்பாலானவர்கள் தங்களது எதிர்கால நிலையைப் பற்றி அக்கறை கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. அதாவது எந்த முறையிலாவது முன்னேற வேண்டும் என பலர் கருதுவதாக இந்த செய்தி அறிவிக்கிறது.

பெரும்பாலான சுய முன்னேற்ற நூல்கள் படிக்கும்போது மிக சுவராசியமான ஒன்றாகவே இருக்கும். அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும், கதைகளும், பழமொழிகளும், பிறர் உபயோகித்த சமயோசித வழிகளும் படிக்கும்போது பெரும் உற்சாகத்தை ஊட்டுகின்றன. அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை வரலாறுகள் நம்மை நம்பிக்கையூட்டுகிறது.

ஆயினும் புத்தகத்தை படித்துமுடித்துவிட்டு நிஜ உலகிற்கு வரும்போது அவற்றை நம்மால், உபயோகப்படுத்த முடிவதில்லை. நமது வாழ்க்கை சக்கரம் எப்போதும்போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. நமது மனதை நடைமுறையில் வெற்றிக்கான பாதையில் எவ்வாறு இயக்கலாம் என்பதை எளிமையான முறையில் புரியும்படி கற்றுக்கொடுத்து விட்டால் அனைவரும் வெற்றி பெறுவது என்பது மிக எளிது.

அதை ஒரு சின்ன கதையின் மூலம் விளக்கிக் கொள்ளலாம். ஒரு பாலைவனத்தின் ஒரு பகுதியில் காலையில் சென்று தூரத்தில் உள்ள மலையை பார்த்துக்கொண்டு நின்றால் கீழே விழும் அவனது நிழலுக்கு அடியில் ஒருபெரிய பொக்கிஷம் இருக்கும் என ஒருவன் ஒரு ஏட்டு சுவடியில் படித்தான்.

உடனே, அவன் காலையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தான்.மணலின் மீது அவனது நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது.பொக்கிஷத்தை பெற அவள் மணலை தோண்ட ஆரம்பித்தான். அவன் தோண்டத் தோண்ட சூரியன் மேலெழுந்து கொண்டிருந்தது. அவனது நிழல் சுருங்கிக்கொண்டே இருந்தது. அவன் தோண்டிக்கொண்டே இருந்தான்.

நண்பகலில் அவன் நிழல் அவன் காலடிக்குள் நுழைந்து கொண்டது. நிழலே இல்லை. அன் ஏமாற்றத்தால் அழுது புலம்பினான். அப்போது அவ்வழியே வந்த ஒரு பெரியவன் அவனிடம் விஷயத்தைக் கேட்டு விட்டு சிரித்தபடி இப்போதுதான் உன் நிழல் பொக்கிஷம் இருக்கும் சரியான இடதைக் காண்பிக்கிறது. அது வேறெங்கும் இல்லை. அது உனக்குள்தான் இருக்கிறது என்றார்.

நமக்கு புதையலோ, அதிர்ஷ்ட தேவதையின் முன் நம்முள் உள்ள புதையைத் தோண்டி எடுத்தாலே பெரிய வெற்றிகளைப் பெற முடியும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2002

கேள்வி – பதில்
வெளிநாடு சென்று படிக்க உரிய வழிகள்
“சிந்தனைச்சிற்பி” சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
"சிந்தனைச்சிற்பி" சி.கொ.தி.மு.வின் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்
ஓ அன்றில் பறவைகளே!
பொதுவாச் சொல்றேன்
கொட்டிக்கிடக்கிறதா வேலை வாய்ப்பு?
பெற்றோர் பக்கம்
வாழ்க்கை வாழ்வதற்கே!
சாதிக்கச் செயல்புரி
சத்குரு பதில்கள்
சிந்தனைத்துளி
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்…..
நம்பிக்கையும் நானும்
உறவுகள் உணர்வுகள்
மணம் விரும்பும் பணம்
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்